செய்திகள் :

சட்டசபையில் `ராஜகுரு' விவகாரம் : ரதன் பண்டிட் நியமனத்தை திரும்ப பெற்ற தவெக அரசு.!

post image

தவெக அரசு மீது நம்பிக்கைக் கோரும் தீர்மானம் சட்டமன்றத்தில் நடைபெற்றது. அப்போது சட்டசபையில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளரும், எம்எல்ஏ-வுமான பிரேமலதா விஜயகாந்த், "அரசு குடும்பத்தில் இருந்து நான் வந்தவன் இல்லை என்று முதல்வர் சொல்லும்பொழுது அனைவரும் வரவேற்றார்கள்.

ஆனால் இன்றைக்கு அவரின் ராஜ குருவாக இருக்கும் ரத்தன் பண்டிட் என்பவரை அரசியல் சிறப்பு அதிகாரியாக அரசு வேலையில் அமர்த்தியதை ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக வன்மையாக் கண்டிக்கிறேன்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

அவர் உங்களுக்கு ராஜ குருவாக இருந்தால் அவரை நீங்கள் தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு என்ன முன்னுதாரணத்தை நீங்கள் காட்டுகிறார்கள் என்பதை நீங்கள் நிச்சயம் தெளிவுப்படுத்த வேண்டும். இந்த ஆட்சி மக்களுக்கான நேர்மையான ஆட்சியாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். மேலும் சில எம்.எல்.ஏ க்களும் தவெக அரசின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர்,

இதற்கு சட்டசபையில் பதில் அளித்த விஜய், ``I will rethink about it' என சொல்லி இருந்தார்,

பிரேமலதா கேள்வி எழுப்பி இருந்த நிலையில் ரதன் பண்டிட்டின் வழங்கப்பட்ட பதவி திரும்ப பெறப்பட்டிருக்கிறது.

`6 அமைச்சர் பதவி; 10 வாரியப் பொறுப்பு; ஆசைகாட்டிய தவெக... அதிமுக-வுக்கு துரோகம்!' - இபிஎஸ் சாடல்

இன்று தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 234 சட்டமன்ற உறுப்பினர்களில், திமுக வெளிநடப்பு மற்றும் இதர காரணங்களால் 63 பேர் பங்கேற... மேலும் பார்க்க

கலைக்கப்பட்ட அரசுகள்; சிறைக்குச் சென்ற முதல்வர்... தமிழ்நாடு சட்டசபையின் கடந்தகால ஹைலைட்ஸ்!

பதினேழாவது சட்டசபையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தவெக, இன்று தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இந்தச் சூழலில் கடந்த பதினாறு சட்டமன்ற நிகழ்வுகளின்போது நடந்த சில முக்கிய சம்பவங்களைத் திரும்பிப் பா... மேலும் பார்க்க

தவெக எம்.எல்.ஏ வழக்கு: `இது அடாவடித்தனம்!' - சென்னை உயர் நீதிமன்றத்தைக் கண்டித்த உச்ச நீதிமன்றம்

தமிழக அரசியலில் ஒரு ஓட்டு வித்தியாசம் ஏற்படுத்திய புயல் இன்று டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கரை கடந்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய உச்ச நீதிமன்ற... மேலும் பார்க்க

"இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா? அதிமுக.!”- தவெகவை சாடும் ஸ்டாலின்

தமிழக வெற்றிக் கழகம் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான 'நம்பிக்கை வாக்கெடுப்பு' இன்று (மே. 13) நடைபெற்றது.இதில் 144 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று முதல்வர் விஜய்யின் தவெக பெரும்பான்மையை நிரூபித... மேலும் பார்க்க

விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏக்கள் யார் யார் தெரியுமா? - சட்டமன்றத்தில் பிளவுப்பட்ட அதிமுக!

முதல்வர் விஜய்யின் தவெக அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்டிருந்தது. அதில், தவெக அரசுக்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏக்களும் எதிராக 22 எம்.எல்.ஏக்களும் நடுநிலையாக 5 எம்.எல்.ஏக்கள... மேலும் பார்க்க

பெரும்பான்மை நிரூபித்த தவெக: "ஆம் இது சிறுபான்மை அரசு தான்!" - முதல்வர் விஜய் பேச்சு

தமிழக வெற்றிக் கழகம் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான 'நம்பிக்கை வாக்கெடுப்பு' இன்று (மே. 13) நடைபெற்றது. இதில் 144 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று முதல்வர் விஜய்யின் தவெக பெரும்பான்மையை நிரூப... மேலும் பார்க்க