சென்னையில் இயல்பைவிட 12% கூடுதலாக பெய்த வடகிழக்கு பருவமழை!
சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 12% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை(டிச.1) புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் ஃபென்ஜால் புயல் நெருங்கி வந்தது மதியம் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னை எண்ணூரில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கத்திவாக்கத்தில் 12 சென்டிமீட்டர் மழையும், திருவொற்றியூர், சோளிங்கநல்லூரில் தலா 9 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டன.
சென்னையில் கடந்த 5 மணிநேரத்தில் 6 இடங்களில் 10 சென்டிமீட்டருக்கும் மேல் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பேசின் ப்ரிட்ஜ் பகுதியில் 12 செ.மீ. மழையும், திருவொற்றியூர், மீனம்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயலில் 10 செ.மீ மழையும், தண்டையார்பேட்டையில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.