'என்னை அசிங்கப்படுத்துகின்றனர்'; 'இது என் கடைசி யுத்தம்' - ராமதாஸின் '25 இடங்கள்...
"தவெக-விற்குச் செல்ல செங்கோட்டையனை நான் தூண்டிவிட்டேனா?" - டிடிவி தினகரன் சொல்வது என்ன?
அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரை வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, "அரசியல் ரீதியாக எது நடந்தாலும் என்னையும், அமமுக-வையும் தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். நான் தூண்டிவிட்டுதான் தவெகவிற்கு செங்கோட்டையன் சென்றதாகச் சொல்கிறார்கள், ஓபிஎஸ் எந்த முடிவெடுத்தாலும் நான்தான் தூண்டிவிடுவதாக வதந்தியைப் பரப்புகிறார்கள்.
ஓபிஎஸ் முடிவெடுத்துவிட்டார், டிடிவி தினகரன் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் சிலர் கேட்கிறார்கள். அமமுக என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். எங்கள் கட்சியிலுள்ள தகுதியான வேட்பாளர்களுக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கின்ற கூட்டணிக்குத்தான் நாங்கள் செல்வோம்.
திமுக கூட்டணியில் 7 ஆண்டுகளாக உள்ள கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு அறிவித்துவிட்டார்களா? நாங்கள் புதிதாக ஒரு கூட்டணியில் செல்லவிருக்கிறோம் என்றால் எத்தனை தொகுதிகள் என்று பேசிய பிறகுதான் கூட்டணிக்குச் செல்ல முடியும்.
தமிழ்நாட்டில் தற்போது கூட்டணிகளுக்குத் தலைமை வகிக்கும் கட்சிகளும், புதிதாக கூட்டணியை உருவாக்க நினைக்கும் கட்சிகளும் நாங்கள் அவர்களது கூட்டணிக்கு வர வேண்டும் எனப் பேசிவருவது உண்மை, ஆனால் நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மீண்டும் வரவேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்துகிறார். அது குறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை.
டெல்லிக்குச் சென்று விட்டு வந்தாலோ, தலைவர்களைச் சந்தித்தாலோ எங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகச் சிலர் கூறுகிறார்கள். நாங்கள் எந்த முடிவாக இருந்தாலும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் சொல்வோம். ஊடகங்கள் எங்கள் மீது சேற்றை வாரி இறைத்தாலும் உங்கள் ஆசைக்கு நாங்கள் முடிவெடுக்க மாட்டோம்.
நான் பெங்களூரிலிருந்து டெல்லி சென்று பாஜக தலைவர்களைச் சந்தித்ததாகப் பரப்பப்படும் செய்திகள் உண்மையல்ல. பழைய கூட்டணியில் உள்ளவர்கள் கூட்டணிக்காக என்னிடம் பேசுவது உண்மை. ஆனால் நான் யாரையும் சந்திக்கவில்லை. எந்த அழுத்தமும் எனக்கு இல்லை. கூட்டணிக்கான யாருடைய அழைப்பையும் நிராகரிக்கவில்லை.
நான் தேர்தலில் போட்டியிடுகிறேனா இல்லையா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.
2024 தேர்தலில் எப்படியோ திமுக-வுக்கு மக்கள் வாக்களித்து விட்டார்கள். திமுக கொடுத்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் இந்த முறை திமுகவுக்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள்" என்றார்.














