செய்திகள் :

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

post image

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், இவானா என்ற ஒரு வயதுடைய பெண் குழந்தை இருந்தது. ​

நேற்று அபிஜித் வழக்கம்போல் பணிக்குச் சென்றிருந்தார். மாலை சுமார் 3:30 மணியளவில் வீட்டில் கிறிஸ்டி, குழந்தை இவானா மற்றும் அபிஜித்தின் உறவினர்களான நேசம்மா, ஜெசிந்தா ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது கிறிஸ்டியின் நடவடிக்கையில் அசாதாரணமான மாற்றத்தைக் கண்டு சந்தேகமடைந்த உறவினர்கள், அவரது அறைக்குச் சென்று பார்த்துள்ளனர். ​

அங்கு குழந்தை இவானா ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அவர்கள் அலறினர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக குழந்தையை மீட்டு மலையின்கீழ் தாலுகா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனாலும் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை.

கணவர் அபிஜித் மற்றும் குழந்தையுடன் கிறிஸ்டி
கணவர் அபிஜித் மற்றும் குழந்தையுடன் கிறிஸ்டி

குழந்தையை பெற்ற தாயே கொலைசெய்த ​சம்பவம் தொடர்பாக மலையின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கணவன் - மனைவி இடையே நிலவி வந்த தொடர் குடும்பப் பிரச்னையே இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. ​

மேலும், தங்களின் 4-வது திருமண நாளான நேற்று குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்ததாக கிறிஸ்டி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்கொலை செய்துகொள்வதற்காக அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக அவர் தெரிவித்ததையடுத்து, போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்குப்பின் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட கிறிஸ்டி
கைதுசெய்யப்பட்ட கிறிஸ்டி

கணவன் தன்னை தனிமைப்படுத்தியதாகவும். கணவனின் வீட்டில் ஏற்பட்ட தனிமையே கொலைக்குக் காரணம் என்று கிறிஸ்டி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், கணவரின் குடும்பத்தினர் தன்னைச் சந்தேகக் கண்ணுடன் பார்த்ததாகவும், தனது சொந்த வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கவில்லை என்றும், தனக்கு விருப்பமான உணவைச் சமைக்கக் கூட அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

தான் இறந்துவிட்டால் குழந்தை தனிமையாகிவிடும் என்று கருதியே, குழந்தையை முதலில் கொன்றுவிட்டு பிறகு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்ததாக கிறிஸ்டி வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க

சென்னை: பள்ளி மாணவிக்கு `ஐ லவ் யூ' சொன்ன ஆசிரியர் - போக்சோவில் கைதான பின்னணி!

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில், 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி, இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வந்தார். அவரின் இன்ஸ்டாவுக்கு தொடர்ந்து காதல் மெசேஜ்கள் வந்து கொண்ட... மேலும் பார்க்க

வேலூர் வியாபாரியிடம் `நிறம் மாறும் கற்கள்’ வழிப்பறி - ஒருவர் கைது; 2 பேருக்கு வலை!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள பல்லலகுப்பம் கிராமம் ராமர் கோயில் தெருவில் வசிப்பவர் ஆனந்தகுமார் (வயது 58). இவரின் மனைவி ஷைலா, ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர். இந்த நிலையில், ஆனந்தகுமார் தன்னிடம... மேலும் பார்க்க