விருதுநகர்: அறுவடை காலத்தில் தொடரும் அவதி; அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க வி...
"சுதா மேம் கொடுத்த பாராட்டு; எஸ். கே என்ஜாய் செய்த மொமன்ட் " - 'பராசக்தி' கலை இயக்குநர் ஷேரிங்ஸ்
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் நடித்திருக்கும் 'பராசக்தி' பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
1960-களில் நடந்த மொழிப்போர் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது இந்த 'பராசக்தி'.
1960களில் நடக்கும் கதை என்பதால், படத்திற்கு பீரியட் உணர்வைக் கொண்டு வர பெரும் சிரத்தை கொடுத்து உழைத்திருக்கிறார் படத்தின் கலை இயக்குநர் கார்த்திக் ராஜ்குமார்.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 'பராசக்தி' திரைப்படம் குறித்தான கண்காட்சியையும் படக்குழுவினர் அமைத்திருக்கிறார்கள்.
அதற்கான செட் அமைத்ததும் இவர்தான். அந்தக் கண்காட்சியிலேயே வைத்து கார்த்திக்கை பேட்டி கண்டோம்.
நம்மிடையே பேசிய அவர், "வணக்கங்க! கண்காட்சியை மக்கள் ரொம்பவே என்ஜாய் பண்றாங்க. 'பராசக்தி' உலகத்தைக் கட்டமைக்கிறதுக்குப் பின்னாடி பெரிய உழைப்பு நிறைந்திருக்கு. அதை மக்கள் தெரிஞ்சுக்கணும்னுதான் இந்த செட் அமைத்தோம்.
மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து இடத்தை பார்த்துட்டுப் போறாங்க. சுதா மேம் இந்த ஸ்கிரிப்ட்ல ஐந்து வருஷம் பயணிச்சிருக்காங்க. பல ஆராய்ச்சிகளும் அவங்க செய்திருக்காங்க.

நான் கடைசியாகத்தான் 'பராசக்தி' டீமுக்குள்ள வந்தேன். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் சாரோடவும் நான் நிறைய வொர்க் பண்ணியிருக்கேன். நான் இந்தப் படத்திற்கு சரியாக இருப்பேன்னு அவரும் நம்பினாரு.
பிறகு, சுதா மேம் நிறைய புக்ஸ், ரெஃபரன்ஸ் எனக்கு கொடுத்தாங்க. அது என்னுடைய கலை இயக்கப்பணிகளுக்கு பெரும் உதவியாக இருந்தது. நிறைய இடங்களுக்கும் பயணிச்சோம். படத்தில் ஒரு சீக்குவென்ஸிற்காக எங்களுக்கு நீராவி இன்ஜீன் கொண்ட ரயில் தேவைப்பட்டது.
அது செயல்படுற கண்டிஷனிலும் இருந்தாகணும். அது இங்க கிடையாது. இலங்கையில அப்படியான ரயில் ஒண்ணு இருந்தது. அதனால அங்க போய் படப்பிடிப்பை நடத்தினோம்.
பிறகு, அந்த ரயிலுக்குள்ள சில ஸ்டண்ட் காட்சிகள் எடுக்கவேண்டியது இருந்தது. அதை டாமேஜ் செய்திடக்கூடாதுனு இங்கு முழுமையாக அந்த ரயிலை செட் போட்டோம்.
அந்தக் காட்சி படத்திலயும் முக்கியமான ஒன்றாக இருக்கும். முக்கியமாக, அந்த செட் அமைக்கிறதுக்கு நாங்க 6 மாதங்கள் கிட்ட வேலை செஞ்சோம்.

உண்மையான நீராவி இன்ஜீன் கொண்ட ரயிலை அளவெடுத்து, அதனுடைய உருவாக்கத்திற்குப் பின்னாலுள்ள திட்டங்களையும் கேட்டறிந்து வந்து இங்கு செட் அமைத்தோம்.
அந்த செட்டைப் பார்த்துட்டு சுதா கொங்கரா மேம் 'நான் இலங்கையில இருக்கேனா? இல்ல, நம்ம செட்ல இருக்கேனா?! அப்படியே அசலாக இருக்கு'னு பாராட்டு தெரிவிச்சாங்க.
அதை என்னுடைய உழைப்புக்கு கிடைச்ச அங்கீகாரமாகப் பார்க்கிறேன். அதுபோல எஸ்.கே சாரும், ரவி மோகன் சாரும் 'அங்கிருந்த ரயிலை இங்க எடுத்துட்டு வந்தீங்களா'னு ஆச்சரியப்பட்டுக் கேட்டாங்க.
இது மாதிரி பல உழைப்புகள் இந்தப் படத்துல நிறைஞ்சிருக்கு." என்றார் மகிழ்ச்சியுடன்.
தொடர்ந்து பேசியவர், "இந்தப் படத்துக்காக நிறைய விஷயங்களை நாங்க ரீ கிரியேட் செஞ்சோம். ஆனா, சில பொருட்கள்ல அதனுடைய ரியாலிட்டி தேவைப்பட்டுச்சு.
அதற்காக அதைத் தேடினோம். சிலர் விண்டேஜ் பொருட்களை இப்போதும் வச்சிருக்காங்க. ஆனா, அதை ஒரு பொக்கிஷமா பாதுகாப்பாக வச்சிட்டு வர்றாங்க. படத்துக்காக ஷூட்டிங் செய்யனு கேட்டால் நிச்சயமாக யோசிப்பாங்கலையா!

அப்போ இது மாதிரி சுதா மேம் படம், எஸ்.கே சார், ரவி மோகன் சார், அதர்வா சார் நடிக்கிற படம்னு சொல்லி அந்தப் பொருட்களையெல்லாம் வாங்கிப் பயன்படுத்தினோம்.
பீரியட் காலகட்டத்தைப் பிரதிபலிக்கிறதுக்கு நிறைய வேலைகள் நாங்க செஞ்சோம். ஒரு தெருவுல படப்பிடிப்பை நடத்தினால் சுவர்களில் விளம்பரம், அரசியல் பிரசார ஓவியங்களை வரையணும். ஆனா, அது அவங்களை ட்ரோல் செய்வது மாதிரி ஆகிடக்கூடாது.
அதே சமயம், வரலாற்றையும் மாத்திச் சொல்லிடக்கூடாது. அதுல மிகவும் கவனமாகச் செயல்பட்டோம். சுதா கொங்கரா மேம் லைவ் லொகேஷன்களைத்தான் விரும்புவாங்க.
அப்படி கதைக்கான கச்சிதமான இடம் அமைந்தாலும், அங்கெல்லாம் பீரியட் தன்மையைக் கொண்டு வர்றது பெரிய சேலஞ்ச்! பல வீடுகள்ல கேட், ஓடுகள்னு இப்போ மாற்றப்பட்டிருக்கு.
முறையாக அந்த வீட்டின் உரிமையாளர்களிடம் அனுமதி வாங்கி மாற்றியமைச்சு படம்பிடித்தோம்." என்றவர், "இந்தப் படத்துக்கு நிறைய விண்டேஜ் கார்கள் தேவைப்பட்டன.

இலங்கையில இப்போதும் பலர் விண்டேஜ் கார்களை நல்ல கண்டிஷன்ல வச்சிருக்காங்க. பல இடங்கள்ல இருந்து அந்த கார்களை கலெக்ட் பண்ணினோம். அந்த கார்களை வச்சு எடுக்கிற முதல் ஷாட்ல சுதா மேம் எஸ்.கே சாரைத் தேடினாங்க.
ஆனா, அவர் இந்த விண்டேஜ் கார்களை ரொம்ப என்ஜாய் பண்ணிப் பார்த்துட்டே இருந்தாரு. அதுபோல, இந்தப் படத்துல மெயில் சர்வீஸும், நேஷனல் ரேடியோ செட்டும் முக்கியமாகப் பேசப்படும்.
இன்னும் நிறைய விஷயங்கள் படத்துல இருக்கு. பொறுத்திருந்து பாருங்க!" என உற்சாகத்துடன் பேசினார்.

















