வட இந்தியாவை காக்கும் ஆரவல்லி மலைத்தொடர்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சூழலிய...
What To Watch: கொம்புசீவி முதல் அவதார் வரை! இந்த வாரம் என்ன படங்கள் பார்க்கலாம்?
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் இவைதான்.
தியேட்டர் வெளியீடுகள்:
கொம்புசீவி (தமிழ்):
சண்முக பாண்டியன் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் கொம்புசீவி. இத்திரைப்படம் டிசம்பர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பா.பா.பா (மலையாளம்):
நடிகர் திலீப் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி ஆக்ஷன் திரைப்படம் தான் 'பா.பா.பா'. இத்திரைப்படம் டிசம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.
சஹகுடும்பானம் (தெலுங்கு):
நடிகர்கள் ராம் கிரண், மேகா ஆகாஷ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள கமர்ஷியல் திரைப்படம் சஹகுடும்பானம். இத்திரைப்படம் டிசம்பர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Avatar: Fire and Ash (ஆங்கிலம்):
உலகப் புகழ் பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த பிரம்மாண்ட திரைப்பட வரிசையான அவதாரின் மூன்றாம் பாகம் தான் இத்திரைப்படம். பெரும் எதிர்பார்ப்புகள் கொண்டுள்ள இத்திரைப்படம் டிசம்பர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஓடிடி திரைப்படங்கள்:
மலையாளத் திரைப்படங்கள்:
Dominic and the Ladies' Purse - Zee5 - December 19
Besty - Manorama Max - December 19
தெலுங்கு திரைப்படங்கள்:
Premante - Netflix - December 19
இந்தி திரைப்படங்கள்:
Thamma - Prime Video - December 16
Raat Akeli Hai: The Bansal Murders - Netflix - December 19

ஓடிடி தொடர்கள்:
Pharma - JioHotstar - December 19 (மலையாளம்)
Emily in Paris Season 5 - Netflix - December 18














