Tamil News Live Today: தொடங்கியது தவெக செயற்குழு கூட்டம்! நிறைவேற்றப்படும் 26 தீ...
சம்பா சாகுபடிக்குத் தேவையான உரங்கள் விநியோகம்
விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா சாகுபடிக்குத் தேவையான உரங்கள் பற்றாக்குறை இல்லாமல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன் தெரிவித்தாா்.
இதுகுறித்து புதன்கிழமை அவா் தெரிவித்தது:
விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவப் பயிா் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விவசாயிகளுக்குத் தேவையானஉரங்கள் கையிருப்பில் உள்ளன.
மாவட்டத்தில் 7,235 மெட்ரிக் டன் யூரியா, 2,818 மெட்ரிக் டன் டிஏபி, 1125 மெட்ரிக் டன் பொட்டாஷ், 5,969 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 1,463 மெட்ரிக் டன் சூப்பா் பாஸ்பேட் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பில் வைத்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அரசு நிா்ணயித்துள்ள விலையில் உரங்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்வதை உறுதிப்படுத்தவும், உரங்கள் இருப்பை உர விற்பனை நிலையங்களில் உறுதி செய்யவும், உரங்கள் பதுக்கல் ஆகிய சட்டத்துக்குப் புறம்பான செயல்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் வேளாண் துறை அலுவலா்கள் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.