செய்திகள் :

பெ.சண்முகம்: "போர் யானை சும்மா இருக்காது" - முரசொலிக்கு அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்

post image

முரசொலி நாளிதழில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த பெ.சண்முகம் குறித்து வெளியான கட்டுரைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "மூத்த கம்யூனிஸ்ட் தோழர் பெ.சண்முகம் குறித்து முரசொலியில் எழுதப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

பெ.சண்முகம் - CPIM மாநில செயலாளர்
பெ.சண்முகம் - CPIM மாநில செயலாளர்

இது அநாகரிக்கத்தின் உச்சம். ஏழை,எளிய மக்களுக்காக அர்ப்பணித்த பெ.சண்முகம் காவிரி கரையோரம் பிறந்து அந்தச் சிவப்புத் துண்டைத் தோளில் ஏந்தி களமாடியதையும், போராடியதையும் ஒரு புத்தகத்தில் அடக்க முடியாது.

அப்படிப்பட்ட மாமனிதரை முரசொலியில் என்ன என்னவோ எழுதி வைத்திருக்கிறார்கள். டானிக் குடித்து வளர்ந்தவர்... அவர்களைப் போல (திமுகவினர்) டாஸ்மாக் டானிக் குடித்து வளர்ந்தவரா? இவ்வளவு மோசமாக விமர்சனம் செய்கிறார்கள்.

அரசியல் என்பது நாகரிகத்தின் எல்லையில் இருக்க வேண்டும். கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் இதை வண்மையாகக் கண்டித்து இருப்பார். நாகரிக அரசியலை நோக்கி திரும்ப வேண்டும். சி.வி.சண்முகமும், பெ.சண்முகமும் ஒன்று என்று முரசொலி எழுதுகிறது என்றால் எவ்வளவு பெரிய வன்மம்.

சி.வி.சண்முகம் அவருடைய அரசியலில் அதிமுகவில் களமாடி வருகிறார். அவரைச் சிறுமைப்படுத்த பயன்படுத்துகிறீர்கள் என்றால் அவர் குறித்து உங்கள் (முரசொலி) மதிப்பீடு என்ன?

அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்

சி.வி.சண்முகத்தோடு பெ.சண்முகத்தை ஒப்பீடு செய்வதால் பெ.சண்முகத்தின் மதிப்பீடு என்ன? தவெக சார்பில் இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறோம். சிவப்புத் துண்டை இதுபோல சிறுமைப்படுத்தினால் இரட்டைப் போர் யானை சும்மா இருக்காது.

மூத்த கம்யூனிஸ்ட் தோழரை ஒன்று, இரண்டு, மூன்று என சிந்துபாத் கதை போல வன்மத்தைக் கக்குவது முறையா? அனைவரும் நாகரிகத்தின் எல்லையைக் கருதி அதோடு நிற்க வேண்டியது கடமை" என்று தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

'CM சும்மா 50மீ ஓடுவாருன்னு நினைச்சோம்.!' - முதல்வருடன் மாரத்தானில் ஓடிய வீராங்கனைகள் நெகிழ்ச்சி!

'ஸ்டார்ட் ரன் ஸ்டாப் ட்ரக்ஸ்' என்ற பெயரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இன்று காலை நடத்திய மாரத்தான் ஓட்டத்தில் தமிழக முதல்வர் விஜய்யும் கலந்து கொண்டிருந்தார். மாரத்தானில் முதல்வரோடு சேர்ந்த... மேலும் பார்க்க

`ஏன் அமைச்சர் கீர்த்தனா பெயரை முதலில் போட்டுள்ளீர்கள்?' - ஆட்சியரிடம் காட்டமான அமைச்சர் ஜெகதீஸ்வரி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலம்ப விளையாட்டில் சிறந்து விளங்கும் சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிக்கும் விழா இன்று காலை தொடங்கியது. இந்த விழாவுக்காக மேடையில் அமைக்கப்பட்டுள்ள பேனரில்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: கிடப்பில் போடப்பட்ட நிதி ஒதுக்கீடும் எட்டு மாதங்கள் கழித்து தொடங்கிய பணியும்!

மயிலாடுதுறை மாவட்டம் மாதிரிவேளூர் ஊராட்சி பூங்குடி கிராமத்தில் 1952- இல் தொடக்கப்பள்ளி ஒன்றானது தொடங்கப்பட்டது.இப்பள்ளியானது 2008இல் மீணடும் மறுசீரமைக்கப்பட்டு, அப்பகுதி மாணக்கர்களின் தொடக்ககல்விக்கு ... மேலும் பார்க்க

மாவட்ட நிர்வாகம் டு காலநிலை மாற்றம்! முதல்வர் விஜய் தலைமையில் 2 நாள் IAS, IPS, IFS அதிகாரிகள் மாநாடு

முதலமைச்சர் விஜய் தலைமையில் மாநிலம் முழுவதிலுமிருந்து IAS, IPS மற்றும் IFS அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் உயர்மட்ட மாநாடு, வரும் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற... மேலும் பார்க்க

அதிகாரமில்லா அலங்காரப் பதவிகளா? சி.வி.சண்முகம் தவிர்ப்பு! அதிமுக அதிருப்தி முகாமில் மீண்டும் ஆலோசனை

தவெக அரசுக்கு ஆதரவாகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தில் வாக்களித்த விவகாரத்தைத் தொடர்ந்து, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் இருந்து கட்சிப் பொறுப்புக... மேலும் பார்க்க

செவ்வந்தி இல்லம்: 15 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு பங்களாவை காலி செய்தார் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வந்த சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள அரசு பங்களாவான ‘செவ்வந்தி இல்லம்’ வீட்டை காலி செய்து, ராயப்பேட்டையில் அதிமுக தலைமையக... மேலும் பார்க்க