செய்திகள் :

சபரிமலை: நாளை வரை திருவாபரண தரிசனம்... 20-ம் தேதி சாத்தப்படும் நடை!

post image

சபரிமலை ஐய்யப்ப சுவாமி கோயிலில் கடந்த 14-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. மண்டல கால, மகரவிளக்கு பூஜைகள் வரும் 20-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 19-ம் தேதி இரவு நடை அடைக்கும் வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பம்பா, நிலக்கல், எருமேலி, பந்தளம், வண்டிப்பெரியார் ஆகிய இடங்களில் புக்கிங் செய்யப்படுகிறது. வரும் 19-ம் தேதிவரை இந்த இடங்களில் ஸ்பாட் புக்கிங் செய்துகொள்ளலாம். 19-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். வரும் 18-ம் தேதிவரை ஆன்லைன் புக்கிங் மூலம் 50,000 பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 5,000 பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வரும் 19-ம் தேதி ஆன்லைன் முன்பதிவு மூலம் 30,000 பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 5,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி திருவாபரணம் சார்த்தி ஐயப்ப சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றன. திருவாபரணம் சார்த்தப்பட்ட கோலத்தில் ஐயப்ப சுவாமியை நாளை (பிப்ரவரி 17) வரை பக்தர்கள் தரிசிக்கலாம்.

திருவாபரணம் யாத்திரை

வரும் 18-ம் தேதி வரை பக்தர்கள் இருமுடியில் கொண்டுசெல்லும் நெய் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம். 19-ம் தேதி ஹரிவராசனம் பாடி ஐயப்ப சுவாமி கோயில் நடை அடைக்கப்பட்ட பிறகு, மாளிகப்புறம் சன்னதியில் வலிய குருதி பூஜை நடைபெறும். 20-ம் தேதி பந்தள மன்னர் குடும்பத்தின் பிரதிநிதிகள் தரிசனம் செய்வதைத் தொடர்ந்து பூஜைகள் நிறைவுபெறும். பின்னர் திருவாபரணத்துடன் பாரம்பர்ய பாதை வழியாக மன்னர் பிரதிநிதி திரும்புவார். மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.

சபரிமலையில் தரிசனத்துக்காக குவிந்த பக்தர்கள்

இதற்கிடையே சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் உண்டியலில் இருந்து பணம் திருடிய தற்காலிக ஊழியர்கள் கோபகுமார், சுனில் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்டியல் பணம் எண்ணும் இடத்தில் இருந்து பணத்தை எடுத்துவந்த அவர்களை விஜிலென்ஸ் டீம் கைது செய்தது. அவர்களின் அறைகளில் பரிசோதனை நடத்தியதில் கோபகுமாரிடம் இருந்து 13,820 ரூபாயும், இரண்டு கிராம் தங்க லாக்கெட்டும் பறிமுதல் செய்யப்பட்டன. சுனிலிடம் இருந்து 17 வெளிநாட்டு கரன்சிகளும், 12,500 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மகரவிளக்கு தரிசிக்க காட்டில் குடியிருக்கும் பக்தர்கள்; ஐயப்ப சுவாமியின் திருவாபரண யாத்திரை! - Album

சபரிமலை: மகரவிளக்கு தரிசிக்க காட்டில் விரி வைத்து பக்தர்கள் தங்கியிருக்கிறார்கள். ஐயப்ப சுவாமிக்கு சார்த்தப்படும் திருவாபரணம் யாத்திரையாக செல்லும் காட்சி. Photo Album மேலும் பார்க்க

கோபி: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் திருவிழா - அக்னி குண்டத்தில் இறங்கிய பக்தர்கள் | Album

கோபி குண்டத் திருவிழாகோபி குண்டத் திருவிழாகோபி குண்டத் திருவிழாகோபி குண்டத் திருவிழாகோபி குண்டத் திருவிழாகோபி குண்டத் திருவிழாகோபி குண்டத் திருவிழாகோபி குண்டத் திருவிழாகோபி குண்டத் திருவிழாகோபி குண்டத... மேலும் பார்க்க

”பாதுகாப்பு இல்லாத வனப்பகுதியில் செல்ல வேண்டாம்” – ஐயப்ப பக்தர்களுக்கு போலீஸார் எச்சரிக்கை!

கேரள மாநிலம், பத்தினம்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மட்டுமின்றி நாடுமுழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை புரிகிறார்கள். இந்த ஆண்டு... மேலும் பார்க்க

மண்டல பூஜை: சபரிமலை ஐயப்ப சுவாமிக்குச் சாத்தும் தங்க அங்கி ஒப்படைக்கப்பட்ட காட்சி! | Photo Album

சபரிமலை: `தங்கம் கொள்ளை வழக்கில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதா?' - அமலாக்கத்துறை விசாரணை மேலும் பார்க்க

மகாருத்ர ஹோமம்: 2026 அதிர்ஷ்ட ஆண்டாக யாரெல்லாம் கலந்து கொள்ள வேண்டும் தெரியுமா! ஜோதிட காரணங்கள்!

மகாருத்ர ஹோமம்: வாழ்வில் உண்டான அனைத்துப் பிரச்னைகளும் தீர , தீர்க்க முடியாத நோய்களைத் தீர்க்கவும், கர்மவினைகள் தீர்ந்து உயர் நிலை அடையவும், வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கும் இந்த மகாருத்ர ஹோமம் உதவும... மேலும் பார்க்க