செய்திகள் :

சிலிண்டர் தட்டுப்பாடு: "உங்களுக்கு சிலிண்டர் வேண்டுமா? நான் தருகிறேன்" - நயினார் நாகேந்திரன்

post image

திருச்சியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், "நாளை பிரதமர் தலைமையில் திருச்சி பஞ்சப்பூரில் அரசு விழா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், என்.டி.ஏ-வின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க தலைவர் அன்புமணி, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.க தலைவர் ஜி.கேவாசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர், த.ம.மு.க தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

நாளை நடைபெறும் விழா தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கான விழாவாக இருக்கும். இதில், 7 லட்சம் பேர் பங்கேற்பார்கள். பிரதமர் தலைமையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறாது. விரைவில் நாங்கள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்குவோம். தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க தான் வெல்லும் என முதலமைச்சர் கூறுகிறார்.

nainar nagenthiran
nainar nagenthiran

ஆனால், யார் வெற்றி பெறுவார்கள் என்பதைத் தீர்மானிக்கப் போவது தமிழக மக்கள்தான். தி.மு.க ஆட்சிக்கு வந்து 28 மாதம் 1000 கொடுக்கவில்லை. பாராளுமன்றத் தேர்தல் வந்ததால் அதைக் கொடுத்தார்கள். இந்தாண்டு தேர்தலால் பொங்கல் பணம் கொடுத்தார்கள்.

விஜய்யை சி.பி.ஐ விசாரணைக்கு அழைத்துள்ளது. சி.பி.ஐ , அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை சுதந்திரமான அமைப்பு. எங்கள் கூட்டணியில் புது கட்சிகள் வரலாம். ஆனால், விஜய் வருவது குறித்து நாங்கள் கருத்து கூற முடியாது.

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்பது மிகப்பெரிய பொய். நான் கேஸ் டீலர் எங்கு உங்களுக்கு சிலிண்டர் வேண்டுமோ நான் தருகிறேன். ஹோட்டல்களில் உணவுகளைக் குறைத்ததற்கும் சிலிண்டருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஹோட்டல்களில் உணவு இல்லை என எதிர்க்கட்சிக்காரர்கள் எழுதி போட்டிருப்பார்கள்.

அ.தி.மு.க தனித்துதான் ஆட்சி அமைக்கும். தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மற்ற கட்சிகள் குறித்து தி.மு.க கவலைப்பட வேண்டியதில்லை.

விஜய் தங்களுடைய கட்சியின் கொள்கை என்ன என்பதைத் தெளிவுபடுத்தி விட்டு கொள்கை எதிரி பா.ஜ.க எனக் கூறட்டும். வெறும் கொள்கை என்கிற வார்த்தையை மட்டும் கூறுவதால் அதற்கு என்ன அர்த்தம் எனத் தெரியவில்லை. சீனி என எழுதி வைத்தால் மட்டும் இனிக்காது" என்றார்.

திருச்சி: "இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை" - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

திருச்சியில் இன்று நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தனி விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று வருகை தந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவரை... மேலும் பார்க்க

"ராமதாஸால் வயது மூப்பு காரணமாக முடிவுகளை எடுக்க முடியாது" - தன் மனுவில் அன்புமணி சொல்வது என்ன?

"ராமதாஸுக்கு தற்போது 87 வயதாகிறது. வயது மூப்பு மற்றும் மருத்துவக் காரணங்களால் நிர்வாக ரீதியாக முடிவுகளை எடுக்க முடியாது. அதனால் அவர் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும்" என்று கோரி டாக்டர் அன்புமண... மேலும் பார்க்க

'நான் பெரம்பூருக்கு வரலாமாப்பா?' - நிர்வாகிகளிடம் ஜாலியாக தொகுதியை உறுதி செய்த விஜய்!

தவெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதற்கட்ட வேட்பாளர்களை நேற்று பனையூரில் நேரில் அழைத்து விஜய் பேசியிருந்தார். அப்போது விஜய் தான் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப் போவதை நிர்வாகிகள் மத்தியில் ... மேலும் பார்க்க