செய்திகள் :

சிறுமியை பாட்டி வீட்டில் விடுவதாக பைக்கில் அழைத்துச் சென்று பாலியல் வனகொடுமை; போக்சோவில் இருவர் கைது

post image

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தற்போது திங்கள்நகர் அருகே வாடகை வீட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் பிளஸ் 2 முடித்துவிட்டு கடந்த 7 மாதங்களாக கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புக்குச் சென்று வந்தார். இவர் வழக்கம்போல் கம்ப்யூட்டர் வகுப்புக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து கிளம்பி உள்ளார். ஆனால் வகுப்புக்குச் செல்லாமல் மண்டைக்காடு புதூர் தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். பிரார்த்தனை முடிந்து மதியம் திங்கள்நகர் செல்வதற்காக புதூர் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது சிறுமியின் பாட்டி வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுபாஷ் (38) பைக்கில் வந்துள்ளார். பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த சிறுமியிடம் பேச்சுக் கொடுத்த சுபாஷ், பாட்டி வீட்டில் கொண்டு விடுவதாகக் கூறி பைக்கில் ஏற்றி உள்ளார். பாட்டியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் எனக் கூறியதால் சிறுமி பைக்கில் ஏறிச் சென்றார். ஆனால் அவர் பாட்டி வீட்டுக்குச் செல்லாமல் பைக்கை நடுவூர்கரை செக்காரவிளையில் உள்ள நண்பர் ரமேஷ் (36) வீட்டுக்குக் கொண்டு சென்றார். அப்போது வீட்டில் இருந்த ரமேஷ் ஏதோ காரணம் சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டார். தொடர்ந்து சுபாஷ் சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சுபாஸ் மற்றும் ரமேஷ்

பின்னர் சிறுமியை பைக்கில் திங்கள்நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுள்ளார். அடுத்த நாள் மிகவும் சோர்வுடன் இருந்த சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த தாய், அது குறித்து விசாரித்துள்ளார். அப்போது பாட்டியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுபாஷ் பாலியல் வன்கொடுமை செய்ததைக் கூறினார். இதைக் கேட்டு அதிர்ந்த தாய் உடனடியாக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

pocso

போலீஸார் விசாரணை நடத்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சுபாஷ் மற்றும் அதற்கு உடந்தையாக வீட்டைக் கொடுத்த நண்பர் ரமேஷ் ஆகியோர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர். சுபாஷிற்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. ரமேஷுக்குத் திருமணமாகி மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். சுபாஷ் மற்றும் ரமேஷை போலீஸார் கைது செய்தனர்.

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவிப்பு!

கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த மே மாதம் 21 ஆம் தேதி தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். இதையடுத்து பெற்றோர் அளித்... மேலும் பார்க்க

துபாயிலிருந்து ஊர் திரும்பிய இளைஞர்; வீட்டு வாசலிலேயே வெட்டிக் கொலை... குமரியில் அதிர்ச்சி சம்பவம்!

கன்னியாகுமரி மாவட்டம், ​இரணியல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திங்கள்சந்தை அருகே உள்ள காட்டுவிளை சிறிய ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்தவர் உசேன். இவரது மகன் சமீம் (27). சமீமிற்கும், அதே காட்டுவிளை பகுதியைச் ... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்பில் இருந்த விசாரணைக் கைதி தப்பியோட்டம்; கவனக்குறைவாக இருந்த 3 போலீஸாரிடம் விசாரணை

தூத்துக்குடி, பனிமய மாதா பேராலயத்தின் பின்புறம் உள்ள தெருவில் வசித்து வருபவர் ராகுல். இவர், தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக உள்ளார். இவர் தனது வீட்டின் முன்பு அவரது காரை நிறுத்தி வைத்திருந்தார். ... மேலும் பார்க்க

தாராபுரம்: 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை; கைதானது TVK நிர்வாகியா? சர்ச்சையும் MLA விளக்கமும்!

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஆட்டோ ஓட்டுநர் ஹாரூன் ரஷீத், 11 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின... மேலும் பார்க்க

`பேராசை' - ரூ.8 கோடி ஆசையில் கணவன், மகனை மெல்ல சாகடிக்க சாப்பாட்டில் விஷம் கலந்த மனைவி

உத்தரப்பிரதேசத்தில் தனது கணவனின் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரை படிப்படியாக கொலை செய்யும் நோக்கில் சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்த பெண் சிக்கினார். காசியாபாத்தின் வசுந்தரா பகுதியில் வசிக்கும் சுஷில் கும... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: ராகி களியில் விஷம் வைத்து கணவர் கொலை; மனைவி கைது; என்ன நடந்தது?

ராகி களியில் விஷம் வைத்து கணவரைக் கொலை செய்ததாக மனைவி கைது செயப்பட்டுள்ள சம்பவம், தளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Murderகிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள பேலாளம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர... மேலும் பார்க்க