செய்திகள் :

கே.பாப்பாரப்பட்டி: "குழந்தைகளுக்கான மைதானமா? மது அருந்துவோரின் கூடாரமா?" - சீரமைக்க கோரும் மக்கள்!

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், கே.பாப்பாரப்பட்டி கிராமத்தில் அரசு நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட விளையாட்டு மைதானம், இலவச 'மது பாராக' செயல்பட்டு வருவதை அறிந்து அங்கு சென்று பார்த்தோம். தமிழ்நாடு அரசு – மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGS) 2024–25 திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டதாக, மைதானத்தில் தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அரசு மைதானம் பராமரிப்பின்றி, கண்காணிப்பின்றி, சமூக விரோத செயல்களுக்கான இடமாக மாறி வருவது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து அங்கிருந்த சிறுவர்களிடம் கேட்கும் போது,

“நாங்க விளையாட போகணும்னு நினைப்போம். ஆனா... அங்க யாரெல்லாம் இருக்காங்கன்னு பார்த்தாலே பயமா இருக்கும். அதனால திரும்பி வீட்டுக்கே வந்துடுவோம். இல்லன்னா ஊர் முனையில இருக்க மாரியம்மன் கோயிலுக்கு விளையாட போய்டுவோம்” என்கின்றனர்.

சில நேரங்களில் அதுவும் மிகவும் அரிதாக, இளைஞர்கள் சிலர் அந்த மைதானத்தில் விளையாட வருகிறார்களாம். ஆனால் தொடர்ச்சியான மது அருந்தல், அச்சுறுத்தும் சூழல் காரணமாக அவர்களும் அந்த இடத்தைத் தவிர்த்துவிட்டு வேறு இடங்களுக்குச் செல்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து தற்போது அந்த கிராமத்தின் பொறுப்பில் உள்ள பஞ்சாயத்து எழுத்தாளர் தங்கராஜ் என்பவரிடம் பேசும்போது,

"இந்த பிரச்னை குறித்து பல முறை போலீசில் புகார் அளித்துள்ளேன். வட்டார வளர்ச்சி அலுவலரை அழைத்து வந்து நேரில் காட்டியிருக்கிறேன். குடித்து கொண்டிருப்பவர்களிடம் நேரடியாக சென்று, 'இங்க குடிக்காதீங்க’ன்னு எச்சரித்தும் இருக்கேன். ஆனா யாரும் கேட்க மாட்டேங்குறாங்க. எனினும், இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியா அடுத்த வாரத்தில் மைதானத்தை டிராக்டர் கொண்டு சமனாக்கி சீரமைக்க திட்டமிட்டிருக்கோம். அதேபோல, ‘இங்கு மது அருந்த கூடாது’ன்னு சொல்லும் எச்சரிக்கை பேனரும் வைக்க முடிவு பண்ணியிருக்கோம்.” என்றார்.

அரசு நிதியில் உருவாக்கப்பட்ட ஒரு பொதுச் சொத்து, வீணடிக்கப்படுவது, அதிகாரிகளின் கண்காணிப்பு குறைபாட்டையும், ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

`காங்கிரஸில் தொடரும் உட்கட்சிப் பிரச்னைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது!' - ஜோதிமணி

"சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல், மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல், வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்... மேலும் பார்க்க

காங்கிரஸின் அரசியல் ஸ்டன்ட்? - திமுக கூட்டணியின் 'லட்சுமண ரேகை'யும் அதிரும் 2026 தேர்தலும்!

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு மாதம் குறிக்கப்பட்டுவிட்டதால் விறுவிறுப்பாக தேர்தல் வேலைகள் தொடங்கிவிட்டன. குறிப்பாக கட்சிகளின் கூட்டணி அரசியல் விவாதக் களத்துக்கு வந்துவிட்டது.கடந்த 2021-ம் ஆண்டு... மேலும் பார்க்க

`ஆன்மிகத்தை வம்பு செய்ய பயன்படுத்துகிறார்கள்; மதவாத அரசியல் போதையைத் தடுக்க வேண்டும்!' - ஸ்டாலின்

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ நடைபயணத்தின் துவக்க விழா திருச்சி தென்னூர் புலவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் ல... மேலும் பார்க்க

சென்னை: 'மாநகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்!' - குண்டுக்கட்டாக கைது

தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 150 நாள்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ஆணையரின் வீட்டை... மேலும் பார்க்க