செய்திகள் :

சட்டமன்றம்: ``முதல்வர் உங்களிடம் என்ன பேசினார்?" - அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

post image

அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, `` முதல்வர் விஜய் ஒவ்வொரு துறையையும் ஆய்வு செய்வது, மெட்ரோ ரயில் பயணம், புழல் சிறைக்குச் சென்று அங்கே பார்வையிடுவது போன்ற பல்வேறு பணிகளை வரலாற்றில் இல்லாத அளவிற்கு சென்று நேரடியாக பார்த்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவருடைய உள்ளத்திலே இருப்பது ஒன்றே ஒன்றுதான். தமிழ்நாட்டு மக்களுக்குச் சிறந்த ஆட்சியை தந்து தமிழகம் மேலும் இந்தியாவிற்கே வழிகாட்டியாக உருவாக வேண்டும் என்பதுதான். நேபாளத்தில் நடந்தவை உலகத்தையே உலுக்கியிருக்கிறது. முதல்வர் இது தொடர்பான தகவல்களை கவனித்துக்கொண்டே இருக்கிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

டெல்லிக்கு நான்கு அமைச்சரை அனுப்பி, இந்திய அரசோடு இணைந்து என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து மீட்புப் பணிகளுக்கு உதவி வருகிறார். முதல்வர் என்னிடம் அமர்ந்து என்ன பேசினார் என்பதை வெளியே சொல்வது முறையாக இருக்காது. இடம் மாறி உட்கார்ந்த அவர், எல்லோரையும் உற்சாகப்படுத்த விரும்புகிறார்.

சட்டமன்ற விவாதம் குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு நான் பதில் சொன்னால், அது விவாதமாகிவிடும். அது தேவையற்ற ஒன்று. சி ஓட்டர்ஸ் நடத்திய கருத்து கணிப்பில் அடுத்தப் பிரதமர் என்ற பட்டியலில், மோடி முதல் இடத்தையும், விஜய் மூன்றாம் இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். ஆனால், புதிதாக உருவான ஒரு கட்சியின் தலைவர், இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிப்பதெல்லாம் எந்த வரலாற்றிலும் இல்லை. எனவே, எதுவும் நடக்கலாம். இந்தியா முழுவதும் விஜய் போய் சேருவதற்கு காரணம் அவரின் திட்டங்கள்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை." என்றார்.

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க