செய்திகள் :

ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கி பிடிபட்ட பெண் தாசில்தார்; வீட்டில் ரூ.5 கோடி, தங்கம், வைரம் பறிமுதல்!

post image

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தாசில்தாராகவும், இணை பத்திர பதிவாளராகவும் இருப்பவர் தும்மகொம்மா சுசரிதா. இவர் சமீபத்தில் ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் தங்கம், வைரம், ரொக்க பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனைகளின்போது, ​​சித்திபேட்டில் 2.17 ஏக்கர் விவசாய நிலம், ஐதராபாத்தில் 3 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 2 மனைகள், ஒரு வோல்ஸ்வேகன் மற்றும் ஒரு ஹூண்டாய் கிரெட்டா கார், ரூ. 1.2 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ. 12 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 38 லட்சம் வங்கி வைப்புத்தொகை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 5.05 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அவற்றின் சந்தை மதிப்பு இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சுசரிதா தனது வருமானத்திற்கு அதிகமாக லஞ்சம் மற்றும் ஊழல் மூலம் கிடைத்த பணத்தில் ஐதராபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை மதிப்பீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதால் சுசரிதா மீதான பிடி மேலும் இறுகி இருக்கிறது. தற்போது அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு கொலை வழக்கில் அடுத்தடுத்து சிக்கிய காதலி, காதலன் - புதுச்சேரி போலீஸில் சிக்கியது எப்படி?

பெங்களூர் கே.எஸ்.புரத்தை சேர்ந்த சுவேதா என்ற இளம்பெண் தன்னுடைய அப்பா, அம்மா மற்றும் தங்கை உட்பட மூன்று பேரை காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார். அதன்பிறகு சுவேதாவையும் அவரது க... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயில் பணம் ரூ.7 கோடி கையாடல் - 8 பேர் அதிரடி கைது!

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டவேண்டும் என்பது இந்து அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. தற்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் உலகம் முழுவத... மேலும் பார்க்க

`அவள் அந்த தவறை செய்திருந்தால், அதே மலையிலிருந்து தள்ளிவிடுங்கள்' - மணமகனை கொன்ற பெண்ணின் தாய்

புனேயில் தொழிலதிபர் கேதன் அகர்வால் என்பவருக்கு ஷியா கோயல் என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இருவருக்கும் நவம்பர் மாதம் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் அதற்குள் ஷியா தனது காதலனுடன்... மேலும் பார்க்க

சிவகாசி: 10 ஆண்டுகளாக மூடிக்கிடந்த பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து; 3 பேர் காயம் அடைந்தது எப்படி?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, அம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவருக்குச் சொந்தமான ’திபிரில்லியண்ட்’ பட்டாசுத் தொழிற்சாலை நாரணபுரம் - செங்கமலப்பட்டி சாலையில் செயல்பட்டு வந்தது. உடல்நலக்குறைவ... மேலும் பார்க்க

தருமபுரி: கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; கல்லூரி பேருந்து ஓட்டுநர் மீது போக்சோ

கல்லூரியில் படித்த 18 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கல்லூரி பேருந்து ஓட்டுநர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பென்னாகரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

திமுக பிரமுகர் இல்லத்தில் 12 மணி நேரம் அமலாக்கத்துறை சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம், ​லால்குடி ஆங்கரை தூய சகாய மாதா ஆலயம் அருகே வசித்து வரும் தி.மு.க பிரமுகரான கிறிஸ்துராஜா என்பவரது இல்லத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென வருகை தந்து சோதனையில் ஈடுபட்டனர். காலை... மேலும் பார்க்க