செய்திகள் :

"சிறையில் வாடும் ஏழை கைதிகளின் குரலாக ஒலிக்க விருப்பம்" - தொடங்கியது பேரறிவாளனின் வழக்கறிஞர் பயணம்!

post image

மரண தண்டனை விதிக்கப்பட்டு, 31 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையான ஏ.ஜி. பேரறிவாளன் (54), தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்காகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார்.

1991-ல் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 142-வது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மே 2022-ல் விடுதலை செய்யப்பட்டார்.

அதன்பிறகு, பெங்களூருவில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்கத் தொடங்கினார் பேரறிவாளன். தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்திய அவர் 2025-ல் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் அகில இந்திய பார் தேர்விலும் (AIBE) வெற்றி பெற்றார்.

பேரறிவாளன்
பேரறிவாளன்

அதைத் தொடர்ந்து, நேற்று (ஏப்ரல் 27) கறுப்பு அங்கி அணிந்து வழக்கறிஞராக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்துகொண்ட பேரறிவாளன், விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது பணியைத் தொடங்கவுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நான் ஒரு புகழ்பெற்ற கிரிமினல் வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்பவில்லை. சட்ட உதவி கிடைக்காமல் சிறையில் வாடும் ஏழை எளிய கைதிகளின் குரலாக ஒலிக்கவே விரும்புகிறேன்.

ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது போல, தண்டனைக்குப் பிந்தைய மறுஆய்வுச் சட்டங்கள் இந்தியாவிலும் வலுப்பெற வேண்டும் என்பதே எனது கனவு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

"மனுநீதியைப் படிக்க வேண்டும்" - உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

"தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் "மனுஸ்மிருதி", "அர்த்த சாஸ்திரம்" போன்றவற்றை கட்டாயமாகப் படிக்க வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தைத் திரும்பப் பெற வேண... மேலும் பார்க்க

சபரிமலை வழக்கு: 9 நீதிபதிகள் முன் விவாதிக்கப்படும் அந்த 7 கேள்விகள் என்ன? - முழு விவரம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையில், நீதிபதிகள் ... மேலும் பார்க்க

கெஜ்ரிவால் வழக்கு: `நீதிபதியின் வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாதா?' - பெண் நீதிபதி காட்டம்

டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கு பெண் ... மேலும் பார்க்க

மாதவிடாய் விடுமுறை: ``உடனடியாகவும், கட்டாயமாகவும் அமல்படுத்துக!" - கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி

கர்நாடகாவில் உள்ள அனைத்து பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் 'மாதவிடாய் விடுமுறை' (Menstrual Leave) வழங்கும் கொள்கையைத் தடையின்றி அமல்படுத்த வேண்டும் என்று ம... மேலும் பார்க்க

ரூ.5 கோடி ஜீவனாம்சம்; 80 வழக்குகள்; மனைவியின் 10 ஆண்டு போராட்டம் - பிரிவு 142-ஐ பயன்படுத்திய கோர்ட்!

பத்து ஆண்டுகளாக நீடித்த ஒரு திருமணப் பிரச்னைக்கு, ‘மகாபாரதப் போர்’ என வர்ணித்து, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி முற்றுப்புள்ளி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.பிரிந்து வாழ்ந்த தம்பதிக்கு விவாகரத்து... மேலும் பார்க்க

`மூடநம்பிக்கையைத் தடுக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லையா?' - உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு எதிராகவும், அது தொடர்பாக எழுந்துள்ள அர... மேலும் பார்க்க