செய்திகள் :

"சீக்கிரம் ஈரான் போர் முடிய வேண்டும்; இல்லை, எங்களுக்கு 'இது' கிடைக்காது" - ஜெலன்ஸ்கி

post image

ரஷ்யா - உக்ரைன் போர்‌ குறித்து பேசி கொண்டிருந்தவர்கள்... பேசாதவர்கள் என அனைத்து தரப்பும் இப்போது ஈரான் போர் குறித்து பேசுகிறார்கள்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உக்ரைன் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியே நீண்ட நாள்கள் ஆகிவிட்டன.

ஐரோப்பிய நாடுகளும் இப்போது ஈரான் போர், அதனால், தங்களுக்கு ஏற்படும் தாக்கம் பற்றி பேசி கொண்டிருக்கின்றனர்...‌ அதற்கு எதிர்வினையாற்றி கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
புதின் - அமெரிக்கா - ஜெலன்ஸ்கி
புதின் - அமெரிக்கா - ஜெலன்ஸ்கி

அதில் அவர், "ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்தால், உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுத்து வரும் ஆதரவு குறைந்துவிடும்.

உக்ரைன் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஏவுகணையை வெகுவாக நம்பியுள்ளது. ஏற்கெனவே, இவை உக்ரைனுக்கு குறைந்த அளவில் தான் கொடுக்கப்படுகின்றன. இந்தப் போர் தொடர்ந்தால், இந்த எண்ணிக்கை இன்னும் குறையும்.

இந்த ஏவுகணைகள் மூலம் ரஷ்யா ஏவும் ஏவுகணைகளிடம் இருந்து உக்ரைனைப் பாதுகாத்து வர‌ முடிகிறது.

இப்போது இன்று உக்ரைன் யாருக்கும் முன்னுரிமையாக இல்லை. அதனால் தான், இந்தப் போர்‌ நீடித்தால் உக்ரைனுக்கு குறைந்த ஆதரவே கிடைக்கும் என்று பயமாக இருக்கிறது" என்று பேசியுள்ளார்.

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க

முழுமையாக திறக்கப்படாத ஹார்முஸ் ஜலசந்தி - ஈரான் 'இதை' மறந்ததே காரணம்!

மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது‌.ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பா... மேலும் பார்க்க

TVK Vijay: "அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்.!"- தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்க... மேலும் பார்க்க

விருதுநகரில் வெற்றி வாகை சூடுவாரா விஜய பிரபாகரன்? - எப்படி இருக்கிறது களம்?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில், தே.மு.தி.க-வின் மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்... மேலும் பார்க்க