செய்திகள் :

``சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் BJP, RSS வழக்கறிஞர்களுக்கு கொலீஜியம் பரிந்துரை" - திருமா

post image

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் நெருக்கமாக உள்ள வழக்கறிஞர்களை கொலீஜியம் பரிந்துரைப்பதாகவும், இதில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் வி.சி.க தலைவர் எம்.பி தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் திருமாவளவன், ``சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தொடர்ந்து பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஆதரவு வழக்கறிஞர்கள் மட்டுமே இடம்பெறுவது நீதி நிர்வாக அமைப்பு சனாதன மயம் ஆகி வருவதைக் காட்டுகிறது.

இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

தற்போது நீதிபதி நியமனத்துக்காக சென்னை உயர் நீதிமன்ற கொலீஜியத்தின் பரிசீலனையில் உள்ள பட்டியலில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.

இது மிகப்பெரிய அநீதியாகும். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர்.

அதிலும் குறிப்பாக பா.ஜ.க ஆதரவாளர்கள் மட்டுமே தொடர்ந்து நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர்.

தற்போது சென்னை உயர் நீதிமன்ற கொலீஜியத்தின் பரிசீலனையில் உள்ளவர்களில் ஏழு பேர் ஒன்றிய அரசின் வழக்கறிஞர்களாகவும், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை வழக்கறிஞர்களாகவும், பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர்களாகவும் உள்ளவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

தகுதி அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் அது சாதி மத அரசியல் சார்பு அடிப்படையிலேயே இருக்கிறது.

சமூகநீதிக்கு எதிரான இந்தப் போக்குக் கண்டிக்கத்தக்கதாகும். தற்போது மேற்கொள்ளப்படவிருக்கும் நீதிபதிகள் நியமனத்தில் ஆதிதிராவிடர் மற்றும் இதுவரை நீதிபதி நியமனங்களில் இடம்பெறாத மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சமூகநீதிக்கு எதிராகத் தொடர்ந்து நீதிபதிகள் நியமனம் செய்வதை கொலீஜியம் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்" என்று வலியுறுத்தியிருக்கிறார்.

"ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல" - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

"பல்கலை பட்டமளிப்பு விழாவில், ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல, இதை தவிர்க்கும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்" என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிக... மேலும் பார்க்க

"திருமண வயதை எட்டும் முன்னரே Live-in உறவில் இருக்கலாம்"- 18, 19 வயதினர் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

திருமண வயதை எட்டவில்லை என்றாலும் இரண்டு வயதுவந்த நபர்கள் மனம் விரும்பி 'லிவ்-இன்' உறவில் (Live-in Relationship) வாழ்வது அவர்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமை என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்" - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு

ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும்.ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஏற்ற அனு... மேலும் பார்க்க

53 வயதில் திருமணமாகி 4 நாள்களில் பிரிவு; 14 ஆண்டுகள் போராடி ஜீவனாம்சம் பெற்ற பெண்

கணவன்–மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டால், விவாகரத்துக்காக இருவரும் பல ஆண்டுகள் கோர்ட் படியேறுவது வழக்கமாக உள்ளது. மனைவியுடன் சில நாள்கள் மட்டுமே வாழ்ந்தாலும், விவாகரத்து ஏற்படும் போது கணவன்... மேலும் பார்க்க

ரயிலில் தள்ளி மாணவி கொலை: குற்றவாளியின் தண்டனையை குறைத்த உயர் நீதிமன்றம் - காரணம் என்ன?

தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவங்களில் ஒன்று, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கு. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு விதிக்கப்பட்... மேலும் பார்க்க

`பொய் வழக்கு; தமிழ்நாடு உள்துறை ரூ.8 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ - உயர் நீதிமன்றம் அதிரடி

உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2017 ஆம் ஆண்டில் வழிப்பறி செய்ய திட்டமிட்டதாக நான் உட்பட 5 பேர் மீது மதுக்கூர் போல... மேலும் பார்க்க