செய்திகள் :

"சில்க் ஸ்மிதா பேருல மக்களுக்காக உதவுறேன், ஏன்னா.!" - நெகிழும் டீக்கடை குமார்!

post image

ஈரோடு அகில்மேடு வீதியில் தேநீர் கடை நடத்தி வருபவர் குமார்.

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகரான இவர், கடந்த 20 வருடங்களாக சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

அந்த வகையில் நேற்று (டிச.3) சில்க் ஸ்மிதாவின் 66-வது பிறந்தநாளைக் கொண்டாடிய குமார் கேக், வெட்டியதோடு மட்டுமல்லாமல் 40-க்கும் மேற்பட்ட பெண்களுக்குப் புத்தாடைகளை வழங்கியிருக்கிறார்.

சில்க் ஸ்மிதா பிறந்தநாள் விழா
சில்க் ஸ்மிதா பிறந்தநாள் விழா

சில்க் ஸ்மிதா பிறந்தநாளைக் கொண்டாடிய ரசிகர்!

கிட்டத்தட்ட 200 தூய்மை பணியாளர்கள் மற்றும் முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கியிருக்கிறார்.

மேலும் சில்க் ஸ்மிதா புகைப்படம் பொருந்திய 2026 ஆம் ஆண்டிற்கான காலண்டரையும் மக்களுக்கு வழங்கியிருக்கிறார்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், குமாரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

மிகப்பெரிய ரசிகன்

"ஈரோட்டில 22 வருசமா டீ கடை நடத்தி வரேன். சில்க் ஸ்மிதாவின் மிகப்பெரிய ரசிகன் நான்.

வருஷம் வருஷம் அவுங்க பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவேன்.

சினிமாவில கவர்ச்சியா மட்டுமே காட்டின அவுங்களோட உண்மையான குணத்தையும் வாழ்க்கையில அவுங்க கஷ்டப்பட்ட சில விஷயங்களையும் கேள்விப்பட்ட பிறகு மிகப்பெரிய ரசிகராகிட்டேன்.

சில்க் ஸ்மிதா பிறந்தநாள் விழா
சில்க் ஸ்மிதா பிறந்தநாள் விழா

சில்க் ஸ்மிதா பட்ட கஷ்டம்

1992-ல வெளியான பாக்யராஜ் சாரோட 'ராசுக்குட்டி' படம் ஈரோட்டில தான் எடுத்தாங்க.

அப்போ அந்த சூட்டிங் ஸ்பாட்டில வேலை பார்த்தேன். அந்த சமயத்துல போண்டா மணி உள்ளிட்ட சிலர்கிட்ட சில்க் ஸ்மிதாவை பத்தி கேட்டு தெரிஞ்சுகிட்டேன்.

"நல்ல மனசு கொண்டவுங்க , நிறைய பேருக்கு உதவியிருக்காங்க, வாழ்க்கையில நிறைய கஷ்டப்பட்டிருக்காங்க" அப்படி'ன்னு நிறைய சொன்னாங்க.

இதெல்லாம் கேட்ட பிறகு அவுங்களுக்கு எதாச்சும் நம்ம பண்ணனும்னு நினைச்சுதான் அவுங்க பிறந்தநாளை கொண்டாடிட்டு வரேன்.

20 வருசமாக அவுங்களோட போட்டோவை கடையில வச்சுருக்கேன்.

ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவுங்க போட்டோ பொருந்திய காலண்டரை கொடுத்திட்டிருந்தேன்.

 சில்க் ஸ்மிதா பிறந்தநாள் விழா
சில்க் ஸ்மிதா பிறந்தநாள் விழா

ஒரு கட்டத்தில இல்லாதவுங்களுக்கு உதவலாம்'னு சொல்லி தூய்மைப் பணியாளர்கள், முதியவர்கள், சாலை ஓரத்தில் இருக்கிறவங்களுக்கு அன்னதானம் செய்யுறேன்.

இது எனக்கு மன திருப்தியைக் கொடுக்குது. சில்ஸ் ஸ்மிதா மேல மதிப்பும், மரியாதையும் வச்சுருக்கேன்" என்று நம்மிடம் பகிர்ந்தார்.

Alpha Beard: தாடிக்குள்ளே 26 ஆங்கில எழுத்துக்கள்; பிரிட்டன் கலைஞரின் வைரல் வீடியோ!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் தனது தாடி மற்றும் மீசையை ஆங்கில அகரவரிசையின் 26 எழுத்துக்களாக மாற்றி இணையத்தில் வைரலாக்கியுள்ளார்.'A' முதல் 'Z' வரையிலான அனைத்து எழுத்துக்களையும் தனது முகத்தில் உள்ள முடிக... மேலும் பார்க்க

``பிறந்த குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த தெருநாய்கள்'' - நன்றியுடன் பிஸ்கட் ஊட்டி மக்கள்

நாய்கள் எப்போதும் நன்றியுள்ளவை என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்து இருக்கின்றன. மேற்கு வங்க மாநிலத்தில், தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து, இரவு நேரத்தில் குளிரில் அனாதையாக விடப்பட்ட ஒரு குழந்தையை பாதுகாத... மேலும் பார்க்க

Ditwah: சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பில் மழைநீர்! | Rainy Day Roundup Photo Album

டிட்வா: "அவர்கள் மீண்டெழுந்திட துணை நிற்போம்" - இலங்கை பாதிப்பு குறித்து ஸ்டாலின் மேலும் பார்க்க

``அவரோடு வாழ முடியாது, காரணத்தை சொல்லமுடியாது'' திருமணமாகி 20 நிமிடத்தில் கணவனை பிரிந்த பெண்

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொன்னாலும், அந்தத் திருமண வாழ்க்கை சிலருக்கு நரக வாழ்க்கையாக அமைந்துவிடுகிறது. இதனால், திருமணமான சில மாதங்கள் அல்லது சில நாட்களிலேயே கூட விவாகரத்து செய்த ச... மேலும் பார்க்க

எலக்ட்ரோ ஹோமியோபதி: ``ரூ.30000 கொடுத்தால் டாக்டர் பட்டம்'' - ம.பி சட்டமன்றத்தில் சர்ச்சை

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அடல் பிகாரி வாஜ்பாய் இந்தி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. மாநில அரசுக்கு சொந்தமான இந்த பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரோ ஹோமியோபதி என்ற ஒரு மருத்துவ படிப்பு வழங்கப்பட்டு வர... மேலும் பார்க்க

Sanchar Saathi: சைபர் செக்யூரிட்டி செயலியுடன் ஸ்மார்ட்போன் தயாரிக்க மத்திய அரசு உத்தரவு

நாட்டில் டிஜிட்டல் கைது மற்றும் இணைய குற்றங்கள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது போன்ற மோசடியில் பெரும்பாலும் பெண்கள், முதியோர்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இக்குற்... மேலும் பார்க்க