செய்திகள் :

"சு.வெ-வின் பயணச் சலுகையை கொச்சைப்படுத்தியிருக்கிறார்.!"- நீதிபதி சுவாமிநாதனுக்கு சண்முகம் கண்டனம்

post image

"உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடுக்கும் தனிநபர் தாக்குதல், நீதித்துறை நெறிகளுக்கு முரணானது. அவர் மீதி உரிய நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், " உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதித் துறை நெறிகளுக்கும், மாண்புகளுக்கும் முரணாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு எதிராக தனி நபர் தாக்குதலை தொடுத்துள்ளார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இத்தகைய கருத்துக்களை வெளியிடுவது முதன் முறையல்ல. பொது வெளியில் தான் வகிக்கும் பொறுப்பின் மேன்மையை பயன்படுத்திக் கொண்டு அதனை சீர் கெடச் செய்யும் வகையில் அவரது கருத்துக்கள் அமைந்து வருகின்றன. சாதிய எண்ணம் மேலோங்கும் அவரது பல உரைகள் ஏற்கனவே சர்ச்சைக்கு ஆளாகியுள்ளன.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

கோவை நூலகத்தில் இடம் பெற்ற போலி நூல்கள் பற்றி கருத்து தெரிவிக்கையில் 'பெரியார் அறிவுலகம்' என்று சொல்லப்படுகிற அந்த நூலகங்களின் அடுக்குகளில் எல்லாம், இதுபோன்ற 'அகல்விளக்கு' பதிப்பகத்தின் போலிப் புத்தகங்கள்தான் நிறைந்திருக்கின்றன. அந்தத் தவறுகளால் ஏற்பட்ட பாவமெல்லாம் கழிய வேண்டுமென்றால், இந்த மகாபெரியவா புத்தகத்தின் அனைத்துத் தொகுதிகளையும், அனைத்துப் பெரியார் அறிவுலக நூலகங்களின் அடுக்குகளிலும் இடம்பெறச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் இந்தப் பாவமெல்லாம் நீங்கும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்" என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த கருத்துக்குள் ஒளிந்திருக்கும் வர்ணாசிரம சார்பும், வன்மும் வெளிப்படையானது.

அதற்கு எதிர்வினையாற்றிய சு.வெங்கடேசன் எம்.பி "நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை. சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காக பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் "மகா பெரியவர்கள்" என்று கருத்தைப் பதிவு செய்தார். தாம் குறிப்பிட்ட கருத்து அபத்தமானது என்பதால் புத்தக வெளியீட்டு விழாவில் நகைச்சுவையாகத்தான் அந்த கருத்தை தெரிவித்தேன் என்று நீதிபதி சமாளித்து இருக்கிறார். அத்துடன் வழக்கு விசாரணையின் போது தேவையற்ற வகையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தனிப்பட்ட முறையில் விமர்சித்து அரசு வழங்கியுள்ள பயணச் சலுகையை கூட கொச்சைப்படுத்தியுள்ளார்.

நீதிபதி நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவர் இவ்வாறு பேசியுள்ளது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. அவர் ஏற்கனவே பலமுறை தன்னுடைய சொந்த கருத்தியல் அடிப்படையை ஒரு தலைபட்சமாக பேசிவருகிறார். இவர் இந்த பொறுப்பில் நீடிக்க தகுதியற்றவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஏற்கனவே தகுதி நீக்க தீர்மான நோட்டீசை அளித்தது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு தந்துள்ள வசதிகளுக்கு உட்பட்டு அவர் செய்யும் பயணத்தை ஒரு நீதிபதி பழி சொல்வது அவரது உள்நோக்கத்தையும், அவர் வகிக்கும் அரசியல் சட்ட பொறுப்புக்கு பொருத்தமற்ற நடத்தையையும் வெளிப்படுத்துகிறது.

ஜி.ஆர். சுவாமிநாதன் vs சு.வெங்கடேசன்
ஜி.ஆர். சுவாமிநாதன் vs சு.வெங்கடேசன்

இது நீதித்துறையின் மாண்புகளுக்கு எதிரானது. நீதிமன்றத்திலேயே அவர் பேசி இருப்பது ஊடகங்களிலும் வெளி வந்திருப்பதால் அவர் மீது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கையையும், மாண்பையும் பாதுகாக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், "நகைச்சுவையாக நான் கூறிய விசயத்திற்கு என் பணிகளை எப்படி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார். நான் ரயில் நிலையம் செல்லும்போது உயர் ரக காரில் ஆடம்பர உடையில் ஒருவர் இறங்கினார். யாரோ என நினைத்தபோது சு.வெங்கடேசன் உயர் ரக காரில் ஆடம்பர உடையில் இறங்கினார். ரயிலில் சு.வெங்கடேசன் முதல் வகுப்புக்குச் செல்ல, நான் சாதாரண வகுப்பில் பயணித்தேன். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் இப்படி ஆடம்பரமாக இருக்கிறார் என்று நான் நினைத்துக் கொண்டேன்" என்று சு. வெங்கடேசனை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் அதிபராக தொடர நெதன்யாகுவின் ஐடியா; ஒத்துழைக்காத எதிர்க்கட்சி! இன்னும் எத்தனை நாள் கெடு?

இஸ்ரேலில் தேர்தல் முடிவுகள் வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்த நாட்டில் இன்னும் யாரும் ஆட்சி அமைக்கவில்லை.பெரும்பான்மை பெறாத இஸ்ரேல் கட்சிகள்இஸ்ரேல் நாடாளுமன்றம் நெசட்டில் பெரும்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: `இதே எடப்பாடியாராக இருந்திருந்தால்...'- அதிமுக பா.வளர்மதி பேச்சு

தவெக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக வெடித்திருக்கும் விவகாரம், பெரும் சர்ச்சையாகி இருக்கும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் ... மேலும் பார்க்க

'மன்மோகன் சிங்கை பிரதமர் பதவியிலிருந்து நீக்க கோரிய பிரணாப் முகர்ஜி!' - என்ன சொல்கிறார் சோனியா?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி 'Belonging' என்ற பெயரில் சுயசரிதை நூலை எழுதியிருக்கிறார். அதில் அவர் அரசியல்ரீதியாக குறிப்பிட்டிருக்கும் சில சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கு... மேலும் பார்க்க

திருப்பத்தூர் பெரிய ஏரி: சுகாதாரச் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டிய விகடன்; குப்பைகளை அகற்றிய நிர்வாகம்!

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது திருப்பத்தூர் பெரிய ஏரி. மீன்பிடித் தொழில், விவசாயப் பாசனம் எனப் பல வகைகளில் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் இந்த ஏரி, குப்பைகள் கொட்டப்படும... மேலும் பார்க்க

மதுரை தனிஷிக் நகைக்கடையில் மீட்கப்பட்ட ரூ. 15 கோடி மதிப்புள்ள நகைகள்; காட்சிப்படுத்திய போலீஸ்| Photo

மீட்கபட்ட 15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கபட்ட 15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கபட்ட 15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கபட்ட 15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கபட்ட 15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கபட்ட 15 கோடி மத... மேலும் பார்க்க

'சூரசம்ஹார விழாவில் ஆகமவிதிகள் மீறப்பட்டனவா?'- சேகர் பாபுவின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ரமேஷ் பதில்

திருச்செந்தூரில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, ஆகம விதிகள் அதிகப்படியாக மீறப்பட்டிருக்கிறது என்றும் இது முழுக்க முழுக்க ரீல்ஸ் ஆட்சிக்காக, ரீல்ஸ்க்காகவே கொண்டாடப்பட்ட ஒரு சூரசம்ஹார நிகழ்ச்சி என்றும... மேலும் பார்க்க