செய்திகள் :

சங்கரன்கோவில்: மல்லிகைப்பூ கிலோ ரூ.7,500-க்கு விற்பனை; வரத்து குறைவால் விலை கடும் உயர்வு

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

குறிப்பாக மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம், மரிக்கொழுந்து போன்ற மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

மல்லிகைப்பூ
மல்லிகைப்பூ

தென்மாவட்டங்களில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை மலர் சந்தைக்கு அடுத்ததாக பெரிய மலர் சந்தை சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது.

இச்சந்தையிலிருந்து மலர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், கேரளாவிற்கும், மதுரை மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கடந்த சில தினங்களாக மல்லிகைப்பூவின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 4,000க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லி, பிச்சி உள்ளிட்ட பூக்களின் சாகுபடி கணிசமாகக் குறைந்த நிலையில், தென்காசி, சங்கரன்கோவில், சிவகாமிபுரம் சந்தைகளுக்குப் பூக்களின் வரவும் குறைந்துள்ளது.

இன்று காலை மலர் சந்தையில் திடீரென மல்லிகைப்பூவின் விலை கடும் உயர்வு காணப்பட்டு, ஒரு கிலோ ரூ. 7,500க்கு விற்பனையாகிறது. இது கிட்டத்தட்ட 87.5% விலை உயர்வாகும்.

இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, "வழக்கமாக ஒரு நாளைக்கு சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு 2,000 கிலோவுக்கும் மேல் மல்லிகைப்பூ விற்பனைக்குக் கொண்டு வரப்படும். தற்போது வெறும் 15 கிலோ மல்லிகைப்பூ மட்டுமே வந்திருக்கிறது.

அடுத்த வாரம் முதல் வானிலை சீரடையும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், விலை படிப்படியாகக் குறையும்” என்றார்.

மல்லிகைப்பூ
மல்லிகைப்பூ

மல்லிகைப்பூ விலை உயர்வால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறைந்த அளவு விளைச்சலுக்கும் அதிக விலை கிடைப்பதால், சிறிதளவு பூக்களை விற்றாலும் நல்ல வருமானம் கிடைக்கிறது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக சில நூறு ரூபாய்களில் வாங்கிய மல்லிகைப்பூ தற்போது பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாவதால், பல குடும்பங்கள் பூ வாங்குவதைத் தவிர்க்கின்றனர் அல்லது மிகக் குறைந்த அளவில் மட்டுமே வாங்குகின்றனர்.

மல்லிகைப்பூ மட்டுமல்லாது, பிச்சிப்பூ, கனகாம்பரம், முல்லை உள்ளிட்ட மற்ற மலர்களின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஆனால் மல்லிகைப்பூவின் விலை உயர்வு தான் மிக அதிகமாக உள்ளது.

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்ப.மோகனப் பிரியா,உடுமலைப்பேட்டை,திருப்பூர்.90034 22422பூங்கார் சத்து மாவு, ரத்தசாலி சத்து மாவு, மணிச்சம்பா உப்மா, புட்டு மாவு வகைகள்.கே.எஸ்.கணேசன்,கும்பகோணம்,தஞ்சாவூர்.93443 00656இய... மேலும் பார்க்க

இயற்கை உரம் என்ற பெயரில் ரசாயன உரம் விற்பனை; குடோனுக்கு சீல்; சிக்குகிறார்களா வேளாண் அதிகாரிகள்?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்துள்ள இ.ராமநாதபுரம் கிராமத்தில் பொன்னுச்சாமி என்பவருக்குச் சொந்தமான பொன்னுஸ் நேச்சுரல் புரொடக்ட் எனும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குரசாயனங்களை அதிக வி... மேலும் பார்க்க

Coffee bean: காபி கொட்டைகளை தின்று அழிக்கும் துளைப்பான் வண்டுகள்; 1990-க்கு பிறகு மீண்டும் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் 7,348 ஹெக்டேர் பரப்பளவில் காபி பயிரிடப்படுகிறது. உள்ளூரைச் சேர்ந்த சில பழங்குடிகள் முதல் தனியார் பெருந்தோட்ட நிறுவனங்கள் வரை, நீலகிரியில் விளைவிக்கும் காஃபி கொட்டைகளை நாட்டின் பல ... மேலும் பார்க்க

டிட்வா புயல்: தொடர் மழையால் வெள்ளக்காடான டெல்டா வயல்கள்; 1 லட்சம் ஏக்கர் நெற் பயிர் மூழ்கிய வேதனை

டெல்டா மாவட்டமான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் டிட்வா புயல் காரணமாக நேற்று பகல் முழுவதும் தொடர் மழை பெய்தது. இரவுக்குப் பிறகு சற்று லேசாகப் பெய்த மழை பரவலாக இருந்தது. நாகப்பட்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: முருங்கைக்காய் கிலோ ரூ.320, கத்தரிக்காய் ரூ.120 - விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2,000 எக்கர் பரப்பளவில் யாழ்ப்பாணம்,... மேலும் பார்க்க