செய்திகள் :

சூரியசக்தி மின் உற்பத்தியில் புதிய மைல்கல் - கோடையைச் சமாளிக்க தமிழ்நாடு ரெடி!

post image

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், அதற்குப் போட்டியாக சூரியசக்தி மின் உற்பத்தியும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதிகரித்து வரும் மின் தேவையைச் சமாளிக்க இது பெரும் உதவியாக அமைந்துள்ளதுடன், தேர்தல் காலத்தில் தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்யவும் வழிவகுத்துள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மார்ச் 24 அன்று 54.8 மில்லியன் யூனிட்களும், மார்ச் 27 அன்று 55.6 மில்லியன் யூனிட்களும் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மின் தொகுப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி பதிவான 53.9 மில்லியன் யூனிட் என்ற சாதனையை முறியடித்து, ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளது. கோடையின் உச்சக்கட்டம் தொடங்குவதற்கு முன்பே இந்த மைல்கல் எட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது அந்த நாள்களில் மாநிலத்தின் மொத்த மின் நுகர்வில் சுமார் 13% ஆகும்.

Solar panels

இது குறித்து மின் பகிர்மானக் கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ஓர் ஆங்கில ஊடகத்திடம் பேசுகையில், ``அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஏசி ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இன்டக்‌ஷன் அடுப்புகளின் பயன்பாடும் கூடியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் மின் நுகர்வு சீராக உயர்ந்து வருகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவாக, திங்கள்கிழமை மாநிலத்தின் மின் நுகர்வு 423.887 மில்லியன் யூனிட்டுகளாகப் பதிவானது. கடந்த 2024, ஏப்ரல் 30 அன்று பதிவான 454.32 மில்லியன் யூனிட் என்ற உச்சபட்ச தேவையையும் விரைவில் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினசரி சராசரியாக 50 மில்லியன் யூனிட் சூரியசக்தி மின்சாரத்தை மின் தொகுப்பில் சேர்ப்பது, வர்த்தக மற்றும் வீட்டு நுகர்வோருக்குத் தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. குறிப்பாக, பகல் நேரங்களில் மின் தேவையின் சுமையைக் குறைப்பதற்கு இது பெரிதும் உதவுகிறது.

மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு பிப்ரவரியில் மட்டும் தமிழகம் 1,745.24 மில்லியன் யூனிட் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது.

TNPDCL

மேம்பட்ட சூரியசக்தி கட்டமைப்பு மற்றும் சாதகமான வானிலை ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. மார்ச் 31, 2022 நிலவரப்படி, தமிழகத்தின் நிறுவப்பட்ட சூரியசக்தித் திறன் 5,303 மெகாவாட்டாக இருந்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இது 133% அதிகரித்து, தற்போது 12,352 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இந்த அபரிமிதமான வளர்ச்சி, எதிர்கால மின் தேவையை சமாளிக்க மாநிலத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.

சாத்தான்குளம் வழக்கு: 3 மணிநேரம் விசாரணை செய்த நீதிபதி- குற்றவாளிகள் சொன்னது என்ன? | முழு விவரம்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பான இறுதி விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் குற்றவாளிகள் தரப்பு, சிபிஐ தரப்பு, ஜெயராஜ் பென்னிஸ் குடும்பத்தினரின் தரப்பு என அனைத்து த... மேலும் பார்க்க

Vote Vibes: எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை! - சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட கதைகள்!

தவெக தலைவர் விஜய் வருகிற சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போகிறார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்திருக்கிறார். சட்டப்படி, ... மேலும் பார்க்க

போர் எதிரொலி: `சிறப்பு கூட்டத்தைக் கூட்டி பிரதமர் ஆலோசனை' - அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!

மத்திய ஆசியாவில் நடந்துவரும் போரால், பல்வேறு நாடுகளில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஈரான், அமெரிக்கா - இஸ்ரேல் போர் விளைவால் எரிசக்தி தட்டுப்பாடில் தொடங்கி விலைவாசி உயர்வு வரை பொதுமக்களு... மேலும் பார்க்க

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: 'இதுக்கு 'End Card' இல்லையா?' - இந்திய ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது?

ஏற்கெனவே இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், ஈரான் போரும் தொடங்க, இந்த இறங்குமுகம் தொடர்கதையாகி வருகிறது. இப்போது ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.94-ஐ தாண்டி இந்திய ரூபாயி... மேலும் பார்க்க

VCK : `கேட்டது கிடைத்தது / இல்ல கிடைக்கவில்லை' - தொகுதி பங்கீட்டில் குழப்பும் திருமாவளவன் | பின்னணி

வி.சி.க எம்.எல்.ஏ-க்கள் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ் பாலாஜி, பனையூர் பாபு ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காதது சர்ச்சையான நிலையில் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அது குறித்து விளக்கமளித்துள்ளார்... மேலும் பார்க்க

வருமான வரி, பங்குச்சந்தை: இன்று முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன?

இன்று (ஏப்ரல் 1) முதல் பல்வேறு நிதி மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. அவற்றில் வருமான வரி மற்றும் பங்குச்சந்தையில் நடக்க உள்ள மாற்றத்தைப் பார்க்கலாம். > இதுவரை வருமான வரிச் சட்டம், 1961 அமலில் இருந்தது... மேலும் பார்க்க