செய்திகள் :

`அவள் அந்த தவறை செய்திருந்தால், அதே மலையிலிருந்து தள்ளிவிடுங்கள்' - மணமகனை கொன்ற பெண்ணின் தாய்

post image

புனேயில் தொழிலதிபர் கேதன் அகர்வால் என்பவருக்கு ஷியா கோயல் என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இருவருக்கும் நவம்பர் மாதம் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் அதற்குள் ஷியா தனது காதலனுடன் இணைந்து கேதன் அகர்வாலை புனே அருகில் உள்ள மலை உச்சியில் இருக்கும் கோட்டைக்கு அழைத்துச்சென்று அங்கிருந்து 400 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்தார்.

இக்கொலை தொடர்பாக ஷியாவும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இக்கொலைக்கு யார் காரணம் என்பது தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றனர்.

ஷியாவிடம் நடத்திய விசாரணை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கேதனை திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்று அவரிடம் பலமுறை கூறியும், திருமணத்தை ரத்து செய்ய அவர் மறுத்துவிட்டதாக கோயல் தெரிவித்ததார். அதோடு கேதன் கொல்லப்பட வேண்டும் என்ற திட்டத்தை சேதன் தான் வகுத்ததாக ஷியா தெரிவித்துள்ளார்.

ஆனால், கேதனை கொல்லுமாறு தன்னை ஷியாதான் வற்புறுத்தியதாக சேதன் குற்றம் சாட்டியுள்ளார்," என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஆனால் இதுவரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் கொலைக்கான முழுத் திட்டமும் ஷியாவால்தான் தீட்டப்பட்டது என்பதைக் காட்டுகின்றன" என்று அந்த அதிகாரி கூறினார்.

இப்படுகொலையால் அதிர்ச்சியில் ஷியாவின் தந்தை பிரவீன் கோயல் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''எனது மகள் மீதான குற்றச்சாட்டுகளை இன்னும் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் மகள் இப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்திருப்பாள் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவள் ஒருபோதும் என்னிடம் பொய் சொன்னதில்லை. எப்போதும் சரியான பாதையையே பின்பற்றினாள்.

இருப்பினும், ஒரு தந்தையாகத் தனது உணர்வுகள் நீதிக்குத் தடையாக இருக்காது. என் மகள் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றம் நீதி வழங்குவதில் தாமதம் செய்யக்கூடாது. அவளுக்கு அதே தண்டனை வழங்கப்பட வேண்டும். ஒரு தந்தையாக, இதைத் தாண்டி என்னால் வேறு எதுவும் சொல்ல முடியாது.

அவள் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், லோஹாகட் கோட்டையில் கேதனுக்கு ஏற்பட்ட அதே கதிதான் தன் மகளுக்கும் ஏற்பட வேண்டும்''என்று கூறினார்.

ஷியாவின் தாயார் பூஜா கோயல் இது குறித்து கூறுகையில், ''அவர்கள் ஒருவருக்கொருவர் வீடியோ அழைப்பு மூலம் பேசிக்கொள்வார்கள். அடிக்கடி சந்திப்பார்கள். ஒன்றாக இருக்கும்போது மகிழ்ச்சியாகவும் காணப்பட்டனர். கேதன் எங்கள் வீட்டுக்கு வந்து இரவு உணவு கூட சாப்பிட்டிருக்கிறார்.

ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதற்கான எந்த அறிகுறியும் எங்களுக்குத் தெரியவில்லை. கேதனைத் திருமணம் செய்துகொள்ள சியாவுக்கு விருப்பமில்லை என்பதில் உண்மையில்லை. திருமணத்திற்கு முந்தைய பயணமாக பாலிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். இதற்காக சுமார் 50,000 ரூபாய் செலவு செய்து பொருட்களை வாங்கினோம்.

கேதனைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்று அவள் எங்களிடம் சொல்லியிருந்தால், திருமணத்திற்கான பொருட்களையும் ஆடைகளையும் வாங்க நாங்கள் ஏன் இவ்வளவு செலவு செய்திருக்கப் போகிறோம்?. நாங்கள் சில உண்மைகளை மறைத்துவிட்டோம் என்று கேதனின் தந்தை குறிப்பிட்டுள்ளார். அதில் உண்மையில்லை. இருவருக்கும் இடையேயான உறவில் ஏதேனும் சிக்கல் இருந்ததாகவோ அல்லது தனது மகளுக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்தது பற்றியோ தங்களுக்குச் சிறிதும் தெரியாது" என்று அவர் கூறினார்.

பெங்களூரு கொலை வழக்கில் அடுத்தடுத்து சிக்கிய காதலி, காதலன் - புதுச்சேரி போலீஸில் சிக்கியது எப்படி?

பெங்களூர் கே.எஸ்.புரத்தை சேர்ந்த சுவேதா என்ற இளம்பெண் தன்னுடைய அப்பா, அம்மா மற்றும் தங்கை உட்பட மூன்று பேரை காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார். அதன்பிறகு சுவேதாவையும் அவரது க... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயில் பணம் ரூ.7 கோடி கையாடல் - 8 பேர் அதிரடி கைது!

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டவேண்டும் என்பது இந்து அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. தற்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் உலகம் முழுவத... மேலும் பார்க்க

சிவகாசி: 10 ஆண்டுகளாக மூடிக்கிடந்த பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து; 3 பேர் காயம் அடைந்தது எப்படி?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, அம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவருக்குச் சொந்தமான ’திபிரில்லியண்ட்’ பட்டாசுத் தொழிற்சாலை நாரணபுரம் - செங்கமலப்பட்டி சாலையில் செயல்பட்டு வந்தது. உடல்நலக்குறைவ... மேலும் பார்க்க

தருமபுரி: கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; கல்லூரி பேருந்து ஓட்டுநர் மீது போக்சோ

கல்லூரியில் படித்த 18 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கல்லூரி பேருந்து ஓட்டுநர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பென்னாகரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

திமுக பிரமுகர் இல்லத்தில் 12 மணி நேரம் அமலாக்கத்துறை சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம், ​லால்குடி ஆங்கரை தூய சகாய மாதா ஆலயம் அருகே வசித்து வரும் தி.மு.க பிரமுகரான கிறிஸ்துராஜா என்பவரது இல்லத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென வருகை தந்து சோதனையில் ஈடுபட்டனர். காலை... மேலும் பார்க்க

சென்னை: அதிகாலையில் இளம்பெண் கொடூரக் கொலை; மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டு தப்பிய நபர்

பெங்களூருவைச் சேர்ந்தவர் ரேஷ்மா (29). இவரின் கணவர் அசோக். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக ரேஷ்மா, கணவர் அசோக்கைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார... மேலும் பார்க்க