செய்திகள் :

"இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா? அதிமுக.!”- தவெகவை சாடும் ஸ்டாலின்

post image

தமிழக வெற்றிக் கழகம் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான 'நம்பிக்கை வாக்கெடுப்பு' இன்று (மே. 13) நடைபெற்றது.

இதில் 144 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று முதல்வர் விஜய்யின் தவெக பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறது.

குறிப்பாக சி.வி சண்முகம் தலைமையிலான அதிமுக குழு தவெவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இதனை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்திருக்கிறார்.

முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வர் ஜோசப் விஜய்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், " தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு.

அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்! ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது?

சி.வி சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ
சி.வி சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ

Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க. பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.

“உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு. மாண்புமிகு முதல்வர் அவர்களே, உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க.

அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க. எங்களைப் பொறுத்தவரை, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!" என்றிருக்கிறார்.

`6 அமைச்சர் பதவி; 10 வாரியப் பொறுப்பு; ஆசைகாட்டிய தவெக... அதிமுக-வுக்கு துரோகம்!' - இபிஎஸ் சாடல்

இன்று தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 234 சட்டமன்ற உறுப்பினர்களில், திமுக வெளிநடப்பு மற்றும் இதர காரணங்களால் 63 பேர் பங்கேற... மேலும் பார்க்க

கலைக்கப்பட்ட அரசுகள்; சிறைக்குச் சென்ற முதல்வர்... தமிழ்நாடு சட்டசபையின் கடந்தகால ஹைலைட்ஸ்!

பதினேழாவது சட்டசபையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தவெக, இன்று தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இந்தச் சூழலில் கடந்த பதினாறு சட்டமன்ற நிகழ்வுகளின்போது நடந்த சில முக்கிய சம்பவங்களைத் திரும்பிப் பா... மேலும் பார்க்க

தவெக எம்.எல்.ஏ வழக்கு: `இது அடாவடித்தனம்!' - சென்னை உயர் நீதிமன்றத்தைக் கண்டித்த உச்ச நீதிமன்றம்

தமிழக அரசியலில் ஒரு ஓட்டு வித்தியாசம் ஏற்படுத்திய புயல் இன்று டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கரை கடந்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய உச்ச நீதிமன்ற... மேலும் பார்க்க

சட்டசபையில் `ராஜகுரு' விவகாரம் : ரதன் பண்டிட் நியமனத்தை திரும்ப பெற்ற தவெக அரசு.!

தவெக அரசு மீது நம்பிக்கைக் கோரும் தீர்மானம் சட்டமன்றத்தில் நடைபெற்றது. அப்போது சட்டசபையில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளரும், எம்எல்ஏ-வுமான பிரேமலதா விஜயகாந்த், "அரசு குடும்பத்தில் இருந்து நான் வந்தவன் இ... மேலும் பார்க்க

விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏக்கள் யார் யார் தெரியுமா? - சட்டமன்றத்தில் பிளவுப்பட்ட அதிமுக!

முதல்வர் விஜய்யின் தவெக அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்டிருந்தது. அதில், தவெக அரசுக்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏக்களும் எதிராக 22 எம்.எல்.ஏக்களும் நடுநிலையாக 5 எம்.எல்.ஏக்கள... மேலும் பார்க்க

பெரும்பான்மை நிரூபித்த தவெக: "ஆம் இது சிறுபான்மை அரசு தான்!" - முதல்வர் விஜய் பேச்சு

தமிழக வெற்றிக் கழகம் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான 'நம்பிக்கை வாக்கெடுப்பு' இன்று (மே. 13) நடைபெற்றது. இதில் 144 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று முதல்வர் விஜய்யின் தவெக பெரும்பான்மையை நிரூப... மேலும் பார்க்க