சென்னையில் விடாது மழை பெய்வது ஏன்? சென்னை, திருவண்ணாமலைக்கு `ஆரஞ்சு' அலர்ட்!
சென்னையில் விடாது மழை பெய்வது ஏன்? சென்னை, திருவண்ணாமலைக்கு `ஆரஞ்சு' அலர்ட்!
தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின் படி,
திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, மதுரை, தேனி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் 'ஆரஞ்சு அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது.

ஏன் இன்னும் சென்னையில் மழை?
தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரை அருகே, தென்மேற்கு வங்கக்கடலில் டிட்வா புயலின் எச்சம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
இது மெதுவாக நகர்ந்து வருகிறது.
வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைக்கும், இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையத்திற்கும் குறைந்தபட்சம் 25 கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.
இது வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரையின் தென்மேற்கு திசை நோக்கி மெல்ல நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 6 மணிநேரத்திற்குள், இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் வலுவிழந்து, நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்த பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எங்கெல்லாம் விடுமுறை?
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கடலூர்
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்.

















