செய்திகள் :

சட்டமன்றத் தேர்தல் 2026: அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரியில் தொடங்கிய வாக்குப்பதிவு!

post image

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் தேதியும் குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில் இதில், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இன்று (9-ம் தேதி) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பினராயி விஜயன்

கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி முன்னணி (LDF) மூன்றாவது முறையாக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யப் போராடுகிறது. அவர்களுக்குப் போட்டியாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மற்றும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) களத்தில் உள்ளன. இந்த தேர்தலில் 92 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 890 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுமார் 2.71 கோடி பேர் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற உள்ளனர்.

மக்களவைத் தேர்தலை விடவும் சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரி இம்முறை அதிக கவனம் ஈர்த்துள்ளது. ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்க முயல்கிறது. அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி பலமான வியூகம் அமைத்துள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் களமிறங்கியுள்ளதால், புதுச்சேரியில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. 30 தொகுதிகளில் உள்ள 9.48 லட்சம் வாக்காளர்கள், 294 வேட்பாளர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகிறார்கள்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

அஸ்ஸாமில் உள்ள 126 தொகுதிகளில் ஆட்சியைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. கடந்த இரண்டு முறைகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்க்கிறது. அதேசமயம், பா.ஜ.க-விற்கு தாவிய முன்னாள் காங்கிரஸ் தலைவர்களால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற காங்கிரஸ் இம்முறை தீவிரமாகப் போராடுகிறது. இந்த தேர்தல் களத்தில் 59 பெண் வேட்பாளர்கள் உட்பட 722 வேட்பாளர்கள் களமாடுகின்றனர். சுமார் 2.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறுவதற்கு லட்சக்கணக்கான பாதுகாப்புப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்த மூன்று மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் மே மாதம் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க

முழுமையாக திறக்கப்படாத ஹார்முஸ் ஜலசந்தி - ஈரான் 'இதை' மறந்ததே காரணம்!

மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது‌.ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பா... மேலும் பார்க்க

TVK Vijay: "அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்.!"- தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்க... மேலும் பார்க்க

விருதுநகரில் வெற்றி வாகை சூடுவாரா விஜய பிரபாகரன்? - எப்படி இருக்கிறது களம்?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில், தே.மு.தி.க-வின் மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்... மேலும் பார்க்க