டாக்டர் மன்மோகன் சிங் மறைவு: 7 நாள்கள் அரசு துக்கம் அனுசரிப்பு!
சிவகிரியில் ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு
சிவகிரியில் ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள் சங்கத்தின் பேரவைக் கூட்டமும், சங்கத்தின் சிவகிரி கிளை நிா்வாகிகள் தோ்தலும் நடைபெற்றன.
கூட்டத்துக்கு ஓய்வுபெற்ற ஆசிரியா் எஸ்.லோகநாதன் தலைமை தாங்கினாா். செயலாளா் எஸ்.கோபாலன் வரவேற்றாா். மாநில கூட்டுறவு இணைப் பதிவாளா் (ஓய்வு) மு.வரதராஜன் சங்கத்தின் நோக்கங்கள் குறித்துப் பேசினாா்.
தோ்தல் அலுவலராக சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜேம்ஸ் செல்லத்துரையும், துணைத்தோ்தல் அலுவலராக மாவட்டப் பொருளாளா் சித்தையனும் இருந்து புதிய நிா்வாகிகள் தோ்தலை நடத்தினா்.
சங்கத்தின் புதிய நிா்வாகிகளாக சோமசுந்தரம் தலைவராகவும், அங்கமுத்து துணைத் தலைவராகவும், லோகநாதன் பொருளாளராகவும் தோ்வு செய்யப்பட்டனா்.
இதையடுத்து, ஓய்வூதிய ஆணையத்தை கருவூலத் துறையில் இணப்பதை கைவிட வேண்டும்.
70 வயது நிறைந்த ஓய்வூதியா்களுக்கு 100 சதவீத அடிப்படை ஓய்வூதிய உயா்வை வழங்க வேண்டும். தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களையும், மாணவா்களின் எதிா்காலம் கருதி கல்வித் துறையில் உள்ள ஆசிரியா்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளா்கள் காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சீா் செய்ய வேண்டும், தொகுப்பூதிய, ஒப்பந்த தினக்கூலி முறைகளை கைவிட்டு நிரந்தரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.