செய்திகள் :

சென்னை: எத்திராஜ் கல்லூரி அருகே கூவம் ஆற்றில் கலப்பது கழிவு நீரா? குப்பைகளாலும் மாசுப்படும் கூவம்

post image

எத்திராஜ் மகளிர் கல்லூரி அருகில் உள்ள சிக்னலுக்குப் பக்கத்தில் கூவம் ஆறு ஓடுகிறது. இதன் மேல் வாகனப் போக்குவரத்திற்காக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 2009-10ம் ஆண்டில் ரூ.13.70 லட்சம் செலவில் இந்தப் பாலம் அழகுப்படுத்தப்பட்டதாக கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

ஆற்றுக்கு அருகிலேயே தனியார் கட்டிடங்கள், எத்திராஜ் மகளிர் கல்லூரி மற்றும் ஓர் அரசுக் கல்லூரி அமைந்துள்ளன. நேர்த்தியான தார் சாலைகள், மரங்கள், உயரமான கட்டிடங்கள், சாலைப் பாதுகாப்பு அடையாளங்கள், தெருவிளக்குகள் என நவீன வசதிகளுடன் கூடிய இப்பகுதியில், சுற்றி வீடுகள் குறைவாக இருப்பதால் கூவத்தின் இந்த இடம் பலரின் கவனத்திற்கு வராமல் உள்ளது.

தற்போது அங்கே கூவம் ஆற்றில் மூன்று பக்கங்களிலிருந்து நீர் வந்து கலக்கிறது. இது மழைநீர் வாய்க்காலாக இருக்கலாம் எனினும், பாலத்திற்கு இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் இருந்து வரும் நீர் கழிவுநீராக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுவே உண்மையில் கழிவுநீராக இருந்தால், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆற்றின் கரையில் குப்பை மேடாகக் குவிந்துள்ளது. குப்பையைத் தொடர்ந்து கொட்டி எரிப்பதற்கான அடையாளங்களும் காணப்படுகின்றன. சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து இந்த நீர் வருவதாகச் சந்தேகிக்கப்படுகிறது; இதன் சரியான மூலம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

நீர் சேமிப்பு, மழைநீர் சேகரிப்பு குறித்து பள்ளி புத்தகங்கள், விளம்பரங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தொடர்ந்து அறிவுரை வழங்கி வரும் நிலையில், இப்படி நீர்நிலைகள் மாசுபடக்கூடிய சூழல்கள் கண்டுகொள்ளப்படாமல் உள்ளன.

ஆற்றில் கலக்கும் நீர் கழிவுநீராக உறுதியானால், மழைக்காலத்தில் வெள்ள நீருடன் இது கலக்கும் சாத்தியம் உள்ளது என்று பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

`10 லட்சம் விதைப்பந்துகள் இலக்கு’ - வேலூர் மலைகளைப் பசுமையாக்க ஆர்வம் காட்டும் மென்பொருள் பொறியாளர்

வேலூர் சத்துவாச்சாரி அருகேயுள்ள ரங்காபுரத்தில் வசித்து வருபவர் தினேஷ் சரவணன். மென்பொருள் பொறியாளரான இவர்... கோடைக்காலத்தில் பறவைகளின் தாகம் தணிக்கத் தனித்துவமான ஏற்பாடு செய்தல், ஏரிக்கரைகளில் பனை விதை... மேலும் பார்க்க

கோவை அருகே ரயில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பு – யானைகள் தினத்தில் நடந்த சோகம்!

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு – கேரளம் எல்லைப்பகுதியான வாளையார் வனப்பகுதி வழியாக கேரளத்திற்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியில் 4 யானைகள் கொண்ட ஒரு யானை... மேலும் பார்க்க

புனித நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றம்... அமலைச் செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பழநி சண்முகநதி!

பழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதி மேலும் பார்க்க

ஒரு மனிதன், ஒரு லட்சம் மரங்கள் - விவேக் விதைத்த கனவை நனவாக்கும் விழுப்புரம் சசி ராஜா

ஒரு நாட்டின் உண்மையான செல்வம் என்பது பணமும் கட்டடங்களும் அல்ல; நம்மைச் சுற்றியுள்ள பசுமையும், நாம் சுவாசிக்கும் சுத்தமான காற்றும்தான். ஆனால், நவீன நாகரிகத்தின் வளர்ச்சி என்ற பெயரில் நாம் நாள்தோறும் வெ... மேலும் பார்க்க

Elephant Day: வாழிடமும், வழித்தடமும் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே இந்தப் பேருயிர்களைக் காக்க முடியும்!

சம காலத்தில் நிலத்தில் வாழ்ந்து வரும் மிகப்பெரிய உயிரினமான யானைகள் அழிந்து வரும் பட்டியலில் உள்ளன. சூழலியல் பாதுகாப்பில் அளப்பரிய பங்காற்றி வரும் யானை இனத்தைப் பாதுகாக்க உலக அளவில் பல்வேறு முயற்சிகளை ... மேலும் பார்க்க

`அகழியையே வழித்தடமாக மாற்றிக்கொண்ட வைரல் யானைகள், குழப்பத்தில் வனத்துறை!' என்ன நடக்கிறது கூடலூரில்?

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது நீலகிரி மாவட்டத்தின்‌ கூடலூர். அதேவேளையில் நாட்டில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளிலும் முக்கிய இடத்தில் இருக்கிறது.... மேலும் பார்க்க