செய்திகள் :

கொண்டாட்டம் நமக்கு… கழிவுகளை அகற்றும் சுமை இவர்களுக்கு! பிரித்துக் கொடுப்போம், பாரம் குறைப்போம்

post image

த

தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் எனப் பலருக்கும் கொண்டாட்டம்தான்.

ஆனால், அந்தக் கொண்டாட்டம் முடிந்த பிறகு வீதிகளில் தேங்கும் பட்டாசுக் கழிவுகளையும் மற்ற குப்பைகளையும் அகற்ற வேண்டிய பொறுப்பு தூய்மைப் பணியாளர்களுக்கு இருக்கிறது

மற்றவர்களுக்கு விடுமுறை நாளாக இருக்கும் தீபாவளி, இவர்களுக்குப் பணிச்சுமை அதிகரிக்கும் நாளாகவும் இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் மூலச்சி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களிடம் பேசியபோது, அவர்களுடைய அன்றாடப் பணி குறித்தும், பண்டிகைக் காலங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் தெரிந்துகொள்ள முடிந்தது.

அதேபோல் கல்லிடைக்குறிச்சியில் பணிபுரியும் பெண் தூய்மைப் பணியாளர்களிடமும் பேசினோம்.

தீபாவளியிலும் தொடரும் பணி!

மூலச்சி ஊராட்சியில் நான்கு ஆண்கள், நான்கு பெண்கள் என மொத்தம் எட்டு பேர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கூறியது....

தினமும் காலை 8 மணிக்கு அனைவரும் ஒரே இடத்தில் கூடி வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட பிறகு, தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்கின்றனர். பேட்டரி வாகனங்கள் மூலம் வீடுகளுக்குச் சென்று குப்பைகளைச் சேகரிக்கின்றனர்.

தூய்மைப் பணியாளர்கள்

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பட்டாசுக் கழிவுகள், உணவுக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளின் அளவு அதிகரிக்கிறது.

குறிப்பாக மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரிக்காமல் அனைத்தையும் ஒன்றாகக் கொட்டும்போது, அவற்றைப் பிரித்தெடுப்பது சிரமமாகிறது. பயன்படுத்தப்பட்ட டயப்பர்கள்கூட மற்ற குப்பைகளுடன் சேர்த்துக் கொட்டப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

கல்லிடைக்குறிச்சியில் பணிபுரியும் பெண் தூய்மைப் பணியாளர்களிடம் பேசியபோதும், பண்டிகைக் காலங்களில் வேலை நேரம் மாறுபடுவதாகத் தெரிவித்தனர்

வழக்கமான நாட்களில் காலை 6 மணிக்கே பணியைத் தொடங்கும் இவர்கள், வீடுகள் மற்றும் கடைவீதிகளில் குப்பைகளைச் சேகரிக்கின்றனர். தீபாவளி நேரத்தில் பட்டாசுக் கழிவுகள் அதிகமாகச் சேர்வதால் அவற்றைச் சேகரித்து அகற்றுவது கூடுதல் சிரமமாகிறது.

கொண்டாட்டத்துக்கு முன்பே முடிக்க வேண்டிய வேலை!

தீபாவளி நாளில் முழுமையான விடுமுறை கிடைப்பதில்லை. தூய்மைக் காவலர்கள் விடுப்பு எடுத்துக்கொள்ள வாய்ப்பிருந்தாலும், தூய்மைப் பணியாளர்கள் குறைந்தபட்சம் அரை நாளாவது பணிக்குச் சென்றுவிட்டுத்தான் வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை இருப்பதாகத் தெரிவித்தனர்.

தூய்மைப் பணியாளர்கள்

பணியாளர்கள், பண்டிகை நாட்களில் வேலை நேரம் அதிகரிப்பதையும் குறிப்பிட்டனர்.

குப்பைகளைச் சேகரிப்பது மட்டுமின்றி, அவற்றில் உள்ள பல்வேறு கழிவுகளைத் தனித்தனியாகப் பிரிப்பதும் இவர்களின் பணியில் அடங்கும்.

பணியாளர்கள் கூறுகையில், மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்துக் கொடுக்க வேண்டும் குப்பையைப் பிரித்துக் கொடுத்தால் சிரமம் குறையும்! என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.

தீபாவளி என்பது பலருக்கும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாள். ஆனால், அந்த மகிழ்ச்சிக்குப் பிறகு வீதிகளைச் சுத்தப்படுத்தும் பணியும் அவசியமாகிறது. நாம் கொண்டாடும் பண்டிகையின் மறுநாள், சுத்தமான தெருக்களைக் காண்பதற்குப் பின்னால் இவர்களின் உழைப்பும் இருக்கிறது.

`எங்கள் கொண்டாட்டம் கொஞ்சம் தாமதமாகத்தான்..'- நம் தீபாவளிக்கு பின்னால் இயங்கும் ஓய்வில்லா மனிதர்கள்!

நம் தீபாவளிக்குப் பின்னால்.. ஓய்வில்லாத மனிதர்கள்!தீபாவளி அன்று அதிகாலையில் எழுவது நமக்கு ஒரு கொண்டாட்டம். ஆனால், சிலருக்கு அதுவே வேலை நேரம்! நாம் வெடிக்கும் பட்டாசுகளின் சத்தத்துக்கு நடுவே நாளிதழ் வி... மேலும் பார்க்க

நெல்லை: குடும்பத்தின் வருகை; புத்தாடை, இனிப்பு – காப்பகத்தில் நெகிழ்ச்சியான தீபாவளி!

தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், குடும்பத்தினருடன் கொண்டாட்டம் என மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனால், குடும்பத்தைப் பிரிந்து காப்பகத்தில் வசிப்பவர்களுக்கும் அந்த மகிழ்ச்சியை அனுபவ... மேலும் பார்க்க

`அவங்க முகத்துல வர சந்தோசம்தான்.!' - உடைந்த சிலைக்களுக்கு புத்துயிர் ஊட்டும் கலைஞர்

ஒன்று உடைந்துவிட்டால், தூக்கி எறிந்துவிட்டு இன்னொன்றை தேடிச் செல்லும் காலத்தின் ஓட்டத்தில், உடைந்த சிலைகளுக்கும் புத்துயிர் ஊட்டி வருகிறார் கந்தன் (46). சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் அமைந்துள்ள இவர... மேலும் பார்க்க

வெடியை மறந்த கிராமம்: பறவைகளுக்காக 50 ஆண்டு தியாகம் - இனிப்பு கொடுத்து வனத்துறை நெகிழ்ச்சி!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ளது கொல்லுக்குடிப்பட்டி கிராமம். இங்குள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து சுமார் 25 ஆயிரத... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த 2 பவுன் நகை; காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசுப் பள்ளி மாணவனுக்குப் குவியும் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பிடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 13). இவர் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.2 பவுன் தங்க நகைகள்மாணவன... மேலும் பார்க்க

ஒதுக்கிய சமூகம்; விடாத சுயமரியாதை; உழைப்பை ஆயுதமாக்கிப் போராடும் திருநங்கை ஸ்மிதா

சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ போராடும் திருநங்கை ஸ்மிதா அவர்களிடம் உரையாடல் ஒன்றை நிகழ்த்தினோம்.."என்னோட சொந்த ஊரு மதுரை பக்கத்துல உசிலம்பட்டி. எனக்கு அப்பா அம்மான்னு யாரும் இல்லை. நான் திண்டுகல்'ல உ... மேலும் பார்க்க