செய்திகள் :

’சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேனா?’ - எஸ்.பி.வேலுமணி சொல்வது என்ன?

post image

அ.தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க-வில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று கோவையிலிருந்து சென்னை செல்வதற்காக எஸ்.பி. வேலுமணி, கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த எஸ்.பி. வேலுமணி, “நான் சென்னைக்குப் புதுசாவா போறேன்? வாரத்தில் 2 நாள் போகிறேன். ஒரு பரபரப்பும் இல்லை, நீங்கள்தான் பரபரப்பு பண்ணிட்டிருக்கீங்க. அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க, த.வெ.க செல்ல நீங்களே சொல்கிறீர்களா?

சென்னை போகிறேன், அவ்வளவுதான். மீடியாவில் உள்ள நீங்கள் அ.தி.மு.க-வில் நாங்க எல்லாம் இருக்கக் கூடாது என முடிவு செய்து செய்தி போடுகிறீர்களா எனத் தெரியவில்லை. காலையில் இருந்து நீங்கள்தான் பிளாஸ் நியூஸ் போடுகிறீர்கள்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் சபாநாயகரைச் சந்திக்க உள்ளீர்களா, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறீர்களா  என்ற கேள்விகளுக்கு, “எதுவாக இருந்தாலும் உங்களைக் கூப்பிடுகிறேன்” என்றபடி பதில் அளிக்காமல் சென்றார்.

எஸ்.பி. வேலுமணி
எஸ்.பி. வேலுமணி

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன.

இதன்படி கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து எஸ்.பி.வேலுமணியை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். பின்னர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் மீண்டும் கட்சியில் இணைந்த நிலையிலும், அவருக்கு பழைய பதவி வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இதனிடையே எஸ்.பி. வேலுமணிக்கு அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் என்ற மாநில அளவிலான பதவி வழங்கப்பட்டாலும், அவரது பழைய பதவியான அ.தி.மு.க-வின் கோவை புறநகர் தெற்கு மாவட்டம் என்பது, கோவை புறநகர் மத்திய மாவட்டம், புறநகர் தெற்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டு அவரது போட்டியாளர்களான செ.ம.வேலுசாமி மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல அவரது ஆதரவாளர்களுக்கு மீண்டும் பழைய பதவிகள் வழங்கப்படாததால் எஸ்.பி.வேலுமணி அதிருப்தியில் உள்ளார். இதனால் எஸ்.பி. வேலுமணி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க-வில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் எஸ்.பி. வேலுமணியின் சென்னை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம்... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க

ஈரான் Hitlist-ல் இருக்கும் தலைவர்கள்: ட்ரம்ப், நெதன்யாகு, மெலோனி... - ஈரானிய செய்தித்தாளின் லிஸ்ட்!

ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. இந்த நேரத்தில், ஈரானில் உள்ள 'ஹம்ஷஹ்ரி' என்னும் செய்தித்தாள் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஈரான் குற... மேலும் பார்க்க