செய்திகள் :

`கோவை நூலக புத்தகங்களில் ஊழல்; முதல்வர், அமைச்சர்களுக்கும் பங்கா?' - நயினார் நாகேந்திரன் கேள்வி

post image

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “கோவை பெரியார் நூலகத்திற்கு புத்தகம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக கூறுகிறார்கள். அப்படியென்றால், ஏன் ஆளுங்கட்சி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை? விசாரணையில் ஏன் தாமதம் ஏற்பட்டு வருகிறது? அப்படியென்றால், முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் பங்கு இருக்கிறதா என்ற கேள்வி பொது வெளியில் எழுகிறது. இந்த நூலகத்திற்கு நூல்கள் வாங்குவதில் நியமிக்கப்பட்ட குழுவில் உள்ள நபரே ஊழல் நடந்துள்ளது எனத் தெரிவித்த பின்னரும் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

நயினார் நாகேந்திரன்

முந்தைய தி.மு.க ஆட்சியில் நூல்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டாலும் த.வெ.க ஆட்சியில்தான் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. உண்மையான எழுத்தாளர்களின் புத்தகங்களைத்தான் வைத்துள்ளார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது இந்த அரசின் கடமை. திரிஷா விஜய் என்ற ஒரு எழுத்தாளரின் பெயரிலும் பல்வேறு முகம் தெரியாத எழுத்தாளர்களின் பெயர்களிலும் புத்தகங்கள் இருந்ததாகக் கூறுகிறார்கள். உண்மையிலேயே அந்த புத்தகங்கள் இருந்ததா என சம்மந்தப்பட்ட அமைச்சர் தெளிவாக விளக்க வேண்டும்.

தமிழகத்தில் அனைத்துத்துறைகளிலும் ஊழல் பெருகி விட்டது. தமிழகத்தின் நிதி நிலை குறித்தும் நிதியமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்தில் முரணாகச் செயல்பட்ட ஆய்வாளர், ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக சிக்கியுள்ளார். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் த.வெ.க அரசு உச்ச நீதிமன்றத்தை நாடுகிறது. இந்த அரசும் விரைவில் அகற்றப்படும்.   தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.

கோவை பெரியார் அறிவுலக நூலகம்

பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. செஞ்சியில் 7 வயது சிறுமி மாயமாகி 25 நாள்களைக் கடந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பணியாற்ற முடியாத சூழல் நிலவுகிறது. இதனால்தான் சமீபத்தில் 300 அரசு ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்கள். அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. தேர்தல் வரும்போது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து தலைமைக்கு தெரியப்படுத்தி உரிய முடிவு எடுக்கப்படும்.” என்றார்.   

ஈரான் - அமெரிக்கா: `அதிகரிக்கும் பதற்றம்: தொடர்ந்து கேட்கும் வெடிகுண்டுச் சத்தம்' - என்ன நடக்கிறது?

ஈரானுக்கும் - அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது. பாரசீக வளைகுடா கடலோரப் பகுதிகளான கெஷ்ம் தீவு, சிரிக், ஜாஸ்க் மற்றும் பண்டார் அப்பாஸ் உள்ளிட்ட பல இடங்களில் சனிக்கிழமை மாலை பயங்கர வெட... மேலும் பார்க்க

வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் வடகோவை ரவுண்டானா; கோவை தீபாவளி கொண்டாட்டம்! - பருந்து பார்வை க்ளிக்ஸ்

வடகோவை ரவுண்டானாவடகோவை ரவுண்டானாவடகோவை ரவுண்டானாவடகோவை ரவுண்டானாவடகோவை ரவுண்டானாவடகோவை ரவுண்டானாவடகோவை ரவுண்டானா மேலும் பார்க்க

190 குழந்தைகளின் மரணம்... மதவழிபாட்டின் பெயரில் கொடூரம்: தலைவருக்கு 200 ஆண்டுகள் சிறை!

கடவுளைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகப் பசியுடன் இருந்தால் சொர்க்கத்துக்குச் செல்லலாம் என்று கூறி, தன்னைப் பின்பற்றியவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் பட்டினி கிடக்கச் செய்த மதக்குழுத் தலைவருக்கு கெ... மேலும் பார்க்க

"சினிமா ஷூட்டிங் போல மேக்கப் போட்டு நூலகத்தை திறந்து வைத்தால் போதுமா?"- எடப்பாடி விமர்சனம்

பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு யார் ஆட்சியில் நடந்தது என்பது குறித்து ஆளும் தவெகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர்... மேலும் பார்க்க

'சண்டியர்': பிடிவாத கமல்... பின்வாங்காத கிருஷ்ணசாமி; சாதி அரசியலாக்காதீர்கள்! - கமல் தரப்பு

22 வருடங்களுக்குப் பிறகு 'சண்டியர்' படத் தலைப்பு மீண்டும் சர்ச்சையாகியிருக்கிறது!நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு, தான் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அண்மையில் வெளியி... மேலும் பார்க்க

பெரியார் நூலக விவகாரம்: 'விசாரணைக்கு தயார்; திமுக ஆட்சியில் முறைகேடு நடைபெறவில்லை'- உதயநிதி

'முரசு' புயலில் சிக்கி உயிர் இழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”ஆளும் தவெக அரசு முன்னெச... மேலும் பார்க்க