செய்திகள் :

சீர்காழி: மனைவி, மகனைக் கொன்றுவிட்டு தந்தை தற்கொலை; மகளின் வளைகாப்பு நாளில் நடந்த கொடூரம்

post image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜலேந்திரன்(58) மீனவர். முன்னாள் கிராமத் தலைவர். இவரது மனைவி மலர்செல்வி(48). இவர்களது மகள் அனு(29) மகன் அதிகுணன்(25). ஜலேந்திரனுக்கும், மலர்செல்விக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

மலர்செல்வி
மலர்செல்வி

இந்நிலையில், மலர்செல்வியும், அதிகுணனும் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது ஜலேந்திரன் தூங்கி கொண்டிருந்த மகன் அதிகுணனை இரும்பு பைபால் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் அடித்துள்ளார்.

வலி தாங்காமல் அதிகுணன் அலறியதுடன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தூங்கி கொண்டிருந்த மலர்செல்வி மகனின் அலறல் சத்தம் கேட்டு எழுந்து வந்துள்ளார்.

அப்போது மகனை தன் கணவர் ஜலேந்திரன் அடித்து கொலை செய்ததைக் கண்டு கதறியிருக்கிறார். இதையடுத்து, ஜலேந்திரன் அதே இரும்பு பைபால் மலர்செல்வியையும் அடித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் வீட்டுக்குப் பின் பகுதியில் இருந்த மரத்தில் ஜலேந்திரனும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சோகத்தில் உறவினர்கள்
சோகத்தில் உறவினர்கள்

விடிந்ததும், ஜலேந்திரன் தூக்கில் தொங்குவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். போலீஸார் வந்து பார்த்து விசாரணை நடத்தியபோது மனைவியையும், மகனையும் அடித்து கொலை செய்து விட்டு ஜலேந்திரனும் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. ஒரே குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி. சினேகா பிரியா நேரில் விசாரணை மேற்கொண்டார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பேசும்போது, ''ஜலேந்திரன் வெளிநாட்டில் வேலை செய்தவர். ஊருக்கு வந்ததில் இருந்து மலர்செல்விக்கும், ஜலேந்திரனுக்கும் சண்டை நடக்கும்.

மலர்செல்வி மீதான சந்தேகத்தில் ஜலேந்திரன் அடிக்கடி சண்டை போட்டு வந்தார் என்கிறார்கள். எப்போதும் வீட்டுக்குள் சண்டை சச்சரவாகவே இருக்கும்.

தற்கொலை செய்து கொண்ட ஜலேந்திரன்
தற்கொலை செய்து கொண்ட ஜலேந்திரன்

மகள் அனுவிற்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆவதாகத் தெரிகிறது. இன்று வளைகாப்பு நடக்க இருந்தது. வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வந்ததுடன், சொந்த பந்தங்களையும் அழைத்திருந்தனர்.

இந்நிலையில், என்ன நடந்தது என்று தெரியவில்லை. மனைவி, மகனைக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். வளைகாப்பு நடக்க இருந்த தன் மகளைக் கூட நினைத்து பாக்காமல் இப்படிச் செய்து விட்டார்'' என்றனர்.

ஒரு வீடியோவுக்கு ரூ.400; வாடகை ஐடியில் வலம் வந்த சிவகங்கை ரவுடிகள்! - கண்டுபிடித்த காவல்துறை

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே உள்ள மேலமங்கலத்தில் கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி பிரபல ரவுடி சுள்ளான் மதன் கொல்லப்பட்டார். இந்த படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: சாலையோரம் வெட்டி வீசப்பட்ட இளைஞர்; கூட்டாளிகளுடன் சிக்கிய நண்பன்; நடந்தது என்ன?

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகேயுள்ள வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான ஜீவா என்கிற தமிழ்வாணன். இவர் கடந்த 21-ம் தேதி இரவு, வன்னிவேடு பகுதி தேசிய நெடுஞ்சாலையோரமாக வெட்டிக் கொலை செய... மேலும் பார்க்க

'ஆடம்பர ரெஸ்டாரண்ட், சொகுசு கார்' - திருமணம் செய்வதாக 20 பெண் கான்ஸ்டபிள்களை ஏமாற்றிய இளைஞர்

டெல்லியைச் சேர்ந்த விக்ராந்த் தோமர் என்ற வாலிபர் தன்னை பணக்காரத் தொழிலதிபர் போன்று காட்டி இன்ஸ்டாகிராமில் அதிக அளவில் பதிவுகளை வெளியிட்டார். அதோடு தனக்கு ஆடம்பர ரெஸ்டாரண்ட்கள், சொகுசு கார்கள் இருப்பது... மேலும் பார்க்க

கேரளம்: கள்ளநோட்டு அச்சடிக்கும் மையம் கண்டுபிடிப்பு; அச்சடிக்க தயாராக இருந்த தாள்கள் பறிமுதல்

கேரள மாநிலம் ​கொல்லம் வாடி கல்லேலிவயல் புரயிடம் பகுதியைச் சேர்ந்தவர் சிபியோன். இவர் கடந்த 16-ம் தேதி திடீரென மாயமானதாகவும், அவரை ஒரு கும்பல் கடத்திச் சென்றுவிட்டதாகவும் கூறி போலீஸில் புகார் அளிக்கப்பட... மேலும் பார்க்க

மும்பை: தீவிரவாத அமைப்போடு தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் நபர் கைது; பின்னணி என்ன?

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது உடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். மொகமத் ஹசன் அபு அக்பர் என்ற அந்த நபர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக... மேலும் பார்க்க

கணவன்-மனைவி பிரச்னையைத் தீர்ப்பதாக நடித்த போலீஸ் ஏட்டு; இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கியது அம்பலம்

கன்னியாகுமரி மாவட்டம் ​கருங்கல் அருகே நடுத்தேரி பிலாவிலையைச் சேர்ந்தவர் ஷாலினி (37). இவரது கணவர் ஜோசப் மெசியா தாஸ். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜோசப் மெசியா தாஸ் தற்போது வெளிநாட்டில் வ... மேலும் பார்க்க