செய்திகள் :

சிவகாசி: 10 ஆண்டுகளாக மூடிக்கிடந்த பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து; 3 பேர் காயம் அடைந்தது எப்படி?

post image

 விருதுநகர் மாவட்டம், சிவகாசி, அம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவருக்குச் சொந்தமான  ’திபிரில்லியண்ட்’ பட்டாசுத் தொழிற்சாலை நாரணபுரம் -  செங்கமலப்பட்டி சாலையில் செயல்பட்டு வந்தது.

உடல்நலக்குறைவால் முத்தையா  இறந்த பிறகு தொழிற்சாலையின் உரிமம் வேறு பெயருக்கு மாற்றப்படாமல் குடும்பத்திலுள்ளவர்களிடையே ஏற்பட்ட சொத்துப் பிரச்சனை காரணமாக கடந்த 10  வருடங்களாக செயல்படாமல் மூடிக்கிடக்கிறது. பூட்டிக்கிடக்கும் இந்த பட்டாசுத் தொழிற்சாலை வளாகத்தை சமூகவிரோதிகள் மது அருந்துதல் போன்ற செயல்பாட்டுக்கான கூடாரமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.  

தீ விபத்து ஏற்பட்ட அறை

இந்த நிலையில், இந்த  தொழிற்சாலையின்  அருகிலுள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஹரிபரத், சுபாஷ் மற்றும்  மாரிச்செல்வம்  ஆகிய மூன்று இளைஞர்கள், இந்த தொழிற்சாலையின் ஒரு அறையில்  புகைப்பிடித்துவிட்டு  சிகரெட்டை அணைக்காமல் அந்த சிகரெட்துண்டுகளை அப்படியே தூக்கி வீசிப் போட்டுள்ளனர். சிகிரெட் துண்டிலிருந்த நெடுப்பு பட்டு  அங்கிருந்த கழிவுபட்டாசுப் பொருள்களுடன் கிடந்த கருந்திரியில் பட்டு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த  விபத்தில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்தனர். சம்பவ இடத்தை தீயணைப்பு வருவாய் மற்றும் காவல் துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வு செய்த அதிகாரிகள்

இதுகுறித்து சிவகாசி கிழக்கு பகுதி போலீஸார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். “10 ஆண்டுகளாக இயங்காமல் இருந்த ஆலையில் கிடந்த வீரியம் மிகுந்த வேதிப்பொருளால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் ஆனாலும் அதன் வீரியத்தன்மை எப்படி உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என பட்டாசுத் தொழிலாளிகள் கூறியுள்ளனர்,.

பொள்ளாச்சி: ரூ.70,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ கைது - அதிர்ச்சி பின்னணி!

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவரது கணவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்து பணம் பெற்றுள்ளார். இத... மேலும் பார்க்க

அமைச்சர்கள் வழங்கிய உதவியை பெற மறுத்த சபரிவர்மன் குடும்பத்தினர்; மரண சந்தேகங்களை தீர்க்க கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு, நாராயணன்புதூரை சேர்ந்த சபரிவர்மன் (35) சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாற்றுத்திற... மேலும் பார்க்க

Lockup Death: ரூ.192 மதிப்புள்ள குட்காவுக்காக நடந்த கைது; சிறையில் நடந்த கொடூரம் - FIR விவரம்!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன்(35) வீட்டுக்கு அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ம் தேதி தென் தாமரைக்குள... மேலும் பார்க்க

சென்னை: ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் - டிராவல்ஸ் அதிபர் சிக்கிய பின்னணி!

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி 15.7.2026-ம் தேதி திருவல்லிக்கேணி, தசூதீன்கான் தெருவில் உள்ள லாட்ஜிக்கு தனிப்படை போலீஸா... மேலும் பார்க்க

சென்னை: குட்கா வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு - காவல் நிலையம் முற்றுகை

சென்னை சேலையூர், ஜானகிராமன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (44). இவர் மீது சேலையூர் போலீஸார் குட்கா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாலாஜியின் கூட்டாளியான ராமநாதன் என்பவரும் கைது செய்ய... மேலும் பார்க்க

சென்னை: ரயில் நிலையத்தில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் - சிக்கியது எப்படி?

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர், குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்துக்குச் சென்றார். பின்னர், ரயில் மூலம் கேரளாவுக்குச் ச... மேலும் பார்க்க