செய்திகள் :

சென்னை: குழந்தையை கொலை செய்த அம்மா கைது; காதலன் சிக்கிய பின்னணி!

post image

சென்னையை அடுத்த எண்ணூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு கடந்த 24-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனால் அந்தப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் சென்றார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. தனக்கு திருமணமாகாத நிலையில் குழந்தையை மருத்துவமனையில் பெற்றேடுத்தால் சிக்கல் எனக் கருதிய அந்த இளம்பெண் அங்குள்ள கழிவறைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு அங்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதையடுத்து கழிவறைக்குச் சென்ற இளம்பெண், நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் மருத்துவமனை ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மயங்கிய நிலையில் இளம்பெண்ணும் உயிரிழந்த நிலையில் குழந்தையும் அங்கு கிடந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் மருத்துவமனை ஊழியர்கள்.

கைது

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், உயிரிழந்த குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயக்கம் தெளிந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் அந்த இளம்பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்ற தகவல் தெரியவந்தது. மேலும் இந்தக் கர்ப்பத்துக்கு சந்தோஷ் என்ற இளைஞர் காரணம் என போலீஸாருக்கு தெரிவந்தது. உடனடியாக அவரைப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸார் கூறுகையில், ``பிரேத பரிசோதனையில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருப்பதும் குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. அதுதொடர்பாக குழந்தையின் அம்மாவிடம் விசாரித்தோம். அப்போது திருமணமாகாமல் குழந்தையை பெற்றெடுத்தால் சிக்கல் வரும் எனக் கருதி குழந்தையை கழிவறைக்குள் போட முதலில் முயற்சி செய்தபோது காயங்கள் ஏற்பட்டதாகக் கூறியிருக்கிறார். இதையடுத்து குழந்தையை கொலை செய்த குற்றத்துக்காக அந்தப் பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். இதற்கிடையில் குழந்தையை பெற்றெடுத்த இளம்பெண், சிறுமியாக இருக்கும்போதே அவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக போக்சோ வழக்கில் சந்தோஷை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.

கும்பகோணம்: 3 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை; உடலில் கடித்த பைனான்சியர்... பதறவைத்த தாயின் செயல்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ்(32) பைனான்ஸ் நிறுவனம் மூலம், சுய உதவி குழு நடத்தி வருகிறார். இக்குழுவில், அதே பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவர் வச... மேலும் பார்க்க

அரியலூர்: நள்ளிரவில் மது அருந்திய போதை ஆசாமிகள் - எச்சரித்த போலீஸாரை கடுமையாக தாக்கியதால் அதிர்ச்சி!

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள தளவாய் காவல் நிலையத்தில், ராஜாகண்ணு போலீஸாகவும், வெங்கடேசன் (47) ஊர்க்காவல் படை வீரராகவும் பணி புரிகின்றனர். இருவரும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக... மேலும் பார்க்க

திருவள்ளூர்: இளைஞர் கொலை; கடற்கரையில் சடலம் புதைப்பு - துப்பு துலங்கியது எப்படி?

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மனைவி எழில்செல்வி. இவர் சென்னையில் உள்ள பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் வேலை செய்து வருகிறார். இந்தத் தம்பதியின் மகன... மேலும் பார்க்க

சிவகங்கையில் மீண்டும் கொலை: மானாமதுரையில் பட்டப்பகலில் காதுகளை அறுத்து 8 பவுன் நகை கொள்ளை!

சுள்ளான் மதன் விவகாரம் மற்றும் ரவுடி கும்பலின் அடுத்தடுத்த தொடர் கொலைகளால் சிவகங்கை மாவட்டமே நிலைகுலைந்து போயுள்ளது. இதன் பரபரப்பும் அச்சமும் பொதுமக்கள் மனதிலிருந்து இன்னும் அகலாத நிலையில், சிவகங்கையி... மேலும் பார்க்க

விழுப்புரம்: மது போதையில் மனைவியுடன் தகராறு - ஆறு வயது மகனை கிணற்றில் வீசி கொலைசெய்த தந்தை கைது!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்திருக்கும் நல்லான் பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் - தேவி தம்பதி. இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். கடைசிக் குழ... மேலும் பார்க்க

விழுப்புரம்: `கழுத்தை நெரித்து போட்டுட்டேன்' - தந்தையால் பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த சோகம்

விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்திருக்கும் வி.பரங்கனி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான சிவசாத்திரிக்கு, இரண்டு மகள்கள். இளைய மகள் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் இருக்கும் தன்னுடைய பாட்டி வீட்டில... மேலும் பார்க்க