செய்திகள் :

`ஆண்டுக்கு ரூ.7,769 கோடி' - எலானிற்கு அடுத்து அதிக ஊதியம் வாங்கும் CEO!- யார் இந்த ஷங்க் மித்ரா?

post image

உலக அளவில் அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிக்கான (CEO) பட்டியலில் எலான் மஸ்க்கிற்கு அடுத்தபடியாக இந்திய வம்சாவளி அமெரிக்கரான ஷங்க் மித்ரா இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார்.

இதனை 'The Wall Street Journal' வெளியிட்டிருக்கிறது. 'வெல்டவர்' (WellTower) ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஷங்க் மித்ராவின் தற்போதைய ஆண்டு வருமானம் 821 மில்லியன் டாலர்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

இந்திய மதிப்பில் 7,769 கோடி ரூபாயை ஊதியமாகப் பெறுகிறார். இவருக்கு அடுத்தபடியாகத்தான் ஜார்ஜ் கர்ட்ஸ், ஹாக் டான் போன்ற உலகப் புகழ்பெற்ற தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளனர்.

யார் இந்த ஷங்க் மித்ரா?

ஷங்க் மித்ரா இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு முன்னணி தொழிலதிபர் ஆவார். அமெரிக்காவின் பிரபல ரியல் எஸ்டேட் முதலீட்டு நிறுவனமான வெல்டவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

மூத்த குடிமக்களுக்கான வீடுகள் மற்றும் மருத்துவக் கட்டமைப்பு சார்ந்த ரியல் எஸ்டேட் துறையில் இந்த நிறுவனம் உலகளவில் முன்னணி வகிக்கிறது.

கொல்கத்தாவில் பிறந்த ஷங்க் மித்ரா, அங்குள்ள புகழ்பெற்ற ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறார்.

அதன் பிறகு உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற அவர், உலகப் புகழ்பெற்ற கொலம்பியா பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்கிறார்.

தனது தொழில் வாழ்க்கையை புகழ்பெற்ற 'PwC' என்ற நிறுவனத்தில் தொடங்கி இருக்கிறார். அங்கு 5 ஆண்டுகள் நிதி மற்றும் வணிக ஆலோசனை பிரிவில் பணியாற்றியிருக்கிறார்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

பிறகு 2009-ல் 'பிடெலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ்' நிறுவனத்தில் அனலிஸ்ட்டாக இணைந்திருக்கிறார். தவிர சிட்டாடல் மற்றும் மில்லினியம் மேனேஜ்மென்ட் போன்ற உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களில் ரியல் எஸ்டேட் மற்றும் போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் நிபுணராகப் பணியாற்றியிருக்கிறார்.

தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு வெல்டவர் நிறுவனத்தில் இணைந்த மித்ரா, தனது அசாத்திய திறமையால் 2018-ல் முதன்மை முதலீட்டு அதிகாரியாகவும் பின்னர் 2020 அக்டோபரில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பொறுப்பேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செட்டிநாட்டின் 'டைம் மெஷின்' : 200 வருட பாரம்பரியத்தை பறைசாற்றும் அருங்காட்சியகம்!

கண்ணைப் பறிக்கும் பிரம்மாண்ட காரை வீடுகள், நாவில் உமிழ்நீர் ஊறவைக்கும் செட்டிநாட்டுச் சமையல், கணக்கு வழக்கில் கறாரான வணிகப் பாரம்பரியம்... இவைதான் செட்டிநாடு என்றவுடன் நம் நினைவுக்கு வருபவை. ஆனால், கா... மேலும் பார்க்க

16 பாஸ்போர்ட்டுகள், 245 நாடுகள்.! தற்கொலை விளிம்பிலிருந்து மொத்த உலகை சுற்றி வந்த இந்திய இசை கலைஞர்!

ஒன்றல்ல, இரண்டல்ல... மொத்தம்16 இந்திய பாஸ்போர்ட்டுகள். ஒவ்வொன்றிலும் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் குத்தப்பட்ட முத்திரைகள், விசாக்கள். அண்டார்டிகா உட்பட 245 நாடுகளுக்கும் பயணித்து, ஒரு மனிதன் சாதிக்... மேலும் பார்க்க

Lingam: 'பூவே காதல் பூக்கும் பூவே' - நடிகை திவ்ய பாரதி க்யூட் கிளிக்ஸ் | Photo Album

Lingam - Divya BharathiLingam - Divya BharathiLingam - Divya BharathiLingam - Divya BharathiLingam - Divya BharathiLingam - Divya BharathiLingam - Divya BharathiLingam - Divya BharathiLingam - Divya B... மேலும் பார்க்க

வாளேந்திய ஆக்ரோஷம்; கஞ்சா பயன்பாடு சர்ச்சை - குருத்வாராவை முற்றுகையிட்ட நிஹாங்க் சீக்கியர்கள் யார்?

உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள குருத்வாரா ஒன்றை 6 நிஹாங்க் சீக்கியர்கள் ஆக்கிரமித்தனர். அவர்கள் குருத்வாராவின் மேல் தளத்திற்கு சென்று தடுப்பு அமைத்துக்கொண்டு இருந்தனர். பார்க்கிங்... மேலும் பார்க்க