செய்திகள் :

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

post image

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார்.

இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இளம்பெண்ணை ஒருதலையாக சவுரவ் காதலித்தாகக் கூறப்படுகிறது. இளம்பெண் மீதான காதல் மயக்கத்தில் சவுரவ், அவரிடம் இரட்டை அர்த்தத்தில் அலுவலக நேரத்திலேயே பேசி வந்தார்.

அதற்கு இளம்பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு உயரதிகாரிகளிடமும் முறையிட்டார். அதன்பிறகும் சவுரவ் தன்னுடைய செயலை மாற்றிக் கொள்ளவில்லை. தொடர்ந்து இளம்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார்.

காதல் டார்ச்சர்
காதல் டார்ச்சர்

இந்த நிலையில் இளம்பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து அதிர்ச்சியும் கொடுத்தார். அதனால் இளம்பெண், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், ஜி.எஸ்.டி அலுவலர் சவுரவ்வைக் கைது செய்தனர்.

இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட சவுரவ்வை விட புகார் கொடுத்த இளம் பெண் வயதில் மூத்தவர். அதனால் காதலுக்கு வயது தடையில்லை என்ற வாசகத்தை பெண்ணின் புகைப்படத்துக்குக் கீழே எழுதியிருக்கிறார் சவுரவ். ஆனாலும் அந்தப் பெண் எதையும் கண்டுக்கொள்ளவில்லை.

மேலும் அலுவலக நேரத்திலேயே அந்தப் பெண்ணுக்கு ஆபாச செய்கை, இரட்டை அர்த்த பேச்சு, அவரின் போட்டோவை மார்பிங் செய்து அனுப்புவது போன்ற செயலில் சவுரவ் செய்து வந்திருக்கிறார்.

அதனால்தான் இளம்பெண், எங்களிடம் ஆதாரங்களுடன் புகாரளித்தார். அதன்பேரில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஜி.எஸ்.டி ஆபீஸர் சவுரவ்வைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்'' என்றனர்.

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க

சென்னை: பள்ளி மாணவிக்கு `ஐ லவ் யூ' சொன்ன ஆசிரியர் - போக்சோவில் கைதான பின்னணி!

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில், 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி, இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வந்தார். அவரின் இன்ஸ்டாவுக்கு தொடர்ந்து காதல் மெசேஜ்கள் வந்து கொண்ட... மேலும் பார்க்க

வேலூர் வியாபாரியிடம் `நிறம் மாறும் கற்கள்’ வழிப்பறி - ஒருவர் கைது; 2 பேருக்கு வலை!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள பல்லலகுப்பம் கிராமம் ராமர் கோயில் தெருவில் வசிப்பவர் ஆனந்தகுமார் (வயது 58). இவரின் மனைவி ஷைலா, ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர். இந்த நிலையில், ஆனந்தகுமார் தன்னிடம... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: பிரவசத்தில் தாய், சேய் இறப்பு; விறகு வியாபாரிமீது பாய்ந்த வழக்கு! - பின்னணி என்ன?

காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் இருளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தன். இவரின் மனைவி தேன்மொழி. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும் மகளும் உள்ள நிலையில், மூன்றாவதாக தேன்மொழி கர்ப்பமட... மேலும் பார்க்க

தாளவாடி: இளைஞரை சங்கிலியில் கட்டிவைத்து சித்ரவதை; கொடூர காவல்துறையின் பதைபதைக்க வைக்கும் வீடியோ

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகில் உள்ள திகினாரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாது (எ) மாதேவா. 20 வயதான இவர் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை என மாதேவாவை அழைத்துச் சென... மேலும் பார்க்க

தெருவில் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட சிறார்கள்; புனே போலீஸ் மீது வழக்கு; மனித உரிமை கமிஷன் உத்தரவு

புனேயில் கொலை வழக்கு ஒன்றில் போலீஸாரிடம் சரணடைந்த சிறார்கள் 8 பேரை, போலீஸ் நிலையத்தில் ஐந்து நாட்கள் சட்டவிரோத வைத்திருந்து அடித்து உதைத்துள்ளனர். அதோடு அந்தச் சிறார்களை பொதுவெளியில் ஊர்வலமாக அழைத்துச... மேலும் பார்க்க