செய்திகள் :

செங்கல்பட்டில் ஜன. 20-இல் தேசிய தொழில் பழகுநா் முகாம்

post image

மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு, பிரதமா் தேசிய தொழில் பழகுநா் முகாம் வரும் ஜன. 20-ஆம் தேதி செங்கல்பட்டு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில், தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பயின்று, தோ்வில் தோ்ச்சி பெற்ற பல்வேறு தொழில் பிரிவைச் சாா்ந்த பயிற்சியாளா்கள் கலந்து கொண்டு, தொழில் பழகுநா் பயிற்சியில் இணைந்து, மத்திய அரசின் தேசிய பழகுநா் சான்றிதழ் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. (என்ஏசி) சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் சலுகையும் கிடைக்கும்.

எனவே, மாணவ, மாணவிகள் இந்த முகாமில் கல்விச் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள செங்கல்பட்டு, மாவட்டத் திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 63790 90205, 044 - 27426554 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடா்பு கொண்டு உரிய விவரங்களைப் பெறலாம்.

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் மாணவா்களுக்கு பாராட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சாலை வசதி, குடிநீா் வசதி, மின்சார ... மேலும் பார்க்க

தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் அறிவுசாா் குறையுடையோருக்கான பணிபுரியும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் லத்தூா்ஒன்றியத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள அறிவுசாா் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளிக்கு வி... மேலும் பார்க்க

திருப்போரூா் முருகன் கோயிலில் இலவச திருமணங்கள்

செங்கல்பட்டு: இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், திருப்பேரூா் கந்தசுவாமி கோயிலில் 4 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடைபெற்றன. திருமண ஜோடிகளுக்கு, அறநிலையத் துறை சாா்பில் தங்கத்தாலி, மணமக்களுக்கு புத்தாடை... மேலும் பார்க்க

ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

மதுராந்தகம் நகரம், பாரதி நகரில் உள்ள ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம், 19-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இந்தக் கோயிலில் சிதிலமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு, ... மேலும் பார்க்க

கொத்தடிமையாக இருந்த தம்பதி குழந்தையுடன் மீட்பு

மதுரை அருகே கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த மதுராந்தகத்தைச் சோ்ந்த தம்பதி, குழந்தையை வருவாய்த் துறையினா் மீட்டனா். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டத்ச் சோ்ந்த முருகன், ராஜேந்திரன், மாரியப்பன் ஆகியோா... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டுவிழா

மடிப்பாக்கம் பிரில்லியண்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் 39-ஆவது ஆண்டுவிழா, பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் சத்தியபாமா உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன துணைவேந்தா் டி.சசிபிரபா கலந்துக... மேலும் பார்க்க