செய்திகள் :

திருச்செந்தூர்: அன்னதானத்தில் வழங்கிய சாம்பாரில் புழு; பக்தர்கள் அதிர்ச்சி; வைரலான வீடியோ

post image

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

திருக்கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் காலை முதல் இரவு வரை தொடர் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் எண்ணிக்கை வரையிலான பக்தர்களுக்கு சாதம், சாம்பார் மற்றும் கூட்டு வகைகள், ரசம், மோர், அப்பளம், பாயாசம் ஆகியவை பரிமாறப்படுகின்றன.

சாம்பாரில் கிடந்த புழு
சாம்பாரில் கிடந்த புழு

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அன்னதானத்தை அருந்திச் செல்கின்றனர். இந்த நிலையில், நேற்றும் (25-ம் தேதி) வழக்கம்போல் அன்னதானம் வழங்கப்பட்டது, அப்போது மதியம் வழங்கப்பட்ட அன்னதானத்தில் கலந்து கொண்ட திருப்பூரைச் சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அன்னதானத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அதில் சாதத்துடன் ஊற்றப்பட்ட சாம்பாரில் புழுக்கள் இருந்துள்ளது.

இதைக் கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். சாம்பாரில் கிடந்த புழுக்களையும், அன்னதானக்கூடத்தில் பிற பக்தர்கள் உணவு அருந்துவதையும் தனது செல்போனால் வீடியோ எடுத்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்து அங்குள்ள பணியாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் முறையான பதில் ஏதும் தெரிவிக்காமல் அலட்சியமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பணியாளர்களின் கவனக்குறைவின் காரணமாக புழுக்கள் நெளிந்த சாம்பாரை பக்தர்களுக்குக் கொடுத்துள்ளது அன்னதானத்தை நம்பி வரக்கூடிய பக்தர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அன்னதானக்கூடம்
அன்னதானக்கூடம்

இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக திருக்கோயில் இணை ஆணையர் அருணாச்சலத்தைப் பலமுறை போனில் தொடர்பு கொண்ட போதும், அவர் நம் அழைப்பினை எடுக்கவில்லை. இதுகுறித்த குற்றச்சாட்டு சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையிலும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சம்பத்கிரி ஸ்ரீநரசிம்மமூர்த்தி: நோய்கள் தீர்க்கும் பானகம்!

நாளை என்பதே நரசிம்மருக்கு இல்லை என்பார்கள். வேண்டியவர்களுக்கு வேண்டிய கணத்திலேயே அருளும் பெருமாள் அவர். அப்படிப்பட்ட நரசிம்ம மூர்த்தி கோயில் கொண்டிருக்கும் தலங்கள் அநேகம் உள்ளன. அவற்றில் மிகவும் சிறப்... மேலும் பார்க்க

வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்குடமுழுக்கு விழா; தயாராகும் மதுரை மீனாட்சி கோயில் | Photo Album

மீனாட்சி திருக்குடமுழுக்குமீனாட்சி திருக்குடமுழுக்குமீனாட்சி திருக்குடமுழுக்குமீனாட்சி திருக்குடமுழுக்குமீனாட்சி திருக்குடமுழுக்குமீனாட்சி திருக்குடமுழுக்குமீனாட்சி திருக்குடமுழுக்குமீனாட்சி திருக்குட... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்: வினைகள் தீர்க்கும் விஸ்வரூப ஆஞ்சநேயர் சந்நிதி!

நாஞ்சில் நாட்டில் அருளும் தலங்களில் முக்கியமானது சுசீந்திரம். இங்குதான் சுவாமி தாணுமாலயனாகக் காட்சி அருள்கிறார். நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் பாதையில், நாகர்கோவிலிலிருந்து 7 கி.மீ தொலைவில... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சுப்ரமண்ய சுவாமி: நொச்சி மாலை... கடன் பிரச்னை தீர வேல் அர்ச்சனை!

முருகப்பெருமான் அருள்பாலிக்கும் மலைத்தலங்கள் எப்போதும் சிறப்பு வாய்ந்தவை. ஒருமுறை சென்று தரிசனம் செய்தாலே வாழ்வில் ஏற்றமும் மாற்றமும் நிச்சயம் கிடைக்கும். அப்படி ஒரு தலம்தான் மயிலம். விழுப்புரம் மாவட்... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: சேவைக் கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு; பக்தர்கள் அதிர்ச்சி!

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா போன்ற கட்டண சேவைகளின் தொகையை அதிகரிக்க திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பக்தர... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்ரமண்ய சுவாமி கோயில்: அஷ்டமா ஸித்திகளையும் அருளும் தலம்!

அருணகிரிப்பெருமான் வயலூரில் தரிசனம் செய்து வழிபாடுகள் செய்து முருகனை வேண்டிக்கொண்டார். அடுத்து செல்ல வேண்டிய தலம் குறித்து தியானம் செய்ய முருகப்பெருமான் வேடனாய் வந்து விராலிமலை செல்லுமாறு பணித்தாராம்.... மேலும் பார்க்க