செய்திகள் :

Jana Nayagan Audio Launch: "என்கிட்ட இருக்கிற அத்தனைக்கும் காரணம் அவர்தான்" - குட்டி கதை சொன்ன அட்லீ

post image

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

#Thalapathy69 #Jananayagan
#Thalapathy69 #Jananayagan

படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய்.

இயக்குநர் அட்லீ பேசுகையில், "என்னோட அண்ணன், என்னோட தளபதி! தளபதி எங்களுக்கொரு எமோஷன். உதவி இயக்குநராக வேலைப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் படப்பிடிப்புத் தளத்தின் இறுதி நாளில் 'அட்லீ, நீங்க நல்ல கடினமாக உழைக்கிறீங்க. உங்களுடைய உழைப்பு எனக்குப் பிடிச்சிருக்கு.

கதை இருந்தால் சொல்லுங்க, நம்ம படம் பண்ணலாம்'னு சொன்னாரு. எந்தவொரு சூப்பர் ஸ்டார் நடிகரும் இப்படிப் பண்ணமாட்டாங்க.

அப்போதே அவர் 50 படங்கள் செய்துவிட்டார். அவர் உண்மையாகவே நல்ல மனிதர்!" என்றவர், "என்கிட்ட இருக்கிற அத்தனைக்கும் காரணம், என்னுடைய தளபதி, என்னுடைய விஜய் அண்ணன்தான்." எனப் பேசினார்.

Atlee
Atlee

மேடையில் விஜய் ஸ்டைலில் குட்டிக் கதை சொன்ன அட்லீ, "வாழ்க்கையில் நாம் மூன்று விதமான மனிதர்களைச் சந்திப்போம். இதுக்கு எடுத்துக்காட்டாக மரத்தை எடுத்துக் கொள்வோம்.

சிலர் இலை மாதிரி குறிப்பிட்ட காலத்துக்கு இருப்பாங்க. பிறகு, காற்று அடிக்கும்போது பறந்து போயிடுவாங்க. அது இயற்கை! இன்னொன்று கிளைகள். அது ரொம்ப வலிமையாக இருக்கும்.

ஆனா, ஒரு சமயத்தில் உடைஞ்சு போயிடும். ஆனா, உங்க பின்னாடி ஒரு கூட்டம் வேர் மாதிரி இருக்காங்க!" என்றவர் மேடையிலிருந்து ஓடிச் சென்று விஜய்யைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.

Jana Nayagan Audio Launch: "படுத்த படுக்கையாக இருந்த என் மகனை நடக்க வைத்தவர் நீங்கள்!" - நாசர்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக... மேலும் பார்க்க

Jana Nayagan Audio Launch: "விஜய் சார்கூட இன்னொரு படம் பண்ணனும்னு ஆசை இருக்கு!" - நெல்சன்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக... மேலும் பார்க்க

Jana Nayagan Audio Launch: "கடைசி படம்னு சொன்னதுனால கொஞ்சம் வருத்தமா இருக்கு!" - லோகேஷ் கனகராஜ்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக... மேலும் பார்க்க

JanaNayagan Audio Launch: "அவரே ஒரு Elevation தான்!" - பாடலாசிரியர் விவேக்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக... மேலும் பார்க்க

Jana Nayagan Audio Launch: கோட் சூட்டில் விஜய்; தளபதி பாய்ஸ் பங்கேற்பு; ஆடியோ லாஞ்ச் அப்டேட்ஸ்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக... மேலும் பார்க்க

JanaNayagan Audio Launch: "விஜய் - SPB பாடல் காம்போ; நடித்த காம்போவா; எது சிறந்தது?" - சரண் பதில்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் பிரமாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பாக விஜய்யின் ஹிட் பாடல்களை வைத்து 'தளபதி திர... மேலும் பார்க்க