செய்திகள் :

``சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு 74% அதிகரித்திருக்கிறது" - முதல்வர் ஸ்டாலின்

post image

உலகம் முழுவதும் இன்று இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டுவரும் நிலையில், இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளும், பா.ஜ.க ஆதரவாளர்களும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் இடங்களில் பிரச்னை செய்திருக்கின்றனர். மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அஸ்ஸாம், கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடர்பாக சாலைகளில் கடை வைத்து வியாபாரம் செய்யும் ஏழை,எளிய வியாபாரிகள் மிரட்டப்பட்டு கடைகள் அகற்றப்பட்டிருக்கிறது. சில இடங்களில் சர்ச் வாசல்களில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூட்டமாக அமர்ந்து பக்திப் பாடல்களைப் பாடும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது தாக்குதல்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது தாக்குதல்

இந்துத்துவ அமைப்புகளின் இதுபோன்ற செயல்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது!

பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - மாண்புமிகு பிரதமர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.

மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி

ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது.

எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்; சிபிஐ மூலம் பாஜக ஸ்கெட்ச்' - செல்வப்பெருந்தகை விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ராகுல் காந்தி நாளை நீலகிரி மாவட்டம் கூடலூர் வருகிறார்.செல்வப்பெருந்தகை பள்ளி விழா ... மேலும் பார்க்க

கோவை டு டெல்லி; குடியரசு தலைவர் தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா!

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சாமுண்டேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருணமாகி 2 மகன்கள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் பாலாஜி கட்டுமான தொழிலாளி ஆவார்.இவர்கள் இருவரும் ... மேலும் பார்க்க

TVK Vijay: 7 மணி நேர விசாரணை: சிபிஐ-யிடம் விஜய் கொடுத்த வாக்குமூலம் என்ன?

செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முன் ஆஜரானார். காலை 10.30 ... மேலும் பார்க்க

`Trump, வெனிசுலாவின் தற்காலிக அதிபர்' - ட்ரம்ப்-ன் சமூக வலைதளப் பதிவால் எழுந்த சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை "வெனிசுலாவின் தற்காலிக அதிபர்" எனப் பதிவிட்டிருக்கும் செய்தி, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில்... மேலும் பார்க்க

அதிமுக மீதான அதிருப்தி; திமுக கூட்டணியில் ராமதாஸா? - சூரியக் கட்சிக்கு ப்ளஸா... மைனஸ்ஸா?!

தனக்கு முன்பாக மகன் அன்புமணியை அழைத்துக் கூட்டணியை இறுதி செய்ததில் என்.டி.ஏ-வின் மீதும் எடப்பாடியின் மீதும் பெரும் அதிருப்தியில் இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.அதிருப்தியில் ராமதாஸ்பாமக நிறுவனர் ரா... மேலும் பார்க்க

ADMK: ``ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி" - நடிகை கௌதமி ஓப்பன் டாக்!

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் ... மேலும் பார்க்க