செய்திகள் :

தொடரும் நெல் மூட்டைகளில் முளைப்பு பிரச்னை: தடுப்பதற்கான 6 தீர்வுகள் இதோ!

post image

நெல் கொள்முதல் நிலையங்களிலும், களங்களிலும் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள் தற்போது மழையில் நனைந்ததால், அதில் முளைப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளன.

இது புதிது அல்ல. ஒவ்வொரு மழைக்காலத்திலும் இது தமிழ்நாட்டிற்கு மிகவும் பழகிய காட்சியே.

ஆனாலும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் இன்னும் எந்தவித தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டின் பிரதான உணவே அரிசி. ஆனால், அரிசி உற்பத்தியில் தமிழ்நாடு தன்னிறைவு அடையவில்லை. அதனால், அரிசியை பிற மாநிலங்களில் இருந்தும் வாங்குகிறது தமிழ்நாடு.

இளங்கீரன்
இளங்கீரன்

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகும் நெற்களில் முளைப்பு ஏற்படுவது போல அஜாக்கிரதையாக இருப்பது மிகப்பெரிய பிரச்னை அல்லவா?

இதனால், மழையின் போது நெல் முளைப்பு ஏற்படாமல் இருக்க, அரசு தரப்பில் இருந்து என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கிற கேள்வியை காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கே. வீ. இளங்கீரனிடம் முன்வைத்தோம்.

"1. கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்த உடனே மில்லுக்கு எடுத்துச் சென்றுவிட வேண்டும். மில்களில் நெல்லை சேமிப்பதற்கான வசதிகள் இருக்கும். அதனால், மழை பெய்தாலும், நெல் மூட்டைகள் பாதுகாப்பாக இருக்கும்.

2. அரசாங்கம் குறைந்த அளவிலான மில்களிலேயே அரவைக்கு நெற்களைக் கொடுக்கிறது. இதுவும் கொள்முதல் நிலையங்களிலும் நெல் தேங்கிவிடுவதற்கான முக்கிய காரணம். அதனால், அரவைக்கான மில்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

3. சில மில்களில் 2 லட்சம் டன் அளவிற்கு அரவைத் திறன் இருக்கும். ஆனால், அந்த மில்களில் குறைந்த அளவிலேயே அரவை நெல் வழங்கப்படுகின்றன. இதுவும் தவிர்க்கப்பட வேண்டும்.

நெற்கதிர்கள்
நெற்கதிர்கள்

4. கொள்முதல் செய்த நெற்களை திறந்தவெளியில் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கட்டி முடிக்கப்பட்டு இன்னும் திறக்காத அல்லது பயன்படுத்தப்படாத அரசாங்க கட்டடங்கள் பல இருக்கின்றன. அங்கே கொள்முதல் செய்த நெற்களை வைக்கலாம்.

5. கொள்முதல் செய்யும் காலங்களில், கொள்முதல் நிலையங்களில் மழை பெய்தால் நனையாதப்படி நெற்களை சேமிக்கும் தற்காலிக ஏற்பாட்டை நிச்சயமாக அரசாங்கம் செய்ய வேண்டும். இது மிக மிக அடிப்படையான விஷயமாகும்.

6. இதையெல்லாம் விட முக்கியமான மற்றும் நிரந்தரமான தீர்வு, போர்கால அடிப்படையில், அரசாங்கம் திறந்தவெளி கொள்முதல் நிலையங்களைக் குறைத்து, பாதுகாப்பான கொள்முதல் நிலையங்களைக் கட்டி முடிக்க வேண்டும்.

மில் - அதிகாரிகள் பிரச்னை!

கடந்த குறுவை பயிர்கால நெல்லை கொள்முதல் செய்து திறந்த வெளியில் வைத்ததால் மழை மற்றும் வெயிலில் நெல்லின் தரம் மற்றும் நெல்லின் கலர் மாறிவிட்டது . அதனை மில்கள் அரவை செய்யும் போது, அரிசி சற்று நிறம் மாறி வந்திருக்கின்றன.

ஆனால், அதிகாரிகள் வெள்ளையாகத் தான் அரிசி வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். நெல் எப்படி இருக்கிறதோ, அப்படி தான் அரிசி கிடைக்கும்.

செறிவூட்டப்பட்ட அரிசி
செறிவூட்டப்பட்ட அரிசி

இதனால், மில்களுக்கும், அரசாங்கத்திற்கும் சிறிய பிரச்னை நடந்து வருகிறது. இதனாலும், கொள்முதல் நிலையங்களில் நெல் தேக்கமடைந்துள்ளது.

இந்தப் பிரச்னையை சீக்கிரம் களைந்தால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் நிலையம்... கொள்முதல் நிலையத்தில் இருந்து மில்... மில்லில் இருந்து அரிசியாக நுகர்வோருக்கு செல்லும்.

செறிவுட்டபட்ட அரிசியை மத்திய அரசு அனுப்பாததால் அரவை 4 மாதத்திற்கு நிறுத்தப்பட்டது.

இப்படி அரசாங்க தரப்பிலும் சில தவறுகளும், பிரச்னைகளும் இருக்கின்றன. அதனால், நெற்கள் அரவைக்கு போகாமல், கொள்முதல் நிலையங்களிலேயே தங்கிவிடுகின்றன.

இப்படியான அரசு தரப்பிலான பிரச்னைகளையும் சீக்கிரம் களைய வேண்டும்.

மதுரை: வறட்சியின் பிடியில் சாத்தையாறு அணை; விவசாயிகள் வேதனை | Photo Album

சாத்தையாறு அணைசாத்தையாறு அணைசாத்தையாறு அணைசாத்தையாறு அணைசாத்தையாறு அணைசாத்தையாறு அணைசாத்தையாறு அணைசாத்தையாறு அணைசாத்தையாறு அணைVijay: "கர்நாடகம் சென்ற விஜய் காவிரி நீரைக் கொண்டு வருவாரா?" - தவெக அரசுக்... மேலும் பார்க்க

பசுமை சந்தை!

விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது, வாங்குவது தொடர... மேலும் பார்க்க

பிஎம் கிஷான் திட்டத்தில் சீர்திருத்தம் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் நலன் கருதி, ‘பிஎம் கிஷான்’ என்ற பெயரில் உழவர்கள் வெகுமதித் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ்,... மேலும் பார்க்க

”பயிர்க்கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்” - விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

தஞ்சாவூரில் பயிர்க்கடன்களை முழுமையாக தமிழக அரசு தள்ளுபடி செய்யக் கோரி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் எல்.பழனியப்பன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் விவசாய... மேலும் பார்க்க

`கிலோ 5 ரூபாய்க்கு விற்கும் மாம்பழம்' குப்பையில் கொட்டும் விவசாயிகள் - திண்டுக்கல்லில் தொடரும் சோகம்

தமிழகத்தில் சேலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் மாம்பழங்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு அல்போன்சா, பங்கனபள்ளி, இமாம் பசந்த் உள்ளிட்ட உயர் ரக மாம்பழங்களும், ... மேலும் பார்க்க