செய்திகள் :

``விவசாயி வேடமிட்டு, விவசாயிகளை பாதிக்கின்ற சட்டங்களை ஆதரிப்பார்கள்!’’ - விமர்சித்த ஸ்டாலின்

post image

திருவண்ணாமலையில் இன்றைய தினம், வேளாண் கண்காட்சியைத் தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு வேளாண் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது அவர் பேசுகையில், ``நிலத்தில் நீரை பாய்ச்சியும், உடலில் ஓடும் செந்நீரை வேர்வையாக சிந்தியும், உலகத்தை பசுமாக்கி ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிற விவசாயிகளுடன் இருக்கும்போது, சிந்தனையும் செயல்களும் பசுமையாகிறது. இந்த வேளாண் கண்காட்சியையும், கருத்தரங்கையும் தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன். விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில் நம்முடைய திராவிட மாடல் அரசு முன்னோடியாக இருக்கிறது. இந்த ஓராண்டில் மட்டும் மூன்றாவது வேளாண் கண்காட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். பொதுவாக, `உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது’ என்று சொல்வார்கள். `நாற்று நட்டு அறுவடை செய்யும்வரை ஒரு விவசாயிக்கு பிரசவ வேதனை’ என்றும் சொல்வார்கள். பாடுபடுகிற விவசாயிக்கு இயற்கையும், மண்ணும் கைகொடுத்தால்தான் மகசூல் சரியாக இருக்கும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இன்றைக்கு தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. பலமணிநேர வேலைகளை சிலமணி துளிகளிலும், பலநூறுபேர் செய்யக்கூடிய வேலைகளை சில இயந்திரங்கள் செய்யும் அளவுக்கு அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்டது. இந்த வளர்ச்சி, விவசாயிகளின் கைகளிலும் வந்துசேர்ந்தால்தான் அது உண்மையான வளர்ச்சியாக மாறும். அப்படியிருக்கும்போது, இந்த தொழில்நுட்பங்களை தேடி விவசாயிகள் அலையக்கூடாது என்பதால்தான் உங்களைத் தேடிவந்து வேளாண் கண்காட்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறோம். இந்த கண்காட்சியில் ஏராளமான ஸ்டால்கள் அமைத்திருக்கிறார்கள்.

உயர் விளைச்சலைத் தரக்கூடிய புதிய பயிர் ரகங்கள், நவீன தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், அறுவடைக்குப் பிறகு தேவைப்படக்கூடிய மேலாண்மை நுட்பங்கள், மதிப்புக்கூட்டு நுட்பங்கள், வேளாண்மையில் மின்னணு தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்தும் நுட்பங்கள், உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை, உணவுப்படுத்துதல், கால்நடை மற்றும் மீன்வளர்ப்பு நுட்பங்கள், பயிர்க்கடன், பயிர் காப்பீடு, வேளாண் ஏற்றுமதி என்று ஏராளமான விஷயங்களைப் பற்றி, நீங்கள் இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.

நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே, `வேளாண்மைத்துறை’ பெயரை `வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை’ என்று மாற்றினோம். சிலர் பெயர்களை இஷ்டத்துக்கு மாற்றுவார்கள். ஆனால், விவசாயிகளை தவிக்கவிட்டு, நடுத்தெருவில் போராட விட்டுவிடுவார்கள். இன்னும் சிலர் விவசாயி வேடம் போட்டுக்கொண்டு அரசியல் செய்வார்கள். ஆனால், விவசாயிகளை பாதிக்கின்ற சட்டங்களை ஆதரிப்பார்கள். விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவார்கள். நம்முடைய திராவிட மாடல் அரசில், விவசாயிகளுடைய நலனும் வளர்ச்சியும்தான் முக்கியம். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நினைத்தோம். அதற்காக, வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் போட ஆரம்பித்தோம். இதுவரைக்கும் ஏராளமான திட்டங்களை அறிவித்து, 5 அக்ரி பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறோம். இந்த 5 அக்ரி பட்ஜெட்டையும் சேர்த்து, விவசாயிகளுக்காக ஒதுக்கியிருக்கிற நிதி, `ஒரு லட்சத்து தொண்ணூற்று நான்காயிரம் கோடி ரூபாய்’.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முந்தைய ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் கைவிட்ட 125 உழவர் சந்தைகளை நவீன வசதிகளுடன் புனரமைத்ததோடு, 14 உழவர் சந்தைகளையும் நாம் அமைத்திருக்கிறோம். பனை மேம்பாட்டு இயக்கம், உழவர் செயலி, இ-வாடகை செயலி என்று ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு, இந்த மாவட்ட விவசாயிகளுக்கு அறிவிப்பு வழங்காமல் நான் போய்விட முடியுமா? முடியாது!திருவண்ணாமலை விற்பனைக் குழுவில், வாடகை கட்டடத்தில் இயங்கும் பெரணமல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு புதிதாக 500 மெட்ரிக் டன் கொண்ட சிறப்பு கிடங்கு, அலுவலகத்துடன்கூடிய பரிவர்த்தனை குடோன் மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வறை ரூ.3 கோடியில் நிறுவப்படும். வேளாண் விளைப்பொருள்களை உலர்த்தி, சுத்தப்படுத்தி விற்பனை செய்ய ஏதுவாக திருவண்ணாமலை விற்பனைக் குழு கட்டுப்பாட்டில் செயல்படும் சேத்துப்பட்டு, போளூர், வந்தவாசி ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய உலர் களங்கள் அமைக்கப்படும்’’ என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மீண்டும் அதிமுகவில் இணைந்த வேலுமணியின் நிழல் - பின்னணி என்ன?

கோவை அரசியல் களத்தில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருக்க முக்கிய காரணம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அவரின் கள... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: அஜித் பவாருடனான பேச்சுவார்த்தை முறிவு; காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த சரத்பவார்

மகாராஷ்டிரா முழுவதும் இருக்கும் மாநகராட்சிகளுக்கு வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க மற்றும் சிவசேனா(ஷிண்டே) கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.அதே சமயம் இதே க... மேலும் பார்க்க

"BJPவுடன் இருந்தபோதுதான் எந்தக் கல்லூரியில் ராமர் Engineering படித்தார் எனக் கலைஞர் கேட்டார்"-திருமா

"பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருந்த போது மதவாத அரசியலைப் பேசக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை பா.ஜ.க-விற்கு விதித்துதான் கலைஞர் கூட்டணி வைத்தார். பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருந்த போதுதான் ராமர் எந்தக் கல்லூ... மேலும் பார்க்க

'வெட்கமா இல்லையா திமுக அரசே?' - கொந்தளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்; குண்டுக்கட்டாக கைது!

தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 140 நாட்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் அருகே கூடி கோட்டையை நோக்கி பேரணி ச... மேலும் பார்க்க