செய்திகள் :

கையில் பணம் புழங்கிக்கொண்டே இருக்க செய்யக் கூடாத தவறுகளின் லிஸ்ட் | பணம் வளர்ப்போம் - 4

post image

என்ன தான் பார்த்து பார்த்து நிதி திட்டமிடல் செய்தாலும், சில நேரங்களில் சில தவறுகளும் நடந்துவிடும். அவை தெரிந்து செய்யும் தவறுகள் அல்ல... தெரியாமல் செய்யும் தவறுகள் தான்.

அவை என்னென்ன என்பதை பட்டியலிடுகிறார் நிதி நிபுணர் சுந்தரி ஜகதீசன்.

"நாம் செய்யும் நிதி தவறுகளில் முதல் இடத்தில் இருப்பது செலவுகள் தான். இதை முடிந்தளவு குறைக்க வேண்டும்... தேவையில்லாத செலவுகளைச் செய்யவே கூடாது.

 சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

அடுத்ததாக, இப்போது நிறைய பேர் அதிக கடன் வாங்கி தள்ளாடுகின்றனர்.

உங்கள் மாத வருமானத்தில் 20 - 25 சதவிகிதம் மட்டுமே கடனுக்குச் செல்லும் தொகையாக இருக்க வேண்டும். இதில் மிக மிக கவனமாக இருங்கள்.

மிக உஷாராக இருக்கிறோம் என்று பல இன்சூரன்ஸ்களை இப்போது எடுக்கின்றனர். ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு மட்டும் வைத்துவிட்டு பிற இன்சூரன்ஸ்களை ஏஜென்டிடம் பேசி கிளோஸ் செய்யுங்கள்.

அதற்கு செல்லும் பணத்தை முதலீட்டிற்குத் திருப்புங்கள்.

இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு மேல் வைத்துக்கொள்ள வேண்டாம். அதிகம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வங்கிக் கணக்குகள் மோசடி பேர்வழிகளின் கையில் சிக்கி விடுகிறது. அதனால், இதில் கவனம் தேவை.

எக்காரணத்தைக் கொண்டும் 2 கிரெடிட் கார்டுகளுக்கு மேல் வேண்டாம். ஒருவேளை, அது உங்களிடம் இருந்தால், அதை சரண்டர் செய்துவிடுங்கள்.

டைம் பாஸ், காசு வரும் என்று ஆன்லைன் சூதாட்ட வலையில் மட்டும் விழுந்துவிடவே விடாதீர்கள்.

 OTT
OTT

பார்க்காத OTTக்களை தொடர்ந்து ஆட்டோ ரினியூவலில் இருந்தால், அதை ரிவ்யூ செய்து மாற்றுங்கள்.

இப்போது செய்யலாம்... அப்போது செய்யலாம் என்று முதலீட்டைத் தள்ளிப்போட்டு கொண்டு இருக்காதீர்கள். உடனே தொடங்குங்கள்.

பல பல மோசடிகள் இன்றைய காலக்கட்டத்தில் நடந்துகொண்டிருக்கிறது. அதில் சிக்காமல் தப்பித்துக்கொள்வது நம் சமார்த்தியம் தான்.

குழந்தைகளுக்கு அதிக பொருள்களை வாங்கிக் கொடுத்து, பணம் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் செய்யாதீர்கள்.

மிக மிக முக்கியமாக, நிதி திட்டமிடலுக்கு ஒரு இலக்கு நிர்ணயித்து முதலீடு, சேமிப்பை செய்யுங்கள். அப்போது தான் அது முழு கரையை சென்று சேரும்.

முதல் நான்கு அத்தியாயங்களில் 25 - 32 வயதிற்குள் இதை செய்ய வேண்டும்... அதை செய்ய வேண்டும்... என்று சொல்லியிருக்கிறோம்.

'32 வயதிற்கு மேல் உள்ள நாங்கள்?' என்று கேட்பவர்களுக்கு, 'Better Late than Never'. உங்களுக்கான நிதி தேவைகளைப் பட்டியலிட்டு, நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுங்கள்.

இல்லையென்றால், உங்களது கேள்விகளை இங்கே கமென்ட் செய்யுங்கள். நாங்கள் பதிலளிக்கிறோம்".

உங்க குழந்தைகளோட School, College Fees சமாளிக்க இது ஒரு 'சூப்பர்' வழி! | பணம் வளர்ப்போம்

குழந்தை பிறந்தாச்சு... இதன் பிறகு, பெற்றோர்களுக்கு இருக்கும் அடுத்த மிகப்பெரிய செலவு, 'கல்விக் கட்டணம்'. எந்தத் திட்டமிடலில் கவனமாக இருக்கிறோமோ... இல்லையோ... கல்வி நிதி திட்டமிடல் மிகத் தெளிவாக இருக்க... மேலும் பார்க்க

'G.P.F. மற்றும் 'போஸ்ட் ஆஃபீஸ்' வேலைக்கு ஆவாதா? 'இரண்டாவது PF' பெற என்ன செய்யணும்?

காலை 9:45 மணிக்கு அவசரமாக வண்டியைப் பார்க் செய்துவிட்டு, பயோமெட்ரிக்கில் விரல் வைத்துவிட்டு, கொண்டுவந்த டிபன் கேரியரை டேபிளுக்குக் கீழே வைத்துவிட்டு சீட்டில் அமர்ந்தால்... அடுத்த விநாடி ஆரம்பமாகிறது உ... மேலும் பார்க்க

'பெற்றொர்' அத்தியாயத்தை கடனாளியாக இல்லாமல் மகிழ்ச்சியாகத் தொடங்க 'பிளான்'! | பணம் வளர்ப்போம்

பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பதுதான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும். அப்படி இந... மேலும் பார்க்க

Labham - 3: EMI + SIP... வீட்டுக் கடனை எளிதாகக் கட்டி முடிக்கும் சூப்பர் ஃபார்முலா

35 வயதானாலே போதும், 'சொந்தமா இன்னும் வீடு வாங்கலையா...? கடனைக் கிடனை வாங்கி, மொதல்ல, ஒரு வீடு வாங்குப்பா...' என்று நெருக்குதலைத் தர இன்று பல வீடுகளில் 'பெரியவர்கள்' தயாராக இருக்கிறார்கள். இன்றுள்ள நில... மேலும் பார்க்க

NRI - 10: ரிஸ்க்கே எடுக்க மாட்டேன் என்பவரா நீங்கள்? எத்தனை லட்சங்களை நீங்கள் இழப்பீர்கள் தெரியுமா?

மனிதர்கள் இரண்டு வகை. 'எந்த விஷயத்திலும் நான் ரிஸ்க்கே எடுக்க மாட்டேன்' என்பவர்கள் ஒரு வகை. 8 மணிக்கு ரயில் என்றால், 7.30 மணிக்கே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விடுவார்கள். 40 கிலோ மீட்டருக்கு மேல் வண்டிய... மேலும் பார்க்க

`25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம்' புதுச்சேரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி; அனுமதி இலவசம்; பரிசு உண்டு

சம்மர் வந்துவிட்டது. கொளுத்தும் வெயிலில் எல்லோரும் ஏசி, குளிர் சாதனங்களை அதிகம் பயன்படுத்துவோம். இதனால் மின்கட்டணமும் எகிறும். ஆனால், இந்த வெயில் காலத்திலும் இலவச மின்சாரம் மூலம் மின் கட்டணத்திலிருந்த... மேலும் பார்க்க