செய்திகள் :

வேலூர் வியாபாரியிடம் `நிறம் மாறும் கற்கள்’ வழிப்பறி - ஒருவர் கைது; 2 பேருக்கு வலை!

post image

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள பல்லலகுப்பம் கிராமம் ராமர் கோயில் தெருவில் வசிப்பவர் ஆனந்தகுமார் (வயது 58). இவரின் மனைவி ஷைலா, ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர்.

இந்த நிலையில், ஆனந்தகுமார் தன்னிடம் ``பட்டைத் தீட்டப்படாத இயற்கையான 7 கற்கள் இருக்கின்றன. இது ஜோதிட பலன்கள் நிறைந்த `அலெக்ஸாண்ட்ரைட்’ என்ற வகையைச் சார்ந்த அதிர்ஷ்டக் கற்கள். மிக அரிய, அதிசயமான நிறம் மாறும் தன்மைக் கொண்டது. இதற்கான சான்றிதழ்களும் சென்னையிலுள்ள ரத்தினக்கல் ஆய்வகம் மூலமாக பெற்றுள்ளேன்’’ என்று கூறி, இடைத்தரகர்கள் சிலரிடம் லாபத்துக்கு விற்றுத் தரக்கோரி அணுகியுள்ளார்.

பேரணாம்பட்டு அருகேயுள்ள ஏரிகுத்தி கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் கற்களை வாங்கிக் கொள்வதாகக் கூறியதால், ஆனந்தகுமாரும் ஆய்வக சான்றிதழ்களுடன் கற்களை எடுத்துக்கொண்டு நேற்று பேரணாம்பட்டு புதிய பேருந்து நிலையப் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

மீட்கப்பட்ட கற்கள்

அங்குவந்த புருஷோத்தமனிடம் காண்பித்தபோது, கற்களைப் பின்னர் வாங்கிக் கொள்வதாகக் கூறிவிட்டு புருஷோத்தமன் அங்கிருந்து கிளம்பிவிட்டார். இதையடுத்து, ஆனந்தகுமாரும் அங்கிருந்து பேரணாம்பட்டு பஜாருக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வாங்கிக்கொண்டு கிளம்பியுள்ளார்.

அப்போது, புருஷோத்தமன் போன் செய்து `வீட்டுக்குப் போய்ட்டீங்களா?’ என்று கேட்டுள்ளார். அதற்கு ஆனந்தகுமார் `இல்லை. இப்போதுதான் கிளம்புறேன்’ என்று கூறியுள்ளார். 10 நிமிடங்கள் கழித்து புருஷோத்தமன் மீண்டும் போன் செய்து `இப்போ எங்க இருக்கீங்க. ஏரிகுத்தி கிராமத்தை தாண்டிவிட்டீர்களா?’ என்று கேட்டுள்ளார். `இல்லை. இப்போ தான் கிராஸ் பண்ணப் போறேன்’ என்று கூறியுள்ளார் ஆனந்தகுமார்.

பல்லலகுப்பம் அடுத்துள்ள தொட்டி கிணறு பகுதியைக் கடந்த ஆனந்தகுமார் சிறுநீர் கழிக்க வண்டியை நிறுத்தியுள்ளார். அப்போது, முகமூடி அணிந்து பின்தொடர்ந்து வந்த 2 இளைஞர்கள், ஆனந்தகுமாரின் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த கற்களின் பையை தூக்கிக்கொண்டு வேகமாக தப்பிச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த ஆனந்தகுமார் உடனே மேல்பட்டி காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முகமூடி அணிந்து வந்து வழிப்பறியில் ஈடுபட்டது புருஷோத்தமனின் கூட்டாளிகளான கோட்டைச்சேரி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ராகுல், சபரி எனத் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட புருஷோத்தமன்

தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார், இன்றைய தினம் புருஷோத்தமனை கைது செய்தனர். அவரிடமிருந்து கற்களையும் மீட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரின் கூட்டாளிகள் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். அதே சமயம், ஆனந்தகுமாரிடமும் இந்த கற்கள் விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனெனில், பட்டைத் தீட்டப்படாத 7 கற்களின் மதிப்பு வெறும் ரூ.25,000 என்றே கூறியுள்ளார். மேலும், கடந்த 7 வருடங்களாக கை மாற்றி விற்கும் இந்தத் தொழிலில் இருப்பதாகவும் கூறியுள்ளார் ஆனந்தகுமார். அலெக்ஸாண்ட்ரைட் கற்கள் விலைமதிக்கத்தக்கவையாகும். அவர் விற்பது அசல் கற்கள் தானா அல்லது மலிவான கற்களா? போன்ற கேள்விகளும் எழுவதால், ஆனந்தகுமாரின் பின்னணி பற்றியும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை: பள்ளி மாணவிக்கு `ஐ லவ் யூ' சொன்ன ஆசிரியர் - போக்சோவில் கைதான பின்னணி!

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில், 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி, இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வந்தார். அவரின் இன்ஸ்டாவுக்கு தொடர்ந்து காதல் மெசேஜ்கள் வந்து கொண்ட... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: பிரவசத்தில் தாய், சேய் இறப்பு; விறகு வியாபாரிமீது பாய்ந்த வழக்கு! - பின்னணி என்ன?

காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் இருளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தன். இவரின் மனைவி தேன்மொழி. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும் மகளும் உள்ள நிலையில், மூன்றாவதாக தேன்மொழி கர்ப்பமட... மேலும் பார்க்க

தாளவாடி: இளைஞரை சங்கிலியில் கட்டிவைத்து சித்ரவதை; கொடூர காவல்துறையின் பதைபதைக்க வைக்கும் வீடியோ

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகில் உள்ள திகினாரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாது (எ) மாதேவா. 20 வயதான இவர் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை என மாதேவாவை அழைத்துச் சென... மேலும் பார்க்க

தெருவில் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட சிறார்கள்; புனே போலீஸ் மீது வழக்கு; மனித உரிமை கமிஷன் உத்தரவு

புனேயில் கொலை வழக்கு ஒன்றில் போலீஸாரிடம் சரணடைந்த சிறார்கள் 8 பேரை, போலீஸ் நிலையத்தில் ஐந்து நாட்கள் சட்டவிரோத வைத்திருந்து அடித்து உதைத்துள்ளனர். அதோடு அந்தச் சிறார்களை பொதுவெளியில் ஊர்வலமாக அழைத்துச... மேலும் பார்க்க

‘ரூ.20,000 கடனை அடை’- பிரசவத்திற்குச் செல்ல விடாமல் தடுத்த உரிமையாளர்; தாய், சிசுக்கு நேர்ந்த துயரம்

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஆனந்தன் (40) - தேன்மொழி (35) தம்பதியினர், அரக்கோணம் சாலை வெள்ளை கேட் பகுதியில் உள்ள மரக்கடையில் கடந்த 6 மாதங்களாக மரம... மேலும் பார்க்க

கோவை: வடமாநிலத் தொழிலாளியைக் கொன்று புதைத்த 6 பேர் கைது - அதிரவைக்கும் கொலைகளால் மக்கள் அச்சம்

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் கடந்த 8ம் தேதியன்று மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது ஒரு இடத்தில் தோண்டப்பட்டு இருந்த குழிக்குள் ஒரு ச... மேலும் பார்க்க