`துரோகம் செய்த சி.வி.சண்முகத்தை கட்சியை விட்டு தூக்குங்க!' - விழுப்புரம் அதிமுகவ...
குழந்தை ரசிகர்கள் அதிகம்னால, பேயை டிரெண்ட் ஆக்கிட்டாங்க! - ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4' பரபர அப்டேட்
ராகவா லாரன்ஸின் ஹிட் பாகங்களான 'காஞ்சனா' சீரீஸ், நாலாவது பாகத்துடன் நிறைவடைகிறது என்ற தகவல் பரவி வருகிறது. இப்போது அவர் இயக்கி வரும் `காஞ்சனா 4' படம் 'முனி' பட வரிசையில் 5வது பாகமாகும். இதற்கிடையே 'பென்ஸ்' படத்திலும் நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் 'காஞ்சனா 4' என்ற போஸ்டர் வெளியாகி இருந்தது, இது குறித்தும் படப்பிடிப்பு அப்டேட்கள் குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி..

லாரன்ஸின் திரைப்பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் 'முனி'. அதன் வெற்றிக்கு பின் பேய் கதையை கையில் எடுத்தார் 'முனி 2'விற்கு 'காஞ்சனா" என டைட்டில் வைத்தனர். இப்போது 'காஞ்சனா 4' ஆக உருவாகி வருகிறது.
இது குறித்து லாரன்ஸ் கூட, ''பேய் ட்ரெண்டை உருவாக்கணும்னு நான் எதுவும் பண்ணலை. எனக்கு குழந்தை ரசிகர்கள் அதிகம்னால, பேயை டிரெண்ட் ஆக்கிட்டாங்க. தவிர எங்க டீமோட சின்ஸியரான வொர்க் ஒரு ட்ரெண்டை உருவாக்கிருச்சு.'' எனச் சொல்லும் லாரன்ஸின் 'காஞ்சனா"வில் பூஜா ஹெக்டே ஹீரோயின். இன்னொரு ஹீரோயினாக நோரா பதேஹி நடிக்கிறார். மற்றும் கோவை சரளா, தேவதர்ஷினி,ஸ்ரீமன் ஆனந்த்ராஜ், கிங்ஸ்லி, சாய்தீனா, கருடா ராம் என பலரும் நடிக்கின்றனர்.
படத்திற்கு கிச்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் வெளியான பட போஸ்டர் ரசிகர்களால் உருவாக்கப்பட்டது என்றும் அது அதிகாரப்பூர்வமானது அல்ல என்றும் லாரன்ஸ் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

'காஞ்சனா 4' படப்பிடிப்பு வேகம் எடுத்து வருகிறது. படத்தில் வித்தியாசமான ஒரு தோற்றத்தில் ராகவா லாரன்ஸ் வருகிறார். அதன் மேக்கப்பிற்கே அவர் இரண்டு மணி நேரம் செலவழிக்கிறார் என்றும், அந்த தோற்றம் படத்தில் பேசப்படும் என்றும் சொல்கிறார்கள். ஹீரோயின்களாக 'பாகுபலி' மனோகரா பாடலுக்கு ஆடிய நோரா பதேஹி. பூஜா ஹெக்டே இருந்தாலும் இன்னொரு ஹீரோயினும் படத்தில் இணைகிறார் என்றும் வெகு விரைவில் அவர் யாரென அறிவிக்க உள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜின் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்" படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் 'பென்ஸ்' படத்தில் நடிக்க ரெடியானார். சில காரணங்களால் அதன் படப்பிடிப்பு வேகம் எடுக்கவில்லை. இதனால் அதன் தேதிகளை 'புல்லட் ' படத்திற்கு கொடுத்தார் லாரன்ஸ். அவரது தம்பி எல்வின் நாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். 'புல்லட்' படத்தை முடித்துக் கொடுத்துவிட்டார். இப்போது அதன் ரிலீஸ் வேலைகள் வேகம் எடுத்துள்ளன என்கின்றனர்.
இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் தயாரித்து வரும் 'பென்ஸ்' படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. லாரன்ஸுடன் நிவின்பாலியும் இருக்கிறார். பாண்டிச்சேரி, சென்னையில் அதன் படப்பிடிப்புகள் சில நாள்கள் நடந்திருக்கிறது. 'ரெமோ' பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கு முன்னதாக 'காஞ்சனா 4' வெளியாகிறது.



















