செய்திகள் :

சிலிண்டரை மாற்றித்தர சொன்ன பாட்டி; கண்ணில் மிளகாய் பொடித் தூவி இரண்டரை பவுன் செயினை பறித்த நபர்!

post image

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகில் உள்ள காயிதே மில்லத் தெருவில் வசித்து வருகிறார் 80 வயதான முத்தம்மாள். கணவர் முத்துசாமி உயிரிழந்த நிலையில், முத்தம்மாள் தனியாகவே வாழ்ந்து வருகிறார். வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தி வந்த எரிவாயு நேற்று மதியம் தீரந்திருக்கிறது. மற்றொரு சிலிண்டரை பொருத்த உதவிக்கு ஆட்களை தேடியிருக்கிறார். மதிய வேளையில் அந்த தெருவில் நடந்து சென்ற நபர் ஒருவரை உதவிக்கு அழைத்திருக்கிறார். வீட்டிற்குள் சென்ற அந்த நபரும் சிலிண்டரை மாற்றிக் கொடுத்திருக்கிறார்.‌ உதவிக்கு கைமாறாக அந்த நபருக்கு டீ வைத்து கொடுத்திருக்கிறார். அதற்கிடையில் நோட்டம் விட்ட அந்த நபர் முத்தம்மாள் கண்ணில் மிளகாயைத் தூவி கழுத்தில் இருந்த தங்க நகை

யை பறித்துச் சென்றுள்ளான்.

முத்தம்மாள்

முத்தம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர், " அறிமுகம் இல்லாத நபர் ஒருவரை எதார்த்தமாக வீட்டிற்குள் அழைத்து சிலிண்டரை மாற்றச் சொல்லியிருக்கிறார். சமையலறையில் இருந்து மிளகாய் பொடியை எடுத்து தண்ணீரில் கலக்கிய அந்த நபர் பாட்டியின் கண்ணில் ஊற்றிவிட்டு கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க செயினை திருடிச் சென்றுள்ளான். தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

’சினிமாவை மிஞ்சிய சேஸிங்’-கார் மேற்கூரையில் 40கி.மீ தொங்கியபடி சென்று கடத்தல் கும்பலை பிடித்த போலீஸ்

கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் விக்னேஷ் உள்ளிட்ட காவல் துறையினர், இன்று காலை வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: "15 நாளா மகளைக் காணோம்; சீக்கிரம் கண்டுபுடிச்சு கொடுங்கய்யா" - கதறும் பெற்றோர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வசிக்கும் ராஜூ - நிர்மலா தம்பதியின் 15 வயது மகள் 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு அப்பகுதியிலுள்ள அரசு ஐ.டி.ஐ-யில் முதலாமாண்டு படித்து வந்தார். மாணவி மாயம் கடந்த 10 ஆம் ... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல்; கணித ஆசிரியர் போக்சோ-வில் கைது!

அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கணித ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ வழக்குபாப்பாரப்பட்டி ப... மேலும் பார்க்க

சிங்கப்பூர் துறைமுகத்தில் விபத்து; பலியான ராணிப்பேட்டை இளைஞரின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்!

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மேஸ்திரி மணி. இவரது மகன் வினோத் (வயது 33). இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலை... மேலும் பார்க்க

`கிரிப்டோ’ முதலீடு; பேராசையால் ஏமாற்றமடைந்த இன்ஜினீயர்; தூண்டில் போட்ட மோசடிப் பேர்வழி கைது!

வேலூர் மாவட்டம், விருப்பாட்சிபுரம் பலவன்சாத்துக்குப்பத்தைச் சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 29). பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் இன்ஜினீயராக வேலைச் செய்து வரும் பிரதீப்குமாருக்கு வாட்ஸ்-அப் மூலம... மேலும் பார்க்க

பீகார்: சுற்றுலா மையத்தில் பெண்ணைக் காலணியால் தாக்கிய கும்பல்; அதிர்ச்சி வீடியோ... போலீஸ் விசாரணை!

பீகாரில் அடிக்கடி பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் அது போன்ற இரண்டு சம்பவங்கள் நடந்தன. தற்போது மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. பீகாரின் சுற்றுலா மையம... மேலும் பார்க்க