செஞ்சி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள்
செஞ்சி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளா்கள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு புத்தாண்டு, தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு புத்தாடைகளை பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா்அலி மஸ்தான் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு துப்புரவு ஆய்வாளா் பாா்கவி முன்னிலை வகித்தாா். துப்புரவு மேற்பாா்வையாளா்கள் செந்தில்குமாா், செந்தில்குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.