Pink Parking: தாய்மைக்கு 'ரெட் கார்பெட்' வரவேற்பு; இந்தியாவில் வைரலாகும் பிங்க் ...
Kanimozhi: "நம்முடைய கலை வடிவங்களையும் மொழியையும் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள்" - கனிமொழி
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்வு நேற்றைய தினம் தொடங்கியது.
6வது முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பறையடித்துத் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்த பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்த நிகழ்வுக் குறித்துப் பேசினார்.
கனிமொழி பேசும்போது, "'மார்கழியில் மக்களிசை' என்பது அரசியல் பேசக்கூடிய மேடை. கலை என்பது மக்களைப் பிரதிபலிக்கும் ஒன்றாக மட்டும் இருக்கக் கூடாது.
உளி போல் சமூகத்தைச் செதுக்க வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும். அப்படியான கலைக்கான மேடையைத்தான் ரஞ்சித் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

இங்கு கலைஞர்கள் பேசக் கூடிய அரசியல் மிக முக்கியமான ஒன்று. நம்முடைய கலை வடிவங்களையும் மொழியையும் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள். இன்றைக்குப் பறையைக்கூட நம் கைகளிலிருந்து வேறு யாரோ எடுத்து வாசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
அதை நமது என்று சொல்லக்கூடிய ஒரு மேடையாக இதனை ரஞ்சித் மாற்றியிருக்கிறார். அது நம்முடைய இசை என்பதை இங்கும் நாம் உரக்கச் சொல்லுவோம்" என்றார்.















