செய்திகள் :

`எனக்கெதிராகப் போராட்டம் நடத்தினால் சுடுகாட்டுக்கு தான் போவீர்கள்!'- அணிமாறிய உத்தவ் எம்.பி மிரட்டல்

post image

மகாராஷ்டிராவில் சமீபத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து 6 எம்.பி.க்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு தாவினர். அவர்களுக்கு மாநில அரசு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு கொடுத்து இருக்கிறது. 6 எம்.பி.க்களுக்கு எதிராக அவர்களது தொகுதியில் ஆங்காங்கே போராட்டங்கள் நடக்கிறது. அதுபோன்று போராட்டம் நடத்துபவர்களை அணி மாறிய எம்.பி.க்களில் ஒருவரான சஞ்சய் தினா பாட்டீல் மிரட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் போராட்டக்காரர்களை பார்த்து, தனக்கு எதிராக போராட்டம் நடத்தினால் சுடுகாடு அல்லது மருத்துவமனைக்குத்தான் செல்வீர்கள் என்று மிரட்டி இருக்கிறார். அவரது மிரட்டலை தொடர்ந்து உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவுத் அவரை கைது செய்யவேண்டும் என்று போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

சஞ்சய் ராவுத்

அப்புகாரில், சஞ்சய் தினா பாட்டீல் தனக்கு எதிராகப் போராடும் பொதுமக்களை அச்சுறுத்தியதாகவும், அவரை எதிர்ப்பதற்கு முன் மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடு எடுக்குமாறு கூறியதாகவும் ராவுத் தனது புகாரில் குற்றம் சாட்டினார்.

மேலும் ஐந்து பேரைக் கொலை செய்ததாக பாட்டீல் கூறியதாகவும் சஞ்சய் ராவுத் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட அந்த 5 பேர் யார், எப்போது கொல்லப்பட்டனர், எதற்காக கொல்லப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சஞ்சய் ராவுத் தனது புகாரில் கோரினார். பாட்டீல் அவ்வாறு குறிப்பிட்டு இருந்தால் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். போராட்டக்காரர்கள் மீது வெடிகுண்டுகளை வீசி அவர்களது வீடுகளுக்குள் நுழையப் போவதாகவும் பாட்டீல் மிரட்டியுள்ளார்.

ஒரு எம்.பி.யிடமிருந்து வரும் இத்தகைய அச்சுறுத்தல் தீவிரமான கவலையாக இருந்தது. தீவிரவாத தடுப்பு படையின் உதவியோடு சஞ்சய் தினா பாட்டீலை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் கோரினார். போராட்டக்காரர்கள் மட்டுமல்லாது பத்திரிகையாளர்களையும் சஞ்சய் தினா பாட்டீல் மிரட்டினார். இதற்காக பின்னர் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

சஞ்சய் தினா பாட்டீலின் மிரட்டல் குறித்து ஆதித்ய தாக்கரே அளித்த பேட்டியில்,''அவருக்கு (பாட்டீலுக்கு) தைரியம் இருந்தால், அவர் எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும்''என்று தெரிவித்தார்.

`மூக்கைப் பிடிச்சிக்கிட்டு நிற்க வேண்டியிருக்கு' - கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அவல நிலை!

தென்மாவட்டங்களுக்கான பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, கோயம்பேடு பேருந்து நிலையம் சற்றே பொலிவிழந்திருப்பது உண்மைதான்ஆனால், இன்னமும் சென்னைக்குள்ளும், புறநகர்ப் பகுதிகளுக்கும... மேலும் பார்க்க

'அது போதைப்பொருள் இல்லங்க; குழந்தையோட மாத்திரை!' - விளக்கும் தவெக அமைச்சர் சரத்!

தவெக அரசின் மனிதவளத்துறை அமைச்சரான சரத் போதைப் பொருள் பயன்படுத்துவதை போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில், இப்போது அமைச்சர் சரத் அந்த வீடியோ குறித்த விளக்கத்தை கூறியிருக்கிற... மேலும் பார்க்க

பெ.சண்முகம்: "போர் யானை சும்மா இருக்காது" - முரசொலிக்கு அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்

முரசொலி நாளிதழில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த பெ.சண்முகம் குறித்து வெளியான கட்டுரைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவ... மேலும் பார்க்க

'CM சும்மா 50மீ ஓடுவாருன்னு நினைச்சோம்.!' - முதல்வருடன் மாரத்தானில் ஓடிய வீராங்கனைகள் நெகிழ்ச்சி!

'ஸ்டார்ட் ரன் ஸ்டாப் ட்ரக்ஸ்' என்ற பெயரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இன்று காலை நடத்திய மாரத்தான் ஓட்டத்தில் தமிழக முதல்வர் விஜய்யும் கலந்து கொண்டிருந்தார். மாரத்தானில் முதல்வரோடு சேர்ந்த... மேலும் பார்க்க

`ஏன் அமைச்சர் கீர்த்தனா பெயரை முதலில் போட்டுள்ளீர்கள்?' - ஆட்சியரிடம் காட்டமான அமைச்சர் ஜெகதீஸ்வரி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலம்ப விளையாட்டில் சிறந்து விளங்கும் சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிக்கும் விழா இன்று காலை தொடங்கியது. இந்த விழாவுக்காக மேடையில் அமைக்கப்பட்டுள்ள பேனரில்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: கிடப்பில் போடப்பட்ட நிதி ஒதுக்கீடும் எட்டு மாதங்கள் கழித்து தொடங்கிய பணியும்!

மயிலாடுதுறை மாவட்டம் மாதிரிவேளூர் ஊராட்சி பூங்குடி கிராமத்தில் 1952- இல் தொடக்கப்பள்ளி ஒன்றானது தொடங்கப்பட்டது.இப்பள்ளியானது 2008இல் மீணடும் மறுசீரமைக்கப்பட்டு, அப்பகுதி மாணக்கர்களின் தொடக்ககல்விக்கு ... மேலும் பார்க்க