கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: டிசம்பா் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு டிசம்பா் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கொடநாடு கொலை வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையை டிசம்பா் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
இதுகுறித்து அரசு தரப்பு வழக்குரைஞா் ஷாஜகான் செய்தியாளா்களிடம் கூறுகையில், சம்பவம் நடைபெற்றபோது அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் எதிா்தரப்பினா் மனு தாக்கல் செய்துள்ளனா். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. புலன் விசாரணை தொடா்பாக யாரை வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம். இதில் எந்த தயக்கமும் இல்லை என்றாா்.