செய்திகள் :

"சாப்பிட்டியான்னு கேட்டேன், அதுக்கு என் மகன் வயிறு நிறைய தண்ணி குடிச்சிட்டு.!"- கலங்கிய சூரி அம்மா

post image

'விடுதலை', 'கொட்டுக்காளி', 'கருடன்', 'மாமன்', படத்தைத் தொடர்ந்து மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், 'மண்டாடி' படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூரி.

வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தைத் தயாரித்த எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

மண்டாடி
மண்டாடி

இப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பணியாற்றி இருக்கிறார்.

ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆக. 28) அன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூரியின் அம்மா, " என் மகன் இந்த மேடையில் வந்து நிற்பான் என்று கொஞ்சம்கூட நினைத்து பார்க்கவில்லை.

இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு நாள் எங்கள் ஊரில் விழா ஒன்று நடந்தது. அப்போது பலருக்கும் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தேன்.

தனது தாயுடன் நடிகர் சூரி
தனது தாயுடன் நடிகர் சூரி

அந்த நேரத்தில் என் மகன் எனக்கு போன் செய்தான். சாப்பிட்டியா பா? என்று கேட்டேன். அதற்கு அவன், வயிறு நிறைய தண்ணீர் குடித்துவிட்டு படுத்துவிட்டேன் அம்மா என்று சொன்னான்.

அதை என்னால் தாங்கவே முடியவில்லை, அப்படிப்பட்ட நிலையில் இருந்தவன் இந்த நிலைக்கு வந்திருக்கிறான்" என்று கண்கலங்கப் பேசியிருக்கிறார்.

எந்திரன் : தகர்க்கப்பட்ட எல்லைகள்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 22

`சினி'ஸ்கோப் 22எந்திரன்2000க்குப் பிறகு சுமார் 10 வருடங்கள், இந்தியாவின் பெரும்பகுதி சினிமா மார்க்கெட்டை தன்வசம் வைத்திருக்கும் இந்தி சினிமா, காதல் படங்களையும், சிறிய அளவு ஸ்பை ஆக்‌ஷன் படங்களையும் 20 ... மேலும் பார்க்க

என்ன விலை: ``என் நடிப்பை பார்த்து நிமிஷா சஜயன் எனக்கு முத்தம் கொடுத்தாங்க" - நடிகர் கருணாஸ்

சஜீவ் பழூர் இயக்கத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ் நடித்த ‘என்ன விலை’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கருணாஸ், ``25 வருஷத்துக்கு முன்னாடி, 200... மேலும் பார்க்க

Yuvan Shankar Raja: 'மீண்டும் அந்த OG கூட்டணிகள்' - எதிர்பார்ப்பைக் கூட்டம் யுவன் லைன் அப்!

முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்கள், புதுமுக இயக்குநர்களுடன் கூட்டணி என யுவன் அடுத்தடுத்து பரபரப்பான லைன்அப்களை வைத்திருக்கிறார். அப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸுக்குத் தயாராகிவருகின்றன. அந்த லைன்அப்... மேலும் பார்க்க

Sardar 2: "நல்ல பெயர் வாங்க அண்ணன் சூர்யாவை மாட்டிவிடுவேன்" - கார்த்தி ஜாலி டாக்

கார்த்தி நடித்திருக்கும் 'சர்தார் 2' படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பி.எஸ். மித்ரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடித... மேலும் பார்க்க

Mani Ratnam: 'நீ இஞ்சி, நான் வெல்லம்!' - ஒளிப்பதிவாளரை மாற்றிய மணி ரத்னம் - 'இஞ்சி வெல்லம்' அப்டேட்!

'தக் லைஃப்' படத்திற்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் படத்தின் தலைப்பை இன்று அறிவித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி, சாய் பல்லவி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொ... மேலும் பார்க்க

Ajith: ''பில்லா 2' படத்தை நான் இயக்காதது ஏன்?' - இயக்குநர் விஷ்ணுவரதன் விளக்கம்

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமாரின் 'பில்லா', 'ஆரம்பம்' போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். 'பில்லா' படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகமான 'பில்லா 2' திரைப்படத்தையும் ... மேலும் பார்க்க